Lights On Media தயாரிப்பில் உண்மை சம்பவத்தை வைத்து உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

Lights On Media தயாரிப்பில் உண்மை சம்பவத்தை வைத்து உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவான திரில்லர் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’.

Lights On Media வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் இந்த ஊர்க்குருவி பறக்க தயாராகியுள்ளது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில் …

“கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம்.

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்” என்றார்.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய
தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – AIM சதீஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

‘பிக் பாஸ்’ தாமரைச் செல்வி அறிமுகமாகும் தமிழ் படம்

‘பிக் பாஸ்’ தாமரைச் செல்வி அறிமுகமாகும் தமிழ் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் சீசன் 5’ பார்வையாளர்களுக்கு சில ஆச்சரியங்களை அளித்தது, ஏனெனில் அறியப்படாத பிரபலங்கள் ரியாலிட்டி ஷோவில் ஆதிக்கம் செலுத்தினர்.

அவர்களில் ஒருவர் கிராமிய நாடக நடிகை மற்றும் நாட்டுப்புற பாடகி தாமரைசெல்வி .

தாமரைச்செல்வி தனது போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் நன்றாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது ஒரு புதிய படத்தில் பெரிய திரையில் அறிமுகமாக இருப்பதாக தாமரை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதில் ரோபோ ஷங்கர், சிங்கம் புலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதை செய்றாங்க.; இராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்தியா? ஏது இந்து? – கருணாஸ்

எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதை செய்றாங்க.; இராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்தியா? ஏது இந்து? – கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்று பேசியபோது.…

“கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார்.

இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச் சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது.

இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள்.

ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது.

அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.

அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள்.. இராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு! ஆனால் இராசராசசோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது.

காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில்.. “நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்” அந்தப் ”பிழைத்துக் கொண்டோம்” என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது.

இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இராசராச சோழனை இந்து என்று மாற்றநினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள்.

சிந்துவெளிநாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். முப்பால் யாத்த வள்ளுவப் பெருந்தகைக்கு காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்றமுற்படுவார்கள்.

கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்; வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை, இப்படி பல்வேறு தளங்களில் இந்தி – சமற்கிருத – காவி அடையாங்களாக மற்றுவதற்கான ஆரிய நுண்ணரசியல் பலகாலம் தொட்டு நடந்தேறுகிறது. அது அண்மைக்காலமாக வேகமெடுத்துள்ளது. அதை நாம் முறியடிக்கவேண்டும்.

அதன் ஒரு கூறுகத்தான்.. ஆர்.எஸ்.எஸ். பேரணி.. இதற்குமுன் வேல்யாத்திரை, இராமராஜ்ய ரதயாத்திரை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்தது.

இந்தியாவை ‘பாரத்’, ‘பாரத் வர்ஷா” என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பா.ஜ.க.முன்னெடுக்கிறது.. மிகவிரைவில் இந்தியா பாரத் ஆக மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பதும் அவர்கள் மனுதர்மபடிதான் நடக்கும்!

ஆகவே நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது! கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்!
————-
இங்ஙனம்
சேது. கருணாஸ்

karunas on raja raja cholan hindu issue

தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் தெலுங்கு அல்லாத ஹீரோக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்: நெட்டிசன்கள்

தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் தெலுங்கு அல்லாத ஹீரோக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்: நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்-ஐ’ தெலுங்கு ரசிகர்கள் தொடர்ந்து ‘பாகுபலி’யுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகினர் ‘ PS1’ படத்திற்கு எதிராக உள்ளனர், ஏனெனில் இது தெலுங்கு அல்லாத நடிகர்களைக் கொண்ட ஒரு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டது.

ஆனால், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதுமே பெரிய மனதுடன் இருப்பவர்கள் என்று விமர்சகர்களுக்கு நெட்டிசன்கள் நினைவுபடுத்தி வருகின்றனர்.

தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், அஜித், கார்த்தி, விஜய் போன்ற நடிகர்கள் எந்த முன்பதிவுமின்றி தெலுங்கு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

‘துணிவு’ படத்தில் அஜித்குமாருடன் நடிக்கும் பிரபல காதலர்கள்?

‘துணிவு’ படத்தில் அஜித்குமாருடன் நடிக்கும் பிரபல காதலர்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் 61வது படமான ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல ஜோடி ஒன்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி அமீர் மற்றும் பாவ்னி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 5’ இல் கலந்துகொண்ட பிறகு புகழ் பெற்றனர்.

‘பிபி ஜோடிகள் சீசன் 2’ இல் ஜோடி சேர்ந்து டைட்டிலையும் வென்றனர்.

இந்நிலையில் இந்த ஜோடி அஜித்தின் துணிவு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amir Pavni

தனது அடுத்த படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

தனது அடுத்த படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி.

மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நாயகனாக உயர்ந்தாலும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வந்தார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

தற்போது மரகத நாணயம் பட இயக்குனர் ARK சரவணன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் ஹிப் ஹாப் ஆதி. இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

தற்போது இப்பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது எனவும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக ஹிப்ஹாப் ஆதி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Hip hop Aadhi next movie update is here

More Articles
Follows