தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இளையராஜா இசையமைத்துள்ள இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசியதாவது…
“நான் என் வாழ்க்கையில ரெண்டே பேர பாத்துதான் பொறாமைப்படுறேன்.
என்னையும் ஒரு பெண் காதலித்தாள். ஆனால் எங்க மேரேஜ் நடக்கல.
இப்போ அவளோட புருசன பாத்து நான் பொறாமைப்படுறேன்.
அதுப்போல் இப்போது இளையராஜாவையும் பார்த்து பொறாமைப்படுறேன்.
இளையராஜாவின் இசையை கேட்டால் எவ்வளவு நீண்ட பயணம் வேண்டாலும், போரடிக்காமல் பயணிக்கலாம்.
ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இசைஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது” என்று பேசினார் பேரரசு.
