தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது திரைப்படமாவது வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் அரசியல் சார்ந்த படங்கள் என்றால் நம் இயக்குனர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.
அந்த வரிசையில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திய பசுமை வழிச்சாலை (சேலம் சென்னை) என்ற பெயரில் ஒரு படம் உருவாகுகிறது.
சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கும் 8 வழி பசுமைவழிச் சாலையை மையமாக வைத்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
சத்வா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் நிருபமா தயாரிக்கிறார் சந்தோஷ் இயக்குகிறார்.
இது 100 சதவிகிதம் உண்மையான கதை. சம்பந்தபட்ட மக்களின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவங்களுடன் தயாராகிறது.
வழக்கமான சினிமாவில் இருந்து மாறுபட்ட சினிமாவாக இருக்கும் என்கிறார் இயக்குனர் சந்தோஷ்.
Pasumai Vazhi Salai Movie news updates