தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையொட்டி அவர் வென்ற ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பெரும்பாலும் ஆளுங்கட்சியே இடைத்தேர்தலில் ஜெயித்துவிடும் என்பதால், பலமுனை போட்டி இருக்காது.
ஆனால் இம்முறை வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
ஜெயா அண்ணன் மகள் தீபா, அதிமுக சார்பாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பாக கௌதமி போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கங்கை அமரன் போட்டியிட போவதாக சொல்லப்படுகிறது.
On Behalf of BJP Gangai Amaran going to nominate in RK Nagar by election