கதை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்களை தோலுரிக்கும் ‘படைப்பாளன்’

கதை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்களை தோலுரிக்கும் ‘படைப்பாளன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Padaipaalan movie based on Story theft Corporate Companies உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது.

அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் “படைப்பாளன்“ LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி நாயகனும், இயக்குனருமான L.S.பிரபுராஜா கூறியதாவது..

முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள்.

இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை
அழைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.

அந்த உதவி இயக்குனரின் உழைப்பு, வலிகளிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதைப் பற்றியும் அவன் சொன்ன கதைப்பற்றியும் தான் இந்த படம். கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராக படைத்து விடுவார் என்று சொல்வார்கள். உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது.

உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை பெரும் சங்கடம் தான். மக்களிடையே சினிமா இயக்குனர் என்றால் ஒரு விதமான மோசமாகவே கருதுகிறார்கள்.

ஆனால் மக்களை தங்கள் படங்களின் மூலம் மகிழ்விப்பவனே ஒரு படைப்பாளன் தான் அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குநரின் வலிகளையும் வழிகளையும் இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது என்கிறார் நாயகனும் இயக்குனருமான L.S. பிரபுராஜா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : வேல்முருகன்
இசை : கிருபாகரன்
பாடல்கள் : கு.கார்த்திக்
கலை : ஸ்ரீமன் பாலாஜி
எடிட்டிங் : எஸ்.பி.அகமது
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் – L.S.பிரபுராஜா இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Padaipaalan movie based on Story theft Corporate Companies

கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும் தயாரிப்பாளர்

கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mayuranபாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார்.

தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம்.

கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.

இளமை தோற்றத்தில் துடிப்பாக இருக்கும் பட்டாஸ் தனுஷ்

இளமை தோற்றத்தில் துடிப்பாக இருக்கும் பட்டாஸ் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)“ஒரு புகைப்படம் 1000 விஷயங்களை சொல்கிறது” என்ற ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. அது எப்போதுமே சினிமாவில் மிகச்சிறந்த நிரூபிக்கப்பட்ட கோட்பாடாக இருந்து வருகிறது. படத்தின் முதல் தோற்றம் படம் எதை பற்றியது, எப்படிப்பட்டது என பார்வையாளர்களை தயார்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் அளவில், உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் “பட்டாஸ்” எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34’ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஆடம்பரமான விருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று நான் கூறுவது, அவரை எப்போதும் கொண்டாடும் தீவிரமான ரசிகர்களை மட்டுமல்ல, சர்வதேச தளங்களுக்கும் அவரது ரசிகர் பட்டாளம் நீண்டுள்ளது. உலகளாவிய அளவில் அவர் தனது தனித்துவமான சோதனைகள் மூலம் ஒரு சுயமாக தனக்கென ஒரு தளத்தை நிறுவியுள்ளார். படத்தின் முதல் தோற்றம் மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டும் ஒன்றிணைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது தனுஷின் வேடிக்கையான தோற்றத்தையும், ‘பட்டாஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ப வண்ணங்களின் சுறுசுறுப்பான ஃப்ளாஷ்களையும் பார்க்கும்போது, இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக மாறும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல, அவர் தன் உடலை கச்சிதமாக வைத்திருக்கும் ஒரு நடிகர், அதனால் தான் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும், இயக்குனர் துரை செந்தில்குமார் அவரை மிக அழகாக காண்பிப்பதில் தனது சிறந்த அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இந்த கூறுகள் ஒன்றிணைந்து பட்டாஸை ஃபர்ஸ்ட் லுக்கை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் எப்போதும் குடும்ப பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். பட்டாஸ் அந்த கொள்கைக்கு நியாயம் செய்யும் படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அடுத்தடுத்து நிறைய அறிவிப்புகள் குறுகிய இடைவெளியில் வெளிவர இருக்கின்றன. ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் – தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இப்படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ஹீரோ

2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் “ஹீரோ”, ரசிகர் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களை கூட வெளியிடாமலேயே ஒரு படம் தன் மீதான வெளிச்சத்தை அப்படியே தக்க வைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும்.

படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, “ஆம், போஸ்டர்களும் காட்சி விளம்பரங்களும் ஒரு திரைப்படத்தை அதிக அளவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் ‘ஹீரோ’வைப் பொருத்தவரை, ஆரம்ப கட்டத்திலிருந்தே படக்குழுவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறது. சிவகார்த்திகேயன் ஒரு பெரிய பிராண்ட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது திரைப்படங்களை தவறாமல் பார்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்து கொண்டிருக்கிறார். ஹீரோ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். ஏனெனில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்த படத்தில் இணைந்திருக்கிறேன். ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற பெரிய நடிகர்களை கொண்டிருப்பது ஒரு பெரிய வரம். ஒரு திரைப்படத்தை ஆடம்பரமாக தயாரிக்க முடியும், ஆனால் அத்தகைய நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைப் பெறுவது தான் மிகப்பெரிய விஷயம். நடிகர்கள் ஒரு கண்கவர் அம்சமாக தெரிந்தாலும், தொழில்நுட்பக் குழுவினர் இந்த படத்தின் மற்றொரு தூணாகும். இரும்புத்திரையில் பி.எஸ்.மித்ரனின் இணையற்ற கதைசொல்லல் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மித்ரனிடம் கதை கேட்கும் முன்பு, அவர் இரும்புத்திரை போன்ற ஒரு கதையுடன் தான் வரக்கூடும் என்று நான் கருதினேன். ஆனால் எனக்கு ஆச்சரியமாக ‘ஹீரோ’ முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதுமையான கதையாக இருந்தது. அவர் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் பிரமிக்க வைக்கும், அந்த கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் நடிப்பது எனக்கு படத்தை இப்போதே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார், மேலும் இங்கே “ஹீரோ”வில் நல்ல பெயரை பெறவும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது” என்றார்.

டிசம்பர் 20ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருப்பது குறித்து அவர் மேலும் கூறும்போது, “மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க சரியான காலம் தேவை. இந்த அம்சத்தில் சிறந்ததை கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து உழைத்து வருகிறோம். தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன். எனவே “ஹீரோ” நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகளுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று உணர்ந்தேன்” என்றார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

பட்டைய கிளப்பும் பட்டாஸ் பர்ஸ்ட் லுக்; தனுஷ் பேன்ஸ் கொண்டாட்டம்

பட்டைய கிளப்பும் பட்டாஸ் பர்ஸ்ட் லுக்; தனுஷ் பேன்ஸ் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சத்யஜோதி பிலிம்ஸ், தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தை எதிர் நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

கொடி படத்தை போல இதிலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் பிறந்தநாளில் இது வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்; ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு; தனுஷ் மறுப்பு

இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்; ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு; தனுஷ் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் அவரின் பெற்றோர் மற்றும் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது பிரபல தயாரிப்பாளர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளிப்பதாக கூறினார்.

(பல நடிகர்களும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு ஆசைப்படுவது வாடிக்கையாகி விட்டதால் இதுபோன்ற பேச்சுக்கள் ரஜினி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.)

இதற்கு தனுஷ் பதிலளிக்கும்போது, ‘என் மீதான அன்பு மிகுதியால் இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம்.

தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும். என் ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை.

யார் பகை காட்டினாலும் பொறுமையாக செல்லுங்கள். பதிலுக்கு பகையை காட்டாதீர்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

More Articles
Follows