ஆதாயத்திற்காக அல்ல.. ஆத்ம திருப்திக்காக சினிமாவில் களமிறங்கிய கணேஷ் தேசிங்

ஆதாயத்திற்காக அல்ல.. ஆத்ம திருப்திக்காக சினிமாவில் களமிறங்கிய கணேஷ் தேசிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் தமிழ்சினிமா பல்வேறு ஆளுமைகளை கண்டுள்ளது. சரியான திறமைகளோடு வருபவர்களை சரியான நேரத்தில் உச்சத்தில் வைத்து அழகு பார்த்திக்கிறது நமது தமிழ்சினிமா.

அந்த வகையில் நேர்த்தியான பார்வையோடு தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கிறார் கணேஷ் தேசிங்.. பெயரில் எதோ வடநாடு சாயல் இருப்பது போல் தெரியும் கணேஷ் தேசிங் நமது விருதுநகர் காரர்.

பார்ப்பதற்கு தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல… தயாரிப்பாளராக..

யெஸ் மிகச்சிறப்பான கதையம்சங்களை தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில் பீஸ் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராக பங்கெடுத்துள்ளார் கணேஷ் தேசிங்..

இப்படத்தில் மலையாள சினிமாவின் முக்கிய முகம் ஜோதி ஜார்ஜ். நடித்துள்ளார். நடிப்பில் பல்வேறு விருதுகளை வென்ற பெருமைக்குரிய ஜோதிஜார்ஜ் நடிக்கும் படத்தை ஷன்பீர் இயக்கி இருக்கிறார்…

சினிமாவிற்கு வந்ததிற்கான காரணம் குறித்தும் தனது கேரியர் குறித்தும் கணேஷ் தேசிங் கூறியபோது…

“சினிமா இண்டஸ்ட்ரி மட்டும் அல்ல…எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்த படிப்பை கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும்/ இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நான் இன்ஜினீயர் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி பற்றிய ட்ரேடிங்கில் இருக்கிறேன்.

Udhaya Pharama என்ற பார்மஸ்ட்டிக்கல் கம்பெனியில் டைரக்டராக இருக்கிறேன். Bitrix global Corp என்று சொந்தமாக ஒரு கம்பெனியும் நடத்தி வருகிறேன். க்ரிப்டோ கரன்ஸி என்ற விசயம் இப்போது பெரிய டாபிக்காக வலம் வருகிறது.

அதைப்பற்றிய விவாதங்களும் விசாரணைகளும் அதிகம் வந்துள்ள நிலையில் நிறையபேர் அது சம்பந்தமாக தொடர்பு கொள்கிறார்கள்.

நான் சினிமாவிற்கு வந்தது ஆதாயத்திற்காக மட்டும் அல்ல.. ஆத்ம திருப்திக்காகவும் தான். திரைக்கலை மூலமாக நிறைய நல்லவற்றை நாம் விதைத்துச் செல்ல முடியும்.

அதனால் தான் படத்தயாரிப்பு என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

நிறைய தகுதி வாய்ந்த படைப்பாளிகள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது. எப்போதுமே வேலை செய்வதை விட வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமுண்டு.

அதனால் தான் இன்ஜினியர் படித்துவிட்டு ஐடி வேலைக்குச் செல்லாமல் வேலை கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் திறமையானவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் நிறையபேர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.

மேலும் பணம் அதிகம் புழங்கும் சினிமாவில் பணம் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் நிறைய பெற்ற என்னால் சரியாக நிர்வாகம் செய்ய முடியுமென நம்புகிறேன்.

அந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு கரம் கொடுப்பது போல எங்களின் முதல்படமான ‘பீஸ்’ வந்துள்ளது.

ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டரை தமிழில் விஜய்சேதுபதியும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் ரக்‌ஷன் ஷெட்டியும் வெளியிட்டு வாழ்த்தினார்கள்.

மேலும் நடிகர் ஜெய் அவர்களும் போஸ்டரை வெளியிட்டு பாராட்டினார். எனக்கு நடிக்கும் ஆர்வம் முன்னமே இருந்தாலும் தற்போது தான் அதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறேன்.

Madarase events என்ற மாடலிங் கம்பெனியின் co founder-ஆகவும் இருப்பதால் மாடலிங் துறையில் பெரிய பரிச்சயம் உண்டு. அந்த அனுபவமும் நடிப்பிற்கு பெரிதாக ஊக்கம் கொடுக்கிறது.

அந்த ஊக்கம் பிரகாசமான வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் கணேஷ் தேசிங்.

Peace hero Ganesh Desingh talks about his upcoming film

Tamil film peace

BREAKING சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி

BREAKING சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modiசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவரின் பேசியதாவது..

“மாணவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதில் எந்த சமரசமும் இருக்காது.

மன அழுத்த சூழலில் மாணவர்கள் இருக்கும் போது அவர்களை தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருக்கும் கவலை முடிவுக்கு வரப்பட வேண்டும்.

என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

CLASS 12 EXAMINATION UNDER CBSE IS CANCELLED

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலரை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்த தனுஷ்

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலரை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush (2)கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை இன்று ஜூன் 1-ம் தேதி காலை இணையங்களில் வெளியிட்டனர்.

இந்த டிரைலரை வெளியிட்ட தனுஷ் தன் ட்விட்டரில்..

“சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என் ட்வீட் செய்துள்ளார்.

இவ்வாறாக ஓடிடி தள ரிலீசில் தனக்கு விருப்பமில்லை. ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை மறைமுகமாக தந்திரமாக தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush about his upcoming film release in OTT

Biggest sensation on reality Television award.. விருதை திருப்பி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ பாலாஜி

Biggest sensation on reality Television award.. விருதை திருப்பி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji Murugadossமாடலிங் துறையில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.

இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பெண் ரசிகைகளை அதிகம் பெற்று தந்தது. ஷிவானி நாராயணனுடன் பாலாஜி செய்த ரொமான்ஸ் பெரிதாக பேசப்பட்டது.

இந்த 4-வது சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். பாலாஜி முருகதாஸ் இரண்டாமிடம் பெற்றார்.

இதனையடுத்து பிஹைண்ட் வுட்ஸ் கோல்ட் மெடல் என்ற விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதில் பாலாஜி முருகதாஸுக்கு விருது கொடுக்கப்பட்டது. அவரது பேச்சு ஒளிபரப்பாகவில்லை.

இந்த நிலையில்..

நான் விருது வாங்கியதையோ அல்லது நான் பேசியதையோ ஒளிபரப்பாத உங்களின் விருது எனக்கு எதற்கு?

“Biggest sensation on reality Television award”-ஐ திருப்பி தருவதாக பதிலடி கொடுத்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

விருது நிகழ்ச்சியின் போது, மேடையில் இருந்த பிஹைண்ட்வுட்ஸ் சேனல் ரிவியூவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரை பாலாஜி விமர்சித்து பேசியதே காரணம் என சொல்லப்படுகிறது.

Bigg Boss Balaji returns his Behind Woods award

E2svzcEVEAY-pGq

சாந்தினி பாலியல் புகார்.: முன்னாள் அமைச்சரை தேடும் போலீசார்.; நடிகை மீது புகார் கொடுத்த மணிகண்டன் மனைவி

சாந்தினி பாலியல் புகார்.: முன்னாள் அமைச்சரை தேடும் போலீசார்.; நடிகை மீது புகார் கொடுத்த மணிகண்டன் மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

E2ddTPLUYAETiUDமுன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார் நாடோடிகள் பட நடிகை சாந்தினி.

தனக்கு மூன்று முறை அமைச்சர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அரை நிர்வாண புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாக பேட்டியளி்தார்.

எனவே அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மணிகண்டனுக்கு சொந்தமான இடங்களில், போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினியை அறிமுகம் செய்து வைத்த பரணி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையில் சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்தவர் அருணுடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சாந்தினிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்.. “தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும் , மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளார் நடிகை சாந்தினி.

நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தற்போது்அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

EX minister Manikandan wife against Actress Chandini

தன் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய மகேஷ்பாபு..; நம்ம ஹீரோஸ் செய்வாங்களா.?

தன் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய மகேஷ்பாபு..; நம்ம ஹீரோஸ் செய்வாங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகரும்,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு.

இவரின் தந்தையுமான நடிகருமான கிருஷ்ணாவுக்கு மே 31 நேற்று பிறந்த நாள்.

இந்த நிலையில் தனது தந்தையின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திரா குண்டூர் மாவட்ட புர்ரிபாலம் என்ற கிராமத்து மக்களுக்கு தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கி இருக்கிறார் மகேஷ் பாபு.

கிராம மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விஷயத்தை நெகிழ்ச்சியுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மகேஷ் பாபு.

இதுபோல நம்ம கோலிவுட் ஹீரோஸ் செய்வாங்களா.?

Actor Mahesh Babu sponsors COVID-19 vaccines for an entire village on his father Krishna’s birthday

Mahesh_free_vaccine

More Articles
Follows