45 லட்சம் கொடுத்தார்.. காலில் விழுந்தார் ரஜினி..; பெத்தராயுடு பெருமை பேசும் மோகன்பாபு

Pedarayudu turns 25 Mohan babu reveals about Rajinis helpகே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இரு வேடங்களில் சரத்குமார் நடித்த படம் ‘நாட்டாமை’.

குஷ்பூ, மீனா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் நடித்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்தது.

இதன் வெற்றியை பார்த்த ரஜினி தெலுங்கில் ரீமேக் செய்ய நண்பர் மோகன் பாபுவிடம் கூறியுள்ளார்.

“தமிழ்ப்படம் நாட்டாமை பார்த்தியா.? சரத்குமார் நடிச்ச ஹிட் படம். அதை ரீமேக் பண்ணு.. நான் கெஸ்ட் ரோல்.. உனக்கு அப்பாவா ஆக்ட் பண்றேன்னு சொல்லிருக்கார்.

தெலுங்கில் ‘பெத்தராயுடு’ என்ற பெயரில் ரஜினி-மோகன்பாபு நடிப்பில் ரிலீசாகி இன்றோடு 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

ரவிராஜா பினி செட்டி என்பவர் இயக்கியுள்ளார்.

படம் உருவாகும் போதே பைனான்ஸ் பிரச்னை வந்துள்ளது. எனவே மோகன்பாபுக்கு ரூ 45 லட்சம் கொடுத்து படத்தை முடிக்க உதவியிருக்கிறார் ரஜினி.

பூஜை அன்றே ஓப்பனிங் ஷாட் நடைபெற்றுள்ளது. என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கதைப்படி அப்பாவான ரஜினிக்கு மோகன் பாபு மாலை போட்டுள்ளார்

ஆனால் எதிர்பாரா விதமாக அதே மாலையை மோகனுக்கு போட்டு அவர் பாதம் தொட்டு வணங்கியிருக்கிறார் ரஜினி.

அந்த போட்டோவை இன்னமும் பத்திரமா வைத்துள்ளார்.

இப்படியாக பெத்தராயுடு பெருமை பேசி நெகிழ்ந்துள்ளார் மோகன் பாபு..

நன்றி : தேவிமணி

Pedarayudu turns 25 Mohan babu reveals about Rajinis help

Overall Rating : Not available

Latest Post