தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.
அனிருத் இசையில் உருவான இப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
இந்த படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
எனவே ‘மாஸ்டர்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்த நிலையில் படக்குழு மறுத்தது.
மேலும் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
எப்போது வெளியானாலும் மாஸ்டர் படம் கொண்டாடாப்படும் என்றார் பட இயக்குனர் லோகேஷ்.
இதனால் தியேட்டரில் தளபதி தரிசனத்திற்கு ரசிகர்கள் தயாராக இருந்தனர்.
இதனிடையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் விலைக்கு வாங்கியதாக தகவல்கள் பரவியது.
இதை படக்குழு மறுக்கவில்லை என்பதால் நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் தான் வெளியிடுவோம். தியேட்டர்கள் அதிபர்கள் பொறுமையுடன் காத்திருந்து ஒத்துழைக்க வேண்டும் என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல மாதங்கள் காத்திருந்தாலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக படத்தை தியேட்டரில் மட்டும் வெளியிடும் விஜய்யின் முடிவால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
Official statement from producer on Thalapathy Vijay in Master release