உள்ளே வெளியே-2 எடுக்கும் பார்த்திபன்; சில்க் போல பெண் தேவையாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற முதல் படத்திலேயே தேசிய விருதை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் பார்த்திபன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தாலும் எதுவும் பெரிய வெற்றிப் பெறவில்லை.

எனவே கவர்ச்சியின் எல்லையைத் தொட்டு உள்ளே வெளியே என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார் பார்த்திபன்.

சிட்டி முதல் பட்டி தொட்டி வரை இப்படம் ஹிட்டானது.

தற்போது 24 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு சில்க் ஸ்மிதா போன்ற ஒரு கவர்ச்சியான பெண் தேவையாம். அதை அவர் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதை அவர் எப்படி பதிவிட்டு இருக்கிறாரோ? அப்படியே இங்கே தருகிறோம்.

R.Parthiban‏Verified account @rparthiepan

2. 0. 1. 8-ன்

18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’

18-ற்கான commercial comedy thriller படத்திற்கு

18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும்,

28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும்,

38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965

மூத்த கலைஞர்கள் அவமதிப்பு..?; எஸ்வி.சேகர் ராஜினாமா குறித்து விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் மூத்த கலைஞர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய எஸ்.வி.சேகர், தன் சங்க ட்ரஸ்ட் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய விஷால் அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:-

நட்சத்திர கலைவிழா சிறந்த முறையில் நடந்தது.

அதில் திரட்டப்பட்ட நிதியை விரைவில் தெரிவிப்போம்.

கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் மரியாதையாக நடத்தினோம்.

எஸ்.வி.சேகர் அவர்கள் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சம்பளமே சங்கத்திற்கு போதும்; அஜித் ரகசியம் பற்றி எஸ்வி. சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படவுள்ளது.

இந்த கட்டிடத்திற்கு நிதி திரட்ட கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது.

இவ்விழாவில், ரஜினி, கமல் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

ஆனால் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கவில்லை.

இதனிடையில் இதில் கலந்துக் கொண்ட கலைஞர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி சங்க டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்திருந்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் எஸ்.வி.சேகர் பேசும்போது….

”நடிகர் சங்க கட்டிடம் கட்ட மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை.

படம் பார்க்க மக்கள் பணம் கொடுக்கிறார்கள். அதில் சம்பாதித்த பணத்தை நடிகர்கள் சங்க நிதியாக கொடுக்கலாமே என்கிறார் அஜித்.

எனவேதான் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.” எனத் தெரிவித்தார்.

SVe Shekar reveals Why Ajith not participated in Nadigar Sangam function

தமிழை ஆண்டாள் சர்ச்சை; மன்னிப்பு கேட்டார் கவிஞர் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குரியதானது.

அதாவது… ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

இதனையத்து பாஜக.வைச் சார்ந்த எச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். (வைரமுத்து ஒரு வேசி மகன் என்ற தோனியில் பேசியிருந்தார்)

மேலும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று.

ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று.

அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Lyricist Vairamuthu apologises for remarks on Andal

குறைந்த காலத்தில் 4 படங்களுக்கு ஓகே சொன்ன சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் டாப் ஹீரோக்கள் ஒரு படத்தை முடித்துவிட்டே அடுத்த படத்தை ஒப்புக் கொள்கின்றனர்.

இதுநாள் வரை நடிகர் சூர்யாவும் இந்த பாணியை பின்பற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தானா சேர்ந்த கூட்டம் படம் முடிவடைவதற்கு முன்பே செல்வராகவன் படத்தை ஒப்புக் கொண்டார்.

இது அவரது 36வது படமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்தை கே.வி ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனையடுத்து சூர்யா 38 படத்தை 24 பட இயக்குனர் விக்ரம்குமார் இயக்கவுள்ளதாகவும், சூர்யா 39 படத்தை ஹரி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை வாங்கியது சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

இப்படத்தில் காயத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருடன் நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிகரிகாவும் நாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

’7C’s Entertainement மற்றும் Amme Narayana Entertainement நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை இந்த ஜனவரி மாதமே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

More Articles
Follows