எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை; அஜித் பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் உண்டு; தன் வேலை உண்டு என இருப்பவர் நடிகர் அஜித்.

தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என, தான் நடிக்கும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்வதில்லை.

ஆனால் அவ்வப்போது இவரது பெயரில் சில தகவல்களை சிலர் பரபரப்புவது உண்டு.

இந்நிலையில் திடீரென இது சம்பந்தமாக ஓர் அறிக்கையை தன் வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ளார் அஜித். அதில்….

எந்த ஒரு வணிக நிறுவனம் மற்றும் பொருளுக்கு அவர் விளம்பர தூதர் இல்லை எனவும், அவர் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவர் இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Notice from Actor Ajithkumar legal counsel

இதோ அந்த அறிக்கை…

வீட்ல விசேஷங்க; அவசியம் வாங்க… திருமணத்திற்கு அழைக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகுதான் தனக்கு திருமணம் என உறுதியாக கூறிவிட்டார் விஷால்.

அது எப்போது நடக்கும் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.

ஆனால் தற்போது நாம் பார்க்க போகும் விஷயம் என்னவென்றால் அது விஷாலின் தங்கை திருமணம்.

இவரது தங்கை ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்துவிட்டு தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் வரும் 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது.

இந்த விசேஷத்திற்குதான் அழைப்பிதழ் வைத்து வருகிறாராம் விஷால்.

விஷாலின் அண்ணன் நடிகர் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal inviting celebrities for his sister Aishwarya marriage

தமிழ் சினிமாவின் கதவை ரஜினிகாந்த் திறந்த தினம் இன்று..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் உயர்ந்துள்ளார்.

இதே நாளில் அதாவது 42 வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 18ஆம் தேதி அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் படம் ரிலீஸ் ஆனது.

கே. பாலசந்தர் இயக்கிய இப்படத்தில் கமல் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆகியோருடன் நாகேஷ் நடித்திருந்தார்.

எம்எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகும் போது ஒரு வீட்டின் முன்புறம் உள்ள கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைவார்.

மற்ற நடிகர்களுக்கு இதுபோன்ற காட்சி அமைந்திருக்குமா? எனத் தெரியாது.

அன்று அவருக்காக திறக்கப்பட்ட அந்த கேட், இன்று வரை ரஜினியை சினிமா வீட்டிற்குள் வைத்து கொண்டாடி வருகிறது.

அதற்குமுன்பு இந்திய சினிமாவில் ஸ்டைல் என்ற வார்த்தை இருந்திருக்குமா? தெரியவில்லை.

அதுபோல் ஒரு கருப்பான நிறம் கொண்ட ஒரு மனிதர் இந்திய சினிமாவில் இருந்திருப்பாரா? எனத் தெரியவில்லை.

ஆனால் இன்று கருப்பான மனிதர்கள் எல்லாம் சினிமாவில் நுழைந்து சாதிக்க அவரே காரணமாக இருந்து வருகிறார்.

அதுபோல் தனக்கான ஸ்டைல் ரூட்டை பிடித்து ஒரு அன்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இவரது ரசிகர்கள் இவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தங்கள் தெய்வமாக மதித்து கொண்டாடி வருகின்றனர்.

எனவே அவர்களுக்காக அரசியல் களத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்கத் தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

அதன் முதற்கட்டமாக நாளை மறுநாள் ஆகஸ்ட் 20 அன்று திருச்சியில் நடைபெற்ற உள்ள தமிழருவி மணியன் நடத்தும் அரசியல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 42 வருட சினிமா எண்டரீ தினத்தை #42YearsOfRajinism என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Super star Rajini fans celebrates 42 years of Rajinism on 18th August

தனுஷ்-அஜித் நடுவே சிக்கிக் கொள்ளாத விரும்பாத படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி தனுஷ் நடித்த விஐபி2, உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் ராம் இயக்கிய தரமணி ஆகிய படங்கள் வெளியானது.

இவை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த படங்ளையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

இந்த வாரமே தியேட்டர் கிடைக்கவில்லை என்றால், அடுத்த வாரம் நிச்சயம் கிடைக்காது என்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்களாம்.

அதற்கு முக்கிய காரணம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமையே அஜித்தின் விவேகம் ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே இதற்கிடையில் (அஜித்-தனுஷ்) எந்த படங்களும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என கூறப்படுகிறது.

On 18th August 2017 No tamil movie released due to VIP2 and Vivegam releases

ஐரோப்பாவில் ஹாயாக டூயட் பாடும் சூர்யா-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் உள்ள பாடலை படமாக்க ஐரோப்பா, குரோடியா நாட்டுக்கு சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இப்பாடலுடன் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து விடும் என தகவல்கள் வந்துள்ளன.

Suriya and Keerthy suresh duet song shooting updates

காமெடி நடிகராக மாறுகிறார் கமல்… அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்து வந்த கமல், தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகிறார்.

முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் என் குரலுக்கு ஆதரவு கொடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லையா? எனவும் கேட்டு இருந்தார்.

இது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கமல்ஹாசனின் கருத்துக்கள் குறித்து கூறியதாவது…

கமல்ஹாசன் சிறந்த நடிகர். ஆனால் அவர் தேவையில்லாமல் அரசியல் கருத்துக்களை கூறி தற்போது காமெடி நடிகராக மாறி வருகிறார்” என்று கூறினார்.

Best Actor Kamalhassan becomes Comedy actor says TN Minister Kadambur Raju

More Articles
Follows