Official Breaking தளபதி 64 : விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிகில்’ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து – இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.

ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
யோகேஷ் (அறிமுகம்)
அனிகா விக்ரமன்
குரு சோமசுந்தரம்
ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
தயாரிப்பு: தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன்
கதை-திரைகதை வசனம் இயக்கம்: பாபு தமிழ்
நிர்வாக தயாரிப்பு: பினு ராம்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
படத்தொகுப்பு: ராகுல்
இசை: அவினாஷ் கவாஸ்கர்
கலை: கல்லை தேவா
சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேர்ந்தெடுத்த படங்கள் செய்து ரசிகர்களை மகிழ்த்துவித்து வரும் ஆதி பின்ஷெட்டியின் நடிப்பில் உருவாகி வரும் படம் “க்ளாப்”. தடகள வீரனை மையமாக கொண்ட, ஸ்போர்ட்ஸ் டிரமாவாக உருவாகி வரும் “க்ளாப்” படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் 50லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பாடல்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு பற்றி இயக்குநர் பிருத்வி ஆதித்யா கூறியது….

எங்கள் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். தடகள விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, மிகப்பெரிய மைதானத்தில் மிகப்பிரமாண்ட மக்கள் கூட்டத்துடன் படமாக்கப்படவுள்ளது.
தற்போது 50 லடசம் ரூபாய் செலவில் கலை இயக்குநர் வைரபாலனால் அமைக்கப்பட்ட அழகுமிகு பிரமாண்ட அரங்கில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான அற்புதமான நடனப் பாடலை படாமாக்கி வருகிறோம். நடிகை மோனல் கஜ்ஜார் பங்கு கொள்ளும் இப்பாடலில் ஆதியும் நடனமாடுகிறார். நடிகர் ஆதிக்கு தமிழைப்போல தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆதலால் “க்ளாப்” படத்தினை ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாக்கி வருகிறோம்.

Big Print Pictures சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தை தாயாரிக்கிறார். புதுமுக இயக்குநரான என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து பிரமாண்ட செலவில் இப்படத்தை தயாரிப்பது எனக்கு மிகுந்த பொறுப்புணர்வை தந்துள்ளது. எங்கள் படக்குழு இரண்டு மடங்கு உழைப்பை தந்து படத்தினை வெற்றி பெறச் செய்வோம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்ஷெட்டியுடன் ஆகான்ஷா சிங், க்ரிஷா க்ரூப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். வில்லன் பாத்திரத்தில் நாசரும் படத்தின் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்கள். காமெடி நடிகர் முனீஸ்காந்த் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “ஜீவி” ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ மண்ணின் மைந்தர்கள் புகழ் பிரவீன் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். P பிராபா பிரேம் , G. மனோஜ் மற்றும் G.ஶ்ரீ ஹர்ஷா இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள்.

மீண்டும் இயக்குனராக மாறும் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன்,மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்த படம் இவருக்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் அது மட்டும் இல்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது.

அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து மருது,சண்டக்கோழி 2 ,கொடிவீரன்,தர்மதுரை போன்ற படங்களில் அசத்தியவர், தற்போது மாமனிதன் ,ரண சிங்கம்,அடுத்த சாட்டை ,வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

எனினும் தன்னுள் உள்ள இயக்குனர் என்ற படைப்பாளன் இவரை விடாது துரத்தவே R K சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படத்தை இயக்கினார் இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இவர் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டுள்ளார் இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இயக்குனராகி நடிப்பில் அசத்தியவர் மீண்டும் இயக்கத்தில் தடம் பதிக்க இருக்கிறார்.

Kuttipuli fame Saravana Sakthi is back with his director avatar

BREAKING தனுஷின் ‘அசுரன்’ படத்திற்கு UA சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து 4வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அசுரன்.’

இவர்களின் கூட்டணிக்கு என்றுமே எதிர்பார்ப்பு உள்ளதால் அசுரனுக்கும் அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் தனுஷ் உடன் மஞ்சுவாரியர், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், பசுபதி, சுப்ரமணிய சிவா, பவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமான மஞ்சுவாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் இன்று அசுரன் படத்திற்கு சென்சாரில் UA சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Dhanushs Asuran movie censored with UA

இமானின் விஸ்வாச இசையை திருடிய ‘மர்ஜாவன்’ படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி படம் ‘மர்ஜாவன்’.

இப்பட டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த பட டிரெய்லரை பார்த்த அஜித்தின் விஸ்வாசம் பட இசையமைப்பாளர் இமான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த ட்ரெய்லரில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சியில் வரும் பின்னணி இசையை பயன்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து இமான் கூறியுள்ளதாவது…

‘மர்ஜாவன்’ பட ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது.

தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows