கௌதம் மேனனின் ‘ஒரு சான்ஸ் கொடு பொண்ணு’..; மேகா ஆகாஷிடம் கெஞ்சும் சாந்தனு & கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் 2ஆம் பாகம் என்ற பெயரில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.

இந்த குறும்படம் பல்வேறு கிண்டல்களை உருவாக்கியது. பல மீம்ஸ்கள் உருவானது.

அவை சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

தற்ப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த வீடியோவின் டீசரை வெளியிட்டு உள்ளார்.

இந்த குறும்படம் அல்ல பாடல்.

ஒரு சான்ஸ் கொடு பொண்ணு… என்ற இப்பாடலில் வீடியோ சாந்தனு பாக்யராஜ், மேகா ஆகாஷ், கலையரசன் போன்றோர் நடித்திருந்தனர்.

சாந்தனு ஒரு லவ்வர் பையனாகவும் கலையரசன் லோக்கல் பையனாக லுங்கியுடன் நடனமாடுகிறார்.

மேகா ஆகாஷ் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறார்.

மேலும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடனமாடும் காட்சியும் அதில் உள்ளது.

இந்த பாடலை கார்த்திக் இசையமைக்க, பாடலாசிரியர் கார்க்கி இதற்கு காதல் வரிகளை எழுதி இருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த டீசர் 24 விநாடிகள் கொண்டது.

இந்த பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.. விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Attachments area

ஆன்லைனில் படம் ரிலீஸானால் அரசுக்கு நஷ்டம்.. – அமைச்சர் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும் சினிமா சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாலும் கோலிவுட்டில் மட்டும் ரூ 800 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் ஆன்லைனில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா.

விரைவில் கீர்த்தி சுரேஷின் பெண் குயின் படத்தை அமேசானில் ரிலீஸ் செய்யவுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த நிலையில் ஆன்லைனில் படம் ரிலீஸ் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்… ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது.

திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் எனவும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு இயக்குனர்.; ரஜினியை திருப்திப்படுத்த நியமனமா?.. சீறும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

அந்த ட்வீட்டில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த்தையும் அமைச்சர் டேக் போட்டு பதிவு செய்திருந்தார்.

அதேபோல், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினியும் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்த விவகாரம் ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்றவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது..

இந்தநிலையில், மத்திய அமைச்சர் நடிகர் ரஜினியை டேக் செய்தது குறித்தும் பல்வேறு கேள்விகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சீமான், “சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.

நீண்ட நெடுநாள்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்..

சுஹாசினியை வைத்து அரசு விளம்பர படம் இயக்கிய நடிகர் இ.வி. கணேஷ்பாபு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழகஅரசு விளம்பரப் படங்களை தயாரித்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறது.

அதில் சில முக்கிய விளம்பரங்களை இயக்கிவரும் கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அதுபற்றி கூறியதாவது.

‘காவல் அரணாக செயல்பட்டு கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும்
களவீரர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி சுஹாசினி அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப்படம் இப்போது மக்களிடம் பரவலாக சென்றடைந்து வருகிறது.

கமல்ஹாசன், மணிரத்னம் போன்ற இருபெரும் ஆளுமைகள் மத்தியில் வளர்ந்து, வாழ்ந்து செயல்பட்டு வரும் சுஹாசினி அவர்கள் இந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது முழுமையாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

பெரிய திரைப்படமோ, சிறிய விளம்பரப்படமோ இரண்டுக்குமே சமமான அர்ப்பணிப்பை கொடுக்க வேண்டுமென்ற சுஹாசினி அவர்களின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.

அரசின் உயர்நிலை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் சில திரைப்பட ஹீரோக்கள், ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்களையும் வைத்து சில விளம்பரப் படங்களை நான் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செழியன் குமாரசாமி அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில் இந்த படைப்புகள் மிகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குனரும் ஹீரோவுமான
இ.வி.கணேஷ்பாபு கூறினார்
Attachments area

3 மொழிகளில் ஜூன் 8 முதல் கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ டீஸர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப்படும் உளவியல் திரில்லர் திரைப்படமான “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் வகையில் இப்படத்தின் டீஸர் அமைந்துள்ளது.

வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது.

மிக விரைவில் ப்ரத்யேகமாக “பெண்குயின்” திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது.

நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது..

Displaying tAMIL.jpg.

VZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார்.இது யூடியுபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றது.

இந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக “டிஸ்டண்ட்” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.

படத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார்.விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார்.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்

இயக்கம் : ஜி.கே
இசை : விஜய் சித்தார்த்தா
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: ஆதி
படத்தொகுப்பு: ராகுல்
கலை: தேவா
ஸ்டண்ட்: சுதேஷ்
VFX: முத்துகுமரன்
மாடல் மேக்கர்: அருண்
பாடியவர்: சில்வி சரோன்

தயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி

More Articles
Follows