இயக்குனராக மாறிய புரொடக்சன் மேனேஜர்.; ‘என்ஜாய்’ மூலம் எச்சரிக்கை

இயக்குனராக மாறிய புரொடக்சன் மேனேஜர்.; ‘என்ஜாய்’ மூலம் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்.என்.எச். கிரியேசன், லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்’.

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்க பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை.

இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும்.

சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும்.

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி.

பல படங்களுக்கு புரொடக்சன் மேனேஜராக பணியாற்றிய பெருமாள் காசி ‘என்ஜாய்’ படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

ஒளிப்பதிவு –
KN அக்பர்,

இசை – KN ரயான் .

எடிட்டர் – மணி குமரன்.

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

பாடல்கள் – விவேகா, உமாதேவி.

நடனம்- தினேஷ்.

சண்டை- டேஞ்சர்மணி

கலை- சரவண அபிராமன்.

நடிகர்கள்-

மதன்குமார்,
டான்சர் விக்னேஷ்,
ஹரீஸ்குமார்,
நிரஞ்சனா,
ஜீவி அபர்ணா,
சாய் தன்யா,
ஹாசின்,
சாருமிசா.

என்ஜாய்

perumal kasi turned Director of enjoy movie

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் துவங்கி டிசம்பர் 22 வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள் வரிசை இதோ..

ஆதார்,
பிகினிங்,
கார்கி,
இரவின் நிழல்,
கசடதபற,
பபூன்,
கோட் Goat,

இறுதிபக்கம்,
மாமனிதன்,

நட்சத்திரம் நகர்கிறது,
ஓ 2,
யுத்த காண்டம்,

ஆகிய 12 தமிழ் படங்கள் சென்னை திரைப்பட விழாவில் போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

12 Tamil movies selected for Chennai internation Film Festival

Tamil Film Competion List and Indian Panoram screening List்

எதிர்காலத்தில் கல்வியின் நிலை.? லிங்கேஷ் நடிக்கும் படத்திற்கு ரஞ்சித் பாராட்டு

எதிர்காலத்தில் கல்வியின் நிலை.? லிங்கேஷ் நடிக்கும் படத்திற்கு ரஞ்சித் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன் மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’.

கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிற படமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கமர்ஷியலான படமாகவும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங்.

இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் பா. இரஞ்சித்.

இந்த படத்தை பார்த்த கல்லூரி மாணவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

PVR இந்த படத்தை வெளியீடு செய்கிறார்கள்.

டிசம்பர் 30 படம் வெளியாகிறது.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஜெய்ப்பூர் கோட்டையில் சிந்தி முறைப்படி காதலனை கரம்பிடித்தார் ஹன்சிகா (படங்கள்)

ஜெய்ப்பூர் கோட்டையில் சிந்தி முறைப்படி காதலனை கரம்பிடித்தார் ஹன்சிகா (படங்கள்)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி.

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சிம்பு நடித்த ‘மகா’ திரைப்படம் ஹன்சிகாவின் 50 வது படமாகும்.

ஹன்சிகா மோத்வானி

சினிமா துறை மட்டுமின்றி இவர் சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தன் காதலனை வெளி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி ஹன்சிகாவிற்கும் அவரது காதலர் சோஹேல் கதுரியாவுக்கும் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஹன்சிகா மோத்வானி

இதற்கான நிகழ்வு கடந்த ஓரிரு தினங்களாகவே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் நடந்து வருகிறது.

டிசம்பர் 2 தேதியிலிருந்து.. முதல் நாளில் மருதானி வைக்கும் நிகழ்வும், 2வது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

ஹன்சிகா மோத்வானி

நேற்று டிசம்பர் 4 காலையில் மஞ்சள் வைக்கும் சடங்கு நடந்தது. அதனை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு ஹன்சிகா மெரூன் கலர் லெஹங்காவும் நிறைய தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தார்.

தனது சோசியல் மீடியா பக்கத்தில் திருமண சடங்கு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி

எனவே ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ஹன்சிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவுக்கு அழைத்துள்ளார் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா மோத்வானி

Hansika Motwani-Sohael Khaturiya are married

நடிகை மஞ்சுவுக்காக ‘துணிவு’ பட கதையை மாற்றிய இயக்குநர் வினோத்

நடிகை மஞ்சுவுக்காக ‘துணிவு’ பட கதையை மாற்றிய இயக்குநர் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்க முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

விரைவில் ‘துணிவு’ படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து பேசி வருகிறார் இயக்குனர் வினோத்.

அவரின் பேட்டியில்… “துணிவு படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சு வாரியாரை அணுகினோம். அப்போது அவர் வழக்கமான வேடங்களை செய்து விட்டேன்.

கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டர் என்றால் நான் பணிபுரிய தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார். எனவே மஞ்சுவுகாக சில மாற்றங்களை படத்தில் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கவில்லை. அவர் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் வைரவனின் குடும்பத்துக்கு உதவும் ‘கட்டா குஸ்தி’ நாயகன்

மறைந்த நடிகர் வைரவனின் குடும்பத்துக்கு உதவும் ‘கட்டா குஸ்தி’ நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ மற்றும் ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரி வைரவன்.

அதன்பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் இவர் இருந்து வந்துள்ளார்.

இதனிடையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஓரிரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.

இவருடன் பணியாற்றிய நடிகர் அப்பு குட்டி இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மேலும் நேற்று டிசம்பர் 4ல் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘கட்டா குஸ்தி’ பட வெற்றி விழாவில் கலந்து கொண்டார் விஷ்ணு விஷால்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது…

“வைரவன் என்னை மச்சான் என்று தான் அழைப்பார். அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பேன்.

கடந்த ஆறு மாதமாக அவரது குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பு கூட அவர் எனக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் மரணம் அடைந்துள்ளார் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை நான் ஏற்பதாக குடும்பத்தாரிடம்உறுதி அளித்து இருக்கிறேன்”

இவ்வாறு பேசினார் விஷ்ணு விஷால்.

More Articles
Follows