‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி மகளாக நடிக்க ரூ.10 லட்சம் வசூலித்த நபர்கள்

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி மகளாக நடிக்க ரூ.10 லட்சம் வசூலித்த நபர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை கடலோரப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக கூறி சில நபர்கள் மோசடி செய்துள்ளனர்.

அது பற்றிய விவரம் வருமாறு..:

பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற இருவர், `நாங்கள் வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் என பொய் சொல்லி நிலேஷா (21) என்ற மும்பை பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி போலி ஆவணங்களை காண்பித்துள்ளனர்.

மேலும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களை கூறி பணம் வேண்டும் என தெரிவித்து அப்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை வாங்கியுள்ளனர்.

அதன்பின்னர் இரண்டு பேரும் தலைமறைவாகிவிடவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் நிலேஷா.

பண மோசடியால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

எனவே இந்த வழக்கை மும்பை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

போலீசாரின் விசாரணையில்… “ஏற்கனவே வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற இதே பெயரில் உள்ள கம்பெனி பெயரை பயன்படுத்தி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த கம்பெனி கடந்த 10 ஆண்டுகளாக பல தெலுங்குப் படங்களை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை தியேட்டருக்கு கொண்டுவரும் இயக்குனர்கள் அதிகமாகி விட்டனர்.; ‘இரட்சன்’ மீட்டிங்கில் நாகர்ஜுனா பேச்சு

மக்களை தியேட்டருக்கு கொண்டுவரும் இயக்குனர்கள் அதிகமாகி விட்டனர்.; ‘இரட்சன்’ மீட்டிங்கில் நாகர்ஜுனா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரட்சன் – தி கோஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் குழுவினர்கள் பேசியதாவது:

எழுத்தாளர் அசோக் பேசும்போது,

இப்படத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தது நான் தான். முதலில் இந்த வாய்ப்பு கிடைத்ததும் பயம் இருந்தது. ஆனால், போனப் பிறகு சந்தோஷமாக இருந்தது. அதே மாதிரி தான் படமும் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். கமர்ஷியலாக மாஸாக, எந்தளவிற்கு சிறந்த பொழுதுபோக்கான படமாக கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாகார்ஜுனா சாருக்கு நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் முகேஷ் பேசும்போது…

இந்த படத்தில் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. பெரிய நடிகர்களுடன் பணியாற்றுவது வரம் 2வது கொரானாவிற்கு முன்னரே ஆரம்பித்து பெரிய சவால்களை சந்தித்து இன்று திரையரங்கிற்கு எடுத்து வந்திருக்கிறோம். சிறுவயதில் நானும் சென்னைவாசி தான். தமிழில் நாகார்ஜுனா சாருக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த இரண்டு வருடங்களில் என்னுடைய குடும்பம், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் முதல் என்னிடம் நாகார்ஜுனா சாரைப் பற்றி கேட்டது தான் அதிகம். அவருடைய அன்பை நான் நன்கு அறிந்துகொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் பார்த்து ரசித்த கதாநாயகன். இன்று அவரை ஒளிப்பதிவு செய்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இயக்குநர் பிரவீனுடன் எனக்கு 4வது படம் இதற்கு முன் 3 படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.

ஆகையால், எங்களுக்குள் புரிதல்கள் அதிகம் இருக்கும். இப்படத்திற்கு பிறகும் அவருடன் இன்னொரு படத்தில் பணியாற்ற போகிறேன். டீஸர் வெளியானதில் இருந்து இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. டீஸர் மற்றும் டிரைய்லரில் பார்த்ததைவிட படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நாயகி சோனல் சௌகான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். நாகார்ஜுனா சாருக்கு சமமாக சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். அதுவும் டூப் இல்லாமல் செய்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். படம் பார்க்கும்போது நீங்களும் ரசிப்பீர்கள். சரத் சார் பிற மாநிலத்திற்கு ஈடாக வெளியீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

நடிகை சோனல் சௌகான் பேசும்போது…

இந்த அருமையான வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழில் இப்படம் வருகிறது. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கதாபாத்திரம் சவாலாகவும், திருப்தியாகவும் இருந்தது. தமிழ் சினிமா எப்போதும் தரமான படங்களை கொடுக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் – 1 மிகவும் நன்றாக இருந்தது.

நாகார்ஜுனா சார் என்னை ஊக்கப்படுத்தவில்லையென்றால் இந்தளவிற்கு என்னால் நன்றாக நடித்திருக்க முடியாது. சரத் சார், ராம்மோகன் ராவ் சார், இயக்குநர் பிரவீன் சாருக்கு நன்றி. என்னைப் பாராட்டிய முகேஷ் சார் வார்த்தைகளுக்கு நன்றி. என்றார்.

இரட்சன்

தயாரிப்பாளர் சரத் பேசும்போது…

இப்படத்தை பிரவீன் நன்றாக எடுத்திருக்கிறார். நாகார்ஜுனா சார் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். தினேஷ் சுப்பராயன் மற்றும் கிச்சாவும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். பரத் சௌரப் மற்றும் மார்க்கே ராபின் இசையமைப்பாளர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு தமிழ் பையன் முகேஷ் காட்சிகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

சுனில், சரத், புஷ்கூர் ராம் ஆகியோருக்கு நன்றி. தமிழில் விநியோகிக்கும் டிரீம் வாரியர் பிரபுவிற்கு நன்றி.

சோனி மியூசிக் இப்படத்தின் ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என்றார்.

இயக்குநர் பிரவீன் பேசும்போது,

இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான படம். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் உணர்வுபூர்வமானவர்கள். நான் சேலையூர், தாம்பரம் கல்லூரியில் தான் பொறியியல் படித்தேன். அப்போதே தமிழ் மக்களிடம் இருக்கும் உணர்வுகளும், அன்பும் மிகவும் பிடிக்கும்.

இந்த படத்திற்காக நாகார்ஜுனா சாரை சந்திக்கும் போது அவரை திரையில் இப்படித்தான் காண வேண்டும் என்று நினைத்திருந்தேன். நாகார்ஜுனா சார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். தயாரிப்பாளர் சரத் சார் எங்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார். சோனல் சௌகான் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

2ஆவது மற்றும் 3ஆவது கொரோனா காலகட்டத்தில் சரத் சார் உறுதுணையாக இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை துபாய், ஊட்டி போன்ற இடங்களில் எடுத்தோம். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி என்றார்.

இரட்சன்

நடிகர் நாகார்ஜுனா பேசும்போது,

நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது.

கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன். சென்னையில் எல்லா இடங்களும் எனக்கு பரிச்சயம் தான்.

மணிரத்னம் சாரை மணி என்று தான் அழைப்பேன். பொன்னியின் செல்வன் – 1 படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள்.

பொன்னியின் செல்வன் மிக பெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கார்த்திக்கு வாழ்த்துக்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

நான் தமிழில் ரட்சகன் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தின் மூலம் பிரபலமடைந்தேன்.

இரட்சன்

அவருடன் கீதாஞ்சலி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. பொன்னியின் செல்வன் – 1 படத்தில் ஐஸ்வர்யா, கார்த்தி, விக்ரம் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

உதயம் படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ரட்சகன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான தோழா படமும் வெற்றியடைந்தது.

தோழா படத்தில் கார்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்படத்தை மக்கள் கொண்டாடினார்கள். விமர்சனங்களும் நன்றாக கொடுத்திருந்தார்கள். அதேபோல் பயணம் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

முதலில் இரட்சன் படத்தை தமிழில் வெளியிட யோசனை இல்லை. பிற மொழிகளில் வெளியிட வேண்டும் என்று யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம்.

அதற்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுத்த அசோக் அவருக்கு நன்றி. தமிழில் நான் தான் டப்பிங் பேசி இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பிற்கு உதவிகரமாக இருந்தார். இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவிற்குப் பிறகு சமீபகாலமாகத்தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள்.

மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் இயக்குநர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் பிரவீன். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனத்தை பிரவீனும், சண்டைக் காட்சிகளை தினேஷும் சொல்லிக் கொடுத்தார்கள். ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.

சாமுராய் கத்தி வைத்து சண்டையிடும் காட்சிகள் உள்ளது. அதற்காக பயிற்சிகள் மேற்கொண்டோம். இப்படத்தில் நடனக்காட்சியை சண்டை கலந்த ஒரு நடனமாக அமைத்துள்ளோம். நிச்சயம் அது புதுமையான ஒரு அனுபவத்தை தரும் என்றார்.

இரட்சன்

Ratchan The Ghost movie press meet

தமிழகத்தில் மனிதக் கறி.. ‘பவுடர்’ ட்ரைலர் நீக்கம்.; வீழ்த்த நினைத்தவர்களுக்கு விஜய்ஸ்ரீ பதிலடி

தமிழகத்தில் மனிதக் கறி.. ‘பவுடர்’ ட்ரைலர் நீக்கம்.; வீழ்த்த நினைத்தவர்களுக்கு விஜய்ஸ்ரீ பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, ஆதவன், அனித்ரா நாயர், வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ், முத்து, ராமராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த வருகின்றனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்து வருகிறார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அன்றைய தினம் மாலை பவுடர் படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியானது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக இந்த படத்தில் இடம் பெற்றது மனிதக்கறி வேட்டை.

வட இந்தியாவில் அகோரிகள் மத்தியில் மனிதக்கறி என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளார் விஜயஸ்ரீ.

இதற்கு சில நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த ட்ரெய்லர் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

பின்பு விஜய் ஸ்ரீ இதற்கான விளக்கம் அளித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பவுடர் படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து விஜய் ஸ்ரீஜி.யிடம் பேசியபோது.. “என்னை வீழ்த்த நினைப்பவர்களுக்கு… சிறிது நேரம் வீழ்ந்தேன் பின்பு மலையேற உயர்ந்தேன் என ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்தார்.

Here’s #Powder official trailer

https://www.filmistreet.com/video/powder-official-trailer/

Human Meat issue Powder Trailer removed Vijay Sri Statement

தல ரசிகர்கள் மீது விஜய் சேதுபதி கோபம்

தல ரசிகர்கள் மீது விஜய் சேதுபதி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் தனது உரையின் போது கேட்கும் திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “செல்வத்தில் செல்வம் செவி செல்வம்…” என்று மேற்கோள் காட்டினார், இது “செல்வத்துள் எல்லாம் தலை” என்று முடிவடைகிறது.

“தலை” என்ற வார்த்தையைப் பற்றிக் கொண்ட மாணவர்கள் சிலர், “தல” என்று கத்த ஆரம்பித்தனர்.

சைகை மூலம் வெளிப்படையாக வருத்தப்பட்ட விஜய் சேதுபதி பேச்சைத் தொடர்வதற்கு முன், அவரது விரக்தியைக் காட்டினார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் ரஜினியுடன் ‘தர்பார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, விஜய் உடன் ‘சர்க்கார்’ சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

மைக் மோகன் உடன் ஹரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்த வருகிறார்.

இவர் நடித்த ‘மண்டேலா’ படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த அவதாரமாக கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார் யோகி பாபு.

இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியன் என்பவர் இயக்குகிறார். லெமன் லீஃப் நிறுவனத்தின் இது மூன்றாவது படைப்பாகும்.

இந்த படத்தின் பூஜை இன்று அக்டோபர் 3ல் நடைபெற்றது.

அடுத்தது என்ன இயக்குனர் தானே யோகி பாபு.?

யோகி பாபு

.@iYogiBabu is all set to star in #LemonLeafProductions ‘Production No.3’ for which he has written the story, screenplay and dialogues!

Directed by
#RameshSubramaniam kickstarted with a pooja that took place at a #MuruganTemple yesterday!

#YogiBabu
@RIAZtheboss l #filmistreet https://t.co/OOiRkpma95

Yogi Babu writes story screenplay dialogue and acts

சூரியா மற்றும் ஜோதிகாவின் பிள்ளைகள் தேவ் மற்றும் தியா ஃபேமிலி கிளிக் வைரல்

சூரியா மற்றும் ஜோதிகாவின் பிள்ளைகள் தேவ் மற்றும் தியா ஃபேமிலி கிளிக் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

68 வது தேசிய திரைப்பட விருது விழாவில், சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்த சூரரைப் போற்று சிறந்த திரைப்படத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

விழாவின் புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நட்சத்திர ஜோடி தங்களது பெரிய வெற்றியை தங்கள் மகள் தியா மற்றும் மகன் தேவுடன் கொண்டாடினர்.
“பெருமையும் ஆசீர்வாதமும்” என்று ஜோதிகா அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

சூர்யா, ஜோதிகா வீட்டில் இரட்டைக் கொண்டாட்டங்கள் நடக்கும் நேரம் இது.

More Articles
Follows