தமிழ் புத்தாண்டுக்கு ரஜினியின் இரண்டு சூப்பர் ட்ரீட்

தமிழ் புத்தாண்டுக்கு ரஜினியின் இரண்டு சூப்பர் ட்ரீட்

Rajini speechவருகிற ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை முதல் நாள் (தமிழ் புத்தாண்டு) பிறக்கிறது.

அன்றைய தினத்தில் நிறைய புதுப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்காக ரஜினி தரப்பில் இரண்டு விருந்துகள் தயாராகி வருகின்றன.

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் டீசர் வெளியாகும் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கி, தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை இயக்குனர் ரஞ்சித் மறுத்துள்ளார்.

எனவே வரவிருக்கிற அறிவிப்பில் நாயகி மற்றும் இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பாக்கலாம்.

On 2017 Tamil new Year Rajini fans will have double treat from their Thalaivar

‘இது போதும் தலைவா…’ ரஜினி பாராட்டுக்கு சிம்பு இயக்குனர் பதில்

‘இது போதும் தலைவா…’ ரஜினி பாராட்டுக்கு சிம்பு இயக்குனர் பதில்

simbu adhik ravichandran AAA movieசிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீசர் நேற்று இரவு வெளியானது.

இதற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் இப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தை டீசர் கண்டுகளித்த ரஜினிகாந்த், சிம்புவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்.

இதை தன் ட்விட்டரில் தெரிவித்துள்ள சிம்பு, தலைவர் ரஜினியின் பாராட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ரஜினியின் பாராட்டுக்கு தன் நன்றியை இது போதும் தலைவா என்று தெரிவித்துள்ளார்.

Rajini congratulated Simbu and his Ashwin Thatha Teaser

STR‏Verified account @iam_str 1h1 hour ago
#Thalaivar @superstarrajini just called and appreciated #AshwinThathaTeaser .On cloud nine 🙂 Super happy #Blessed overwhelmed & humbled.

Adhik Ravichandran‏ @Adhikravi 2h2 hours ago
Adhik Ravichandran Retweeted STR
Thalaivaa Surprise call from @superstarrajini sir to @iam_str praising #AshwinThathaTeaser Idhu Podhum Thalaiva! #Magilchi & #Sirappu

தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் கோரிக்கை

தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் கோரிக்கை

Sivakarthikeyans request to his producer RD Rajaஒரே தயாரிப்பாளரின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்கள் நடிப்பதில்லை.

அப்படி ஒன்று நடந்தால், அவர்கள் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே அது முடியும்.

ரெமோ, வேலைக்காரன் மற்றும் பொன்ராம் இயக்கும் ஒரு படம் என தொடர்ந்து 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ரெமோ ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. வேலைக்காரன் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தயாரிப்பாளர் ஆர்.டி, ராஜாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம் சிவா.

அதாவது யூனிட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு போடும்போது எல்லாரையும் போல தனக்கும் அந்த சாப்பாடே போதும்.

தனியாக ஸ்பெஷல் சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

Sivakarthikeyans request to his producer RD Raja

விஜய்சேதுபதி-நயன்தாரா மோதல்… காத்திருக்கும் ரசிகர்கள்

விஜய்சேதுபதி-நயன்தாரா மோதல்… காத்திருக்கும் ரசிகர்கள்

Vijay Sethupathi Nayantharaகே.வி. ஆனந்த் இயக்கத்தில் டி.ஆர், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் கவண்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை இம்மாத இறுதியில் மார்ச் 31ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இதே நாளில்தான் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள டோரா படமும் வெளியாகிறது.

இதில் நயன்தாரா உடன் ஒரு கார் மற்றும் ஒரு நாய் ஆகிய இரண்டும் பிரதான கேரக்டர்களாக இருக்கும் என செய்திகள் வந்துள்ளன.

தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரித்திருக்கிறார்.

எனவே இந்த இரண்டு படங்களுக்கும் முறையான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Sethupathis Kavan and Nayantharas Dora movie clash on 31st March 2017

சிவகார்த்திகேயன்-சமந்தா இணையும் படத்தகவல்கள்

சிவகார்த்திகேயன்-சமந்தா இணையும் படத்தகவல்கள்

Sivakarthikeyan Samanthaமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

இமான் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு மே மாதம் தென்காசியில் தொடங்கவுள்ளதாம்.

இதுவும் ரஜினி முருகன் படத்தை போன்று கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தையும் ரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களை தயாரித்த ஆர்.டி. ராஜாவே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Samantha project new updates

‘படையப்பா’ பன்ச் டயலாக்கை ஆல்டர் செய்த அஸ்வின் தாத்தா

‘படையப்பா’ பன்ச் டயலாக்கை ஆல்டர் செய்த அஸ்வின் தாத்தா

ashwin thatha STRஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதில் சிம்பு உடன் தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு ஏற்றுள்ள கேரக்டரான அஸ்வின் தாத்தா என்ற கேரக்டரின் டீசர் வெளியானது.

2 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதில் சிம்பு ஆம்பள பசங்க எப்படி இருக்க வேண்டும் என பன்ச் டயலாக் பேசுவார்.

அதில்….

பசங்கன்னா பொறுப்பா இருக்கனும் பொறுக்கித்தனம் பண்ணக்கூடாது.

பொறுமையா இருக்கனும். பெர்மிசன் இல்லாம பொண்ண தொடக்கூடாது.

கட்டுபாடுடோட இருக்கனும். குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது.

மொத்தத்துல பசங்கன்னா பசங்களா இருக்கனும் என்று சிம்பு பன்ச் பேசியிருப்பார்.

இதுபோன்ற பன்ச் டயலாக் 1999ஆம் ஆண்டு ரஜினியின் படையப்பா படத்தில் இடம் பெற்று இருந்தது.

அதில் பொம்பளன்னா பொறுமையா இருக்கனும், அமைதியா இருக்கனும் பஜாரித்தனம் பண்ணக்கூடாது என்று ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

இதை ஆல்டர் செய்து அஸ்வின் தாத்தா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

In Ashwin Thatha teaser simbu alter the Padaiyappa punch dialogue

More Articles
Follows