தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.
இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.
இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பா. ரஞ்சித் பேசும்போது…
“நான் தயாரிக்கும் படங்கள்.. என் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் படம் எப்போதும் சமூக பொறுப்புடன் இருக்கும்.
எனக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கு.. அது நான் எடுத்துக் கொண்டதாகவே இருந்தாலும் அந்த பொறுப்பை உணர்ந்து நான் செயல்படுகிறேன்.
இந்த சமூகம் எனக்கு கொடுத்ததை நான் திருப்பிக் கொடுக்கிறேன்.. தற்போது உருவாகிய ‘பொம்மை நாயகி’ படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை தயாரித்த நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பெருமை கொள்கிறது.
இன்று பல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் படத்தை எடுப்பதை விட ரிலீஸ் செய்ய கஷ்டப்படுகிறார்கள்.
முன்னணி நடிகரின் படத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறது. ஒரு சின்ன படங்கள் எடுத்து ரிலீஸ் செய்ய அதற்கான பிரமோஷன் பணிகளுக்கு மட்டுமே 70 லட்சம் 80 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது அப்போதுதான் அது வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.
நான் ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் இது குறித்து பேசினேன்.. அவர்கள் சின்ன படங்களை கண்டு கொள்வதே இல்லை.
நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் அது பற்றி விவாதிக்க கூட அவர்கள் வரவில்லை.
ஆனால் நீலம் நிறுவனம் புது இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும். ”
இவ்வாறு பேசினார் பா. ரஞ்சித்.
Pa Ranjith speech at Bommai Nayagi press meet