விஜய்க்கு எதிராக பொங்குபவர்களே.. லலித்மோடி & விஜய்மல்லையா நாட்டை விட்டு ஓடியபோது என்ன செய்தீர்கள்? – சீமான் நெத்தியடி கேள்வி

விஜய்க்கு எதிராக பொங்குபவர்களே.. லலித்மோடி & விஜய்மல்லையா நாட்டை விட்டு ஓடியபோது என்ன செய்தீர்கள்? – சீமான் நெத்தியடி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய சொந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரியை குறைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் விஜய்

இந்த வழக்கில், வரி என்பது பங்களிப்பு அது நன்கொடையல்ல, ரியல் ஹீரோவாக இருங்கள் என காட்டமாக நீதிபதி தெரிவித்தார்.

வரி தொடர்பாக வழக்கு போட்டதற்காக ரூ.1 லட்சம் அபராத தொகையை கொரோனா நிவாரண நிதியாக முதல்வருக்கு கொடுங்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் பறந்தன.

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிக்கை வருமாறு:

“தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய், 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய சொகுசு காருக்குச் செலுத்தவேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரி விலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல.

ஆனால், அத்தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப் போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரி கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.

தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்த ஆண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அவர் வரிஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை.

அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்கு எதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

அச்சோதனைகளின்போது விஜய் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட முடியவில்லை என்ற போதிலும், பாஜகவின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

தான் வாங்கிய சொகுசு காருக்காகச் செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியது எவ்வகையிலும் தவறாகாது.

தனக்கான நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித உரிமையாகும். அதைத்தான் தம்பி விஜய்யும் பயன்படுத்தியிருக்கிறார்.

9 ஆண்டுக்கு முன்பாகத் தொடுத்த வழக்கின் கீழ் தற்போது வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம்.

அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வாறு வரிவிலக்குச் சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்நாட்டில் நடந்துள்ளன. எனவே, நுழைவு வரிக்கு விலக்கு கேட்பதும், அளிக்கப்படுவதும் புதிதல்ல.

பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள் என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல், வழக்குத் தொடர்ந்த ஒரே காரணத்திற்காக, தம்பி விஜய்யை குற்றவாளிபோல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும் நியாயமில்லை.

இந்த நாட்டில் வரி வரியாக இருந்தால் தவறில்லை. அது மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது.

ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய வரி இருப்பதும், அது அனைத்துத் தரப்பு மக்களையும் கசக்கிப் பிழிவதும்தான் தவறு என்கிறோம். இது ஏதோ விஜய் என்ற ஒரு மனிதருக்கான பிரச்சினை அல்ல.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வரிவிதிப்பு முறைகள் உள்ளன.

அதனால்தான், இந்நாட்டின் வரிக்கொள்கையும், விதிக்கப்படும் முறையுமே சரியானதல்ல; அது யாவற்றையுமே ஒட்டுமொத்தமாய் மாற்றி, ஏழை மக்களைச் சுரண்டாத வகையில் அமைக்க வேண்டும் என்கிறோம்.

குறிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்த பிறகு, வியாபாரிகள், தொழில் துறையினர் முதல் எளிய மனிதர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு வயது அன்பு மகள் மித்ரா முதுகெலும்பு தசை நார் சிதைவு எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, நோயைக் குணப்படுத்த மரபணு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ரூ.16 கோடி ரூபாயை உலகெங்கும் வாழும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவியுடன் மித்ராவின் பெற்றோர் அரும்பாடுபட்டுத் திரட்டியபோதும், அம்மருந்துகளைப் பெறுவதற்கான மத்திய அரசின் இறக்குமதி வரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றிற்காக மேலும் 6 கோடி ரூபாய்த் தேவைப்படும் நிலை.

அதற்கு விலக்கு கேட்டுப் பெறும் கொடுஞ்சூழல் இந்த நாட்டில் தற்போது நிலவுவதை மறுக்க முடியுமா? உயிர்காக்கும் மருந்துகளுக்குக்கூட 16 கோடிக்கு 6 கோடி ரூபாய் வரி என்றால் இந்த நாடு எதை நோக்கிச் செல்லுகிறது?

விஜய் வரிவிலக்குச் சலுகை கேட்டதற்காகப் பொங்கித் தீர்க்கும் பெருமக்கள் பல ஆயிரம் கோடியிலான மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டைவிட்டுத் தப்பும்போது என்ன செய்தார்கள்?

அவர்களைத் தப்பிக்கவிட்டு வேடிக்கை பார்த்த மோடி அரசு மீது என்ன விமர்சனத்தை வைத்திட்டார்கள்?

இன்றுவரை பல லட்சம் கோடியிலான மக்களின் வரிப்பணம், வாராக்கடனாக மாற்றப்பட்டு ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்குப் பெரும் சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்வி கேட்கவில்லையே ஏன்?

அதனையெல்லாம் கண்டும் காணாது போல இருந்து அச்செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்துவிட்டு இப்போது விஜய்யின் வரிவிலக்குச் சலுகை கோரும் வழக்குக்கு எதிராகப் பொங்கித் தீர்ப்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

வரி என்பது மக்களிடமிருந்து பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையாய் இருக்கக் கூடாது என்பதைக் கூறிக் கண்டிக்கிறோம்.

நேர்முக வரியைவிட மறைமுக வரி அதிமாக இருக்கும் மிகப்பெரும் மோசடித்தனத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

வரி போன்ற அரசின் கொள்கை முடிவுகளே மக்களுக்கெதிராக இருக்கும்போது அதனைக் கூறினாலும், அரசாங்கம் செவிமடுக்காதபோது ஒரு குடிமகனுக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?

ஆகவே, சட்டம் தனக்கு வழங்கியுள்ள வாய்ப்பின்படி முறையாகவே நீதிமன்றத்தை நாடினார் தம்பி விஜய்.

அதில் பிழையேதுமில்லை. இதனைத் தெளிவாக அறிந்திருந்தும், கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி முறைகளைச் சாடி, திரைப்படங்களில் தம்பி விஜய் கூறிய கருத்துகளுக்காக, தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, அவரைப் பழிவாங்கத் துடிப்பது என்பது மிகவும் மலிவான அரசியலாகும்.

அதனை முறியடிக்கவும் அவதூறு பரப்புரைகளையும், மறைமுக அழுத்தங்களையும் எதிர்கொண்டு மீண்டுவரவும் அவருக்குத் துணை நிற்பேன்.

“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல, தம்பி விஜய் மிகுந்த உள உறுதியோடு முன்னேறி வர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்”.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

NTK leader Seeman supports Vijay on Rolls Royce issue

ரியல் லைஃப்பில் ஹீரோ கெட்டவர்களை சுட்டுத் தள்ளினால் கோர்ட் சும்மா விடுமா.? விஜய்க்கு ஆதரவாக பேரரசு அறிக்கை

ரியல் லைஃப்பில் ஹீரோ கெட்டவர்களை சுட்டுத் தள்ளினால் கோர்ட் சும்மா விடுமா.? விஜய்க்கு ஆதரவாக பேரரசு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா இப்படி பல உச்ச நடிகர்கள் அவர்களின் மார்கெட்டுக்கு ஏற்றவாறு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு கோடிக்கணக்கில் வரி கட்டுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அந்த வரிப்பணம் எத்தனை திட்டங்களுக்கு உதவி இருக்கும். அந்த திட்டங்களால் எத்தனை மக்கள் பலனடைந்திருப்பார்கள்.

வரிக்காக இன்று விஜய் அவர்களை விமர்சிப்பவர்களும் அவர்களின் வரிப்பணத்தில் பலனடைந்திருக்கக்கூடும்.

இதுவரை விஜய் அவர்கள் கட்டிய வரிப்பணம் எத்தனை கோடி என்று அரசை அறிவிக்கச் சொல்லுங்கள்.

ஒரு பொருளின் விலையைவிட இரண்டு மடங்கு வரி விதிக்கும் போது யாருக்குத்தான் நெருடல் வராது.

அது சட்டத்துக்கு உட்பட்டு இருக்கலாம். இறக்குமதி வரியை மட்டுமாவது ரத்து செய்யலாமே என்று அவர் நீதி மன்றத்தை அணுகியது என்ன தேசக் குற்றமா?

அரசு சொல்லும் வரி அனைத்தையும் கட்டித்தான் தீரவேண்டும் என்றால்
அப்ப GST எதிராக இங்கு பலர் பொங்குவது ஏன் ?

விஜய் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும், ரத்து செய்வதும் சட்டத்துக்குட்பட்டு நீதிபதி சொல்ல வேண்டிய தீர்ப்பு. சொல்லியும் விட்டார்.

அதைவிட பெரிய வேதனை இங்கே ஆளாளுக்கு நீதிபதிகளாய் ஏளனமாக விமர்சனம் செய்வது.

திரைப்படத்தில் ஹீரோ கெட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவார்.

நிஜத்திலும் அதே கதாநாயகன் கெட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால் நீதி மன்றம் சும்மா விடுமா?

விஜய் அவர்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை. வரி கூடுதலாக இருக்கிறதே என்று நீதிமன்றம் அணுகி இருக்கிறார்.

ஆளாளுக்கு கூச்சல் போடும் அளவுக்கு அவர் மீதொன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்.

– பேரரசு

Director Perarasu supports Vijay on Rolls Royce issue

ரஜினி பட சான்ஸை மிஸ் பண்ணிட்டு் இப்போ ஃபீல் பண்ணும் விக்ரம்-பிரசாந்த்-அஜித் பட நடிகை

ரஜினி பட சான்ஸை மிஸ் பண்ணிட்டு் இப்போ ஃபீல் பண்ணும் விக்ரம்-பிரசாந்த்-அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kiran‘ஜெமினி’ படத்தில் விக்ரம் உடன் ‘ஓ போடு…’ என ஆட்டம் போட்டு தமிழில் அறிமுகமானவர் கிரண்.

அதன்பின்னர் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

கமல்ஹாசன் உடன் ‘அன்பே சிவம்’, பிரசாந்த் உடன் ‘வின்னர்’, அஜித் உடன் ‘வில்லன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கார்த்தியுடன் ‘சகுனி’, விஷாலுடன் ‘ஆம்பள’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் கிரண்.

ஆனால் ரஜினி படத்தில் நடிக்கவில்லை. நடிக்க சான்ஸ் வந்தும் அதை மிஸ் செய்து விட்டாராம்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில் கிரண் கூறியிருப்பதாவது:

”கடந்த ஆறு மணி நேரமாக ‘பாபா’ பட பாடல்களைக் கேட்கிறேன்.

இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்ட காரணமாகக் கூட அது இருக்கலாம்.

அப்போது நான் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.

நடிப்பிலும் நடனத்திலும் ரஜினியை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்”.

என கிரண் பதிவிட்டுள்ளார்.

Actress Kiran talks about her missed chance to work with super star

‘சீன் நம்பர் 62’ படத்தில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ ஆஜித் காலிக்

‘சீன் நம்பர் 62’ படத்தில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ ஆஜித் காலிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்4ல் பங்குபெற்றார் ஆஜித் காலிக்.

இவர் ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸில் வெற்றி்பெற்ற பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே..

சிறுவயதிலே நிறைய திரைப்படங்களில் பாடியுள்ளார், அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் GKV உடன் சீன் நம்பர் 62 என்கிற படத்தில் பாடகராக இணைந்துள்ளார்.

ஆஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் புகைப்பட பதிவுகளால் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மலேசியா வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் ‘சீன் நம்பர் 62’ என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இயக்குனர் ஆடம் சமரும் அந்த பாடல் மிக அருமையாக வந்துள்ளது என்றும் இளைஞர்களை அடிமையாக்கும் என்றும் கூறி பெரும் ஆர்வத்தை தூண்டி உள்ளார்.

Bigg Boss fame Aajeedh croons for new film titled scene no 62

சமூகத்தில் புரையோடி கிடக்கும் அவலங்களை தோலுரிக்க வருகிறார் திருப்பூர் குமரன்

சமூகத்தில் புரையோடி கிடக்கும் அவலங்களை தோலுரிக்க வருகிறார் திருப்பூர் குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓம் முருகா ஃபிலிம்ஸ் புரொடக்சன் சங்கர் தயாரிப்பில் திருப்பூர் குமரன் இயக்கத்தில் காதல் நகைச்சுவை ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்த ஜனரஞ்சகமான மக்கள் குடும்பத்தோடு பார்க்கும் விதமான ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.

அமுதன் & அருண் கதையின் நாயகன்களாகவும் வெண்மதி & வந்தனா கதையின் நாயகிகளாகவும் புதுமுக பட்டாளத்தை இந்த படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

நட்பை மையமாக கொண்டு அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைச் சுற்றி கதைக்களம் நகர்கிறது.

சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல்வேறு அவலங்களையும் அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு ஜீவராகம் அஜிம்ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதையோடு ஒன்றிப் பயணிக்கும் விதமாக அனைத்துப் பாடல்களையும் கவிஞர் ஆபா எழுதுகிறார்.

கேமரா மேனாக பிரசாத்தும், எடிட்டராக கோடி என்கிற கோடீஸ்வரனும் பணியாற்றுகிறார்கள்.

இமான் அண்ணாச்சி மற்றும் ரஞ்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.

மொத்தத்தில் புத்தம்புது யுக்தியோடு புதுமுக பட்டாளமே தனது திரைப் பயணத்தை துவக்கி இருக்கிறது.

குறுகிய காலத்தில் படத்தை முடிக்கவிருப்பதால் விரைவில் தியேட்டரில் ரிலீசை எதிர்பார்க்கலாம்..

Video link
https://we.tl/t-rvEExx6ovZ

Director Thirupur Kumaran’s new film about social issues

ரஜினி ஒரு பணம் காய்க்கும் மரம்.. போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.. – ‘ஜென்டில்மேன் KT குஞ்சுமோன்

ரஜினி ஒரு பணம் காய்க்கும் மரம்.. போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.. – ‘ஜென்டில்மேன் KT குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினி மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, என ஓரிரு தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார்.

அவரின் முடிவை வரவேற்று அறிக்கை வெளியிட்டுட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஜென்டில்மேன் ‘KT குஞ்சுமோன்.

அவரது அறிக்கை இதோ…

மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு.. அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

உலகமெங்கும் வாழும் அவரது அனைத்து ரசிகர்களையும் மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம்.

சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, வருடத்திற்கு அவரது இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள்.

சினிமா செழிக்கும், வியாபாரம் சிறக்கும்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது.

இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.

ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்களை நான் வெளியிட்டுள்ளேன்.

என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களால் லாபம் சம்பாதித்துள்ளனர்.

அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது.

சினிமாவில் ரஜினி ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.!

*வெல்டன் அண்ணாத்த.!*

Popular producer KT Kunjumon praises super star Rajinikanth

More Articles
Follows