Ramachandran’s ‘Chennai to Madras’ Book Launch.; ஊரடங்கு பாதிப்பு – விஜய்சேதுபதி.; ஊரடங்கு பழகிட்டு – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் சென்னைவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை உருவானதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை தினம் நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு சென்னையின் பெருமையை பேசும் அரிய படங்களை தன் கேமரா கண்களில் படமாக்கியுள்ளார் பிரபல ப்ளேபாய் போட்டோகிராபர் எல். ராமசந்திரன். இவர் சென்னையை சேர்ந்தவர்.

சென்னையின் அழகியல் பேசும் புகைப்படங்கள் கொண்ட ‘சென்னை டூ மெட்ராஸ்’ புகைப்பட புத்தக வெளியீட்டு விழாவை பிரபலங்கள் முன்னிலையில் நடத்தியுள்ளார்.

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கின் போது பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் எடுத்த புகைப்படங்கள் புத்தகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் மூத்த பத்திரக்கையாளர் என்.ராம், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பார்திபன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

புகைப்பட புத்தக தொகுப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது…

சென்னை பற்றிய போட்டோக்களை பார்கும்போது சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? என வியக்கிறேன்.

அறிவுதான் கடவுள் எனவும் அறிவின் பார்வை முக்கியமானது எனவும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் கொரோனா ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டும் மீண்டுவரவேண்டும் எனவும் பேசினார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில்…

இப்போது கொரோனா ஊரடங்கு அனைவருக்கும் பழகிவிட்டது.

நல்ல செய்தியை ஊடகங்கள் முந்தி தருவதில் தவறில்லை.

ஆனால் துக்க செய்தியை யார் முந்தி தருவது என போட்டி வேண்டாம்.

துக்க செய்திகளை நிதானமாக தரவேண்டும்.

ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் அருமையாக பயன்படுத்தியுள்ளார் எல் ராமசந்திரன். வாழ்த்துகள்.” என பேசினார் பார்த்திபன்.

நண்பர் எஸ்.பி.பி.நலமுடன் திரும்பி வருவார்: எடிட்டர் மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். பி .பி யின் உடல் நலம் குறித்து பிரபல தயாரிப்பாளரும், டைரக்டர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி அப்பாவுமான எடிட்டர் மோகன் கூறியுள்ளதாவது,

‘எஸ் .பி .பாலசுப்ரமணியமும் நானும் நீண்ட நாளைய நண்பர்கள்.அவருடைய இந்த நிலை என்னை மிகவும் வருந்தச் செய்துள்ளது.அவருக்கும் எங்களுக்குமான உறவு 1975 முதல் இன்றுவரை நிலைத்திருக்கிறது.எங்களது நட்பு குடும்ப உறவாக வளர்ந்திருக்கிறது.

என்னுடைய எல்லா மொழி மாற்றுப் படங்களுக்கும் என்னுடைய நேர்முகப் படங்களுக்கும் அவர் பாடல்கள் பாடியிருக்கிறார்.அவர் பாடல்கள் இல்லாத படங்களே கிடையாது.என்னுடைய மொழிமாற்றுப் படங்களுக்கு நாயகனுக்கு அவர்தான் வசனங்கள் பேசுவார் .எல்லா படங்களும் வெற்றி அடைந்துள்ளன. அதோடு என்னுடைய படங்களின் பூஜைகளை அவருடைய கோதண்டபாணி தியேட்டரில்தான் வைத்துக் கொள்வேன். அதில் எனக்கு ஒரு ஆனந்தம். நிச்சயமாக எனக்கு வெற்றி கிடைக்கும்.
இதுவரையில் அப்படி எல்லாப் படங்களும் எனக்கு வெற்றிபெற்றுள்ளன. அதோடு அவருடைய டெக்னீசியன்கள், அவருடன் வேலை செய்பவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். இன்று அதையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் மிகுந்த வேதனை அடைகிறது .அதோடு என்னுடைய மகன் ஜெயம் ரவியை வைத்து அவர் ‘ மழை ‘என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இப்படி எங்களுக்குள் உறவுகள் நீண்டு கொண்டே போகிறது. இன்றும் நான் ஒவ்வொரு நாளும் அவருடைய மகனான சரணிடம் அவருடைய நிலையை அறிந்து கொண்டுதான் இருக்கிறேன். என் மனம் மிகவும் வருத்தத்தில் உள்ளது. நிச்சயமாக எனது நண்பர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மீண்டும் வந்து நலமாக வந்து எங்களுடன் கைகோர்த்து வேலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .அந்த நம்பிக்கையைக் கடவுள் கொடுப்பார் என்று நம்புகிறேன். நிச்சயமாக நம்புகிறேன்.’
இவ்வாறு எடிட்டர் மோகன் கூறியுள்ளார்.

32000 பேர் உதவி கேட்டு காத்திருப்பு..; உதவிக்கரம் நீட்டும் சோனுசூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் நாம் சினிமாவில் ரசித்த ஹீரோக்கள் யார்? நிஜ ஹீரோக்கள் யார்? என்பது மெல்ல மெல்ல தெரிய வந்துள்ளது.

தங்கள் உயிரை பயணம் வைத்து மருத்துவர்கள் பணியாற்றி வருகீன்றனர்.

இந்த நிலையில் ரியல் ஹீரோ நடிகர் சோனுசூட் தற்போது ரியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

தன்னால் முயன்ற எல்லா உதவிகளையும் செய்து வருகிறார் சோனு.

மகள்களை மாடாக்கி விவசாயம் செய்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். மேலும் ஏழைக்குழந்தைகளைத் தத்தெடுத்தது உள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களையும் மாணவர்களையும் இந்தியா அழைத்துவர விமான செலவை ஏற்றுக்கொண்டார்.

கேரளாவில் சிக்கித்தவித்த பீஹார் மாநில ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு விமானம் ஏற்பாடு செய்தார்.

இதனையடுத்து பழங்குடியினப் பெண்ணுக்கு வீடும், கர்நாடகாவில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு காய்கறிக் கடையும் வைக்க உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில்தான், இதுவரை 32 ஆயிரம் பேர் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்னால், முடிந்தவரை உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

விஜய்-முருகதாஸ் இணையும் தளபதி 65 பட அறிவிப்பு எப்போது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ படங்களைத் தொடர்ந்து விஜய், ஏஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

இந்த படம் விஜய்யின் நடிப்பில் 65 படமாக உருவாகவுள்ளதால் இதை தளபதி 65 என்று அழைக்கின்றனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தமன் இசையமைக்கவுள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள தகவல்படி முருகதாஸ் ஸ்கிரிப்புடன் தயாராக உள்ளாராம்.

விஜய்யின் சம்பள விவகாரத்தையும் பேசி முடித்துவிட்டார்களாம்.

எனவே விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகலாம்.

அது ‘துப்பாக்கி 2’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பவன் கல்யாண்-விஜய்சேதுபதி கூட்டணியில் ‘ஐயப்பனும் கோஷியும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்ய பல மொழி இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த படத்தில் பிரித்விராஜ்-பிஜுமேனன் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

எனவே இவர்களின் கேரக்டரில் நடிக்க சிறந்த நடிகர்கள் வேண்டும் என தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கில் பவன் கல்யாண் இப்படத்தில் நடிக்க விரும்புகிறார் என தகவல் வந்துள்ளது.

பிஜுமேனன் நடித்த அய்யப்பன் நாயர் என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்க பவன் கல்யாண் விரும்புகிறாராம்.

பிரித்விராஜ் கேரக்டரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

வரும் செப்டம்பர்-2ஆம் தேதி பவன் கல்யாண் பிறந்தநாளன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வமான வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதியின் தர்மதுரை 2 & 4 படமும் ரெடி.; RK சுரேஷ் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா, சௌந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’.

யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது.

இதில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய ‘எந்தப் பக்கம் பார்க்கும் போதும்’ பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றது.

தற்போது படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில்…

“இன்று ஆகஸ்ட் 19. தர்மதுரை திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது. சீனுராமசாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் விரைவில் தர்மதுரை 2 -ம் ரெடியாக இருக்கிறது.

தர்மதுரை போன்றே அதையும் பாசிட்டிவ்வான இளைஞனின் கதையாக சீனுராமசாமி உருவாக்குவார். அதையும் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெளியிடும் என்று கூறிக் கொள்கிறேன்.

மேலும் 4 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows