குடும்பத்தில் யாருக்கும் யாருடனும் அண்டர்ஸ்டாண்டிங் இல்லை.. காலம் கெட்டுச்சி… – கே. ராஜன்

குடும்பத்தில் யாருக்கும் யாருடனும் அண்டர்ஸ்டாண்டிங் இல்லை.. காலம் கெட்டுச்சி… – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிக்லெட்ஸ்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு

‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார்.

2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் தமிழ் சினி கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்களும், நடிகர்களுமான ஆர். வி. உதயகுமார், பேரரசு, ‘மஞ்சள் வீரன்’ பட இயக்குநர் செல்லம், நடிகரும் தொழிலதிபருமான சூரிய நாராயணன், நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நடிகை அமிர்தா ஹல்தார் இயக்குநர் எம். முத்து, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார், தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தின் கதை விவாதம் கோவிட் காலகட்டத்திற்கு முன்னர் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மற்றொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அப்போது இப்படத்தின் இயக்குநரான முத்து அடிக்கடி என்னை சந்திப்பதுண்டு. அப்போது சிக்லெட்ஸ் படத்தின் கதையை சொல்லி, இப்படத்தை உருவாக்கலாம் என சொல்வார். நான் இதன் திரைக்கதையை வாங்கி என்னுடைய மகள் ஸ்வர்ணா ஸ்ரீயிடம் கொடுத்து படிக்குமாறு சொன்னேன்.

அவர் இந்த கதையைப் படித்துவிட்டு 2k கிட்ஸ்க்கான கதையாக இருக்கிறது. இதனை முதலில் தயாரிக்கலாம் என சொன்னார். அதன் பிறகு மீண்டும் இயக்குநர் முத்துவை அழைத்து, இப்படத்தின் கதையை சொல்லச் சொன்னேன். அவரும் கதையை விவரித்து பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு செய்து தரமான படமாக உருவாகி இருக்கிறோம். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார் .

நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில்,” ‘சிக்லெட்ஸ்’ திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஆடிசன் வைத்து என்னை தேர்வு செய்து, அதற்குப்பின் வாய்ப்பளித்தார். என்னை தேர்வு செய்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு நிறைய பிரச்சனைகள், தடங்கல்கள் வந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் மனம் தளராமல் இப்படத்தை வெளியீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில்தான் நான் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறேன். இதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறேன். இயக்குநர் முத்து இப்படத்தின் கதையையும், என்னுடைய கதாபாத்திரத்தையும் சொல்லி நிறைய நம்பிக்கையை அளித்தார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

‘மஞ்சள் வீரன்’ பட இயக்குநர் செல்லம் பேசுகையில், ” ஒரு தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கிறார் என்றால்.., அதற்குப் பின்னால் சினிமாவை நம்பி இருக்கும் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழலில் படத்தை தயாரித்திருப்பதற்காக தயாரிப்பாளரை நாம் மனதார பாராட்ட வேண்டும்.

இயக்குநர் முத்து ஏற்கனவே ‘திறந்திடு சிசே’ என்ற படத்தினை இயக்கியவர். அதன் பிறகு போராடி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் சிப்பிக்குள் இருக்கிற முத்து அல்ல சினிமாவுக்குள் இருக்கிற முத்து. அவர் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
” என்றார்.

இயக்குநர் எம். முத்து பேசுகையில், ”புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின் ஆன்மா சாந்தியடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய இயக்குநரும், நடிகருமான மனோபாலா மற்றும் மயில்சாமி ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுடன் இணைந்து பணியாற்றிய இணை இயக்குநரும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் விசுவாசியுமான வேலுமணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

‘சிக்லெட்ஸ்’ படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் இயக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ படித்ததும் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு இந்த கதை பிடித்ததால், படமாக தயாராகி பிப்ரவரி இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் தமிழ் சினி கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். தெலுங்கில் எம் ஜி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எம். அச்சு பாபு வெளியிடுகிறார். இவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் பணிகளை கோவிட் காலகட்டத்தின் போது தொடங்கினோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகனான இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, தொடர்பு விமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் இங்கு வருகை தர இயலவில்லை. படத்தின் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது.

பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இருக்கும் அன்பு.. ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இருக்கும் அன்பு.. இந்த அன்பு ஒருவரிடம் சேரும்போது வாழ்க்கையில் தோல்வி இருக்காது. வெற்றி பெறுவோம். ஆனால் அந்த அன்பு தோற்று விட்டால்.. வாழ்க்கையில் தோற்று விடுவோம் ‌. பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டூகே கிட்ஸ் என்றால்… நான் இந்த தலைமுறையை தவறு சொல்லவில்லை‌. தற்போது கலாச்சாரம் மாறி இருக்கிறது. அதற்கேற்பதான் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம் மாற மாற அதனால் பாதிப்பை சந்திப்பவர்கள் இளைய தலைமுறையினர் தான். வேறு யாரும் அல்ல.

பெற்றோர்களாகிய நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாழும் வாழ்க்கை வேறு. ‌இதைப் பற்றி ஓப்பனாக பேசப் போனால்.. எங்களுக்கு கிடைத்திருக்கும் சர்டிபிகேட் ‘ஏ’.

இதை ஓப்பனாக யார் பேசுவது? சமுதாயம் பேசாது. ஏனெனில் அதற்கு ஒரு பயம் இருக்கிறது. பிறகு யார் தான் பேசுவது? பெற்றோர்கள் தான் இது குறித்து அவர்களுடைய பிள்ளைகளிடம் பேச வேண்டும். இது செய்.. இது செய்யாதே.. இது சரி.. இது தவறு.. இதை சொல்லக்கூடிய ஒரே உரிமை பெற்றோர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.

எல்லோருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக தமக்குள்ளே வைத்துக் கொண்டவர்கள் தான் 80’ஸ் 90’ஸ் காலகட்டத்தினர். ஆனால் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுபவர்கள் தான் இன்றைய இளம் தலைமுறையினர். தவறு என்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பேசுவார்கள். தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் மனதில் பட்டதை பேசாமல் அவர்களால் இருக்க முடியாது.

அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும்? அணுகுமுறை எப்படி இருக்கும்? காதல் எப்படி இருக்கும்? காமம் எப்படி இருக்கும்? அவருடைய மனநிலை எப்படி இருக்கும். இவை எல்லாவற்றையும் இப்படத்தில் பேசியிருக்கிறோம். அதே சமயத்தில் பெற்றோர்களின் வலியையும் பேசியிருக்கிறோம்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் வாழ்க்கையில் தோற்கக் கூடாது என்று தான் நினைப்பார்கள். அனைத்து பெற்றோர்களின் மனதிலும் இவைதான் இருக்கும். ஆனால் அதை ஒருபோதும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

‘எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால் வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும்’ என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தப் படத்தில் நாங்கள் ஒரு நல்ல விசயத்தைத்தான் சொல்லி இருக்கிறோம்.

இப்படத்திற்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்தோம். இதற்காக இயக்குநர் ‘லெஜன்ட்’ பாக்யராஜை தொடர்பு கொண்டோம். அவர் படத்தை பார்த்துவிட்டு சில நிறைகுறைகளை சுட்டிக்காட்டினார். அவர் பார்க்கும் போது இந்த படத்தின் கால அவகாசம் இரண்டரை மணி நேரம். அவர் சுட்டிக் காட்டிய குறைகளை நீக்கிய பிறகு இரண்டு மணி நேர படமானது. 30 நிமிட காட்சிகளை நீக்கி விட்டோம். இதற்காக இயக்குநர் பாக்கியராஜுக்கு நன்றி.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸை என்னுடைய உதவியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. படத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில் கிளைமாக்ஸ் இருந்தது. தயாரிப்பாளருக்கு நான் சொன்ன கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. பாக்யராஜ் சாரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். கண்டிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ்.. படம் வெளியான பிறகு பேசப்படும். மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். கிளைமாக்ஸ் புதிது இல்லை என்றாலும்.. இது இருந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். இது யாருக்குத் தேவை? யாருக்கு தேவை இல்லை? என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.

நம்மால் ஒரு விசயத்தை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு… இந்த சமுதாயத்தை எதிர்த்து வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு.. யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஒருத்தருடைய ஆதரவில் தான் மற்றவர்களால் வாழ முடியும் என்றால்.., நிச்சயமாக அவர்கள் ஆயுள் முழுவதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். ‌ இதைத்தான் நான் இப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், ” இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.

இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இது போன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து தான் இங்கு வருகை தந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது.

இயக்குநர் ஒரு புத்திசாலி. அதனால் தான் படத்தினை இளம் தலைமுறையினர் திரையரங்கிற்கு வர வைக்கும் வகையில் முன்னோட்டத்தை உருவாக்கி இருக்கிறார். படத்திற்கான டிசைனும் அவர்களை கவரும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

2கே கிட்ஸ்களை இயக்குநர் நன்றாக புரிந்து வைத்திருப்பதால்.. இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை விரும்பி வாங்கி இருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

இன்றைக்கு விவாகரத்து அதிகரித்து விட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன்- மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காக தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதனை பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்காக அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதையும், தனக்காக அப்பா எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் தான் இதனை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் ‘சிக்லெட்ஸ்’ போன்ற படங்கள் வெளிவருவது அவசியம். அதனால் இந்த திரைப்படத்தை பெற்றோர்கள் மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினர் கண்டு ரசித்து, தங்களது பெற்றோர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்..

”சிக்லெட்ஸ்’ படத்தின் டிரைலரை பார்த்தோம். வெரி நீட். இந்த காலகட்டத்திற்கு தேவையான அற்புதமான படம். ‘ஏ’வா.. ‘யு/ஏ’ வா.. என்பது வேறு. அப்பா- அம்மா- பிள்ளைகள் அண்டர்ஸ்டாண்டிங்கை பற்றி பேசுகிறது. அப்பா அம்மாவின் பேச்சை பிள்ளைகள் கேட்கிறார்களா..? அல்லது பிள்ளைகளின் பேச்சை அப்பா அம்மா கேட்கிறார்களா.. ? என்ற பிரச்சினையை பற்றி இப்படம் பேசுகிறது.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கின்ற விசயம். விஞ்ஞான வளர்ச்சியில் பல சாஃப்ட்வேர்கள் வந்து வளர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அழிவையும் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மியை சொல்லலாம்.

இன்றைக்கு நாம் ஃப்ளாட்டுக்களில் தான் வசிக்கிறோம். தாய் ஒரு ரூம். தந்தை ஒரு ரூம். பிள்ளைகள் ஒரு ரூம். எல்லோரும் எப்பவாது ஒரு முறை தான் ஹாலில் ஒன்றாக இருப்பார்கள். அம்மாவுக்கு ஒன்னு.. அப்பாவுக்கு ஒன்னு.. பொண்ணுக்கு ஒன்னு.. பையனுக்கு ஒன்னு.. என ஆளாளுக்கு ஒரு செல்போனை கையில் வைத்திருக்கிறார்கள். போன் வந்தால் அம்மா சமையல் அறைக்கும், அப்பா ரூமிற்கும், பையன் தெருவுக்கும், பொண்ணு மொட்டை மாடிக்கும் சென்று பேசுகிறார்கள். யாருக்கும் யாருடனும் அண்டர்ஸ்டாண்டிங் இல்லை.

முன்பெல்லாம் அப்பா அம்மா.. பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் நிறைய கல்யாணம் நடந்தது. நல்ல பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அம்மா அப்பா தங்களுடைய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணு திடீரென்று ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து, ‘இவர்தான் என் கணவன்’ என்று அறிமுகப்படுத்துகிறார். அப்பா- அம்மாவிற்கு முன் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார்கள். இது வருத்தமாக தான் இருக்கிறது. இந்த வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்படத்தின் நாயகன் அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவிக்க நடிகர் போல் நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் பேசி பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

இப்படத்தின் கதை பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அற்புதமான விசயத்தை சொல்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். மேலும் தற்போது நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்கிறார்கள். ” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில்…

” இந்தப் படத்தைப் பற்றி இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள். அதனால் நான் படத்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் இங்கு படத்தின் டிரைலரை பார்த்தோம். ட்ரெய்லர் கண்களுக்கு விருந்தளித்தது. இங்கு அனைவரும் இளைஞர்கள் தான் ஆசை இல்லாத மனிதர்கள் யார்? ஆசை இல்லாதவர்கள் மனிதனே இல்லை. அதனால் இப்படத்தின் ட்ரெய்லருக்கு ஹாட்ஸ் ஆஃப்.

தயாரிப்பாளர் பாராட்டும் அளவிற்கு ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால்.. அவரை நாமும் பாராட்ட வேண்டும். தயாரிப்பாளர் வேறு ஒரு படத்தின் பணிகளை நிறுத்திவிட்டு இப்படத்தின் இப்படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார் என்றால், இதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். அவருக்கு ஆதரவாக நின்ற தயாரிப்பாளரின் புதல்வியையும் பாராட்ட வேண்டும். ‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு இந்த ‘சிக்லெட்ஸ்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ” என்றார்.

No understanding between family members says K Rajan at Chicklets events

தலைவர்கள் இறுதி ஊர்வல கூட்டத்தை விஜயகாந்த்துக்கு பார்த்தேன்.. அதுவே சொத்து.. – கமல்ஹாசன்

தலைவர்கள் இறுதி ஊர்வல கூட்டத்தை விஜயகாந்த்துக்கு பார்த்தேன்.. அதுவே சொத்து.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற

*நடிகர் கமல்ஹாசன் பேசும்போது,*

“அவரை முதல் நாளில் சந்தித்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதேபோல் தான் பெரிய நட்சத்திரம் ஆன பிறகும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். விஜயராஜ், விஜயகாந்த் இது இரண்டுக்குமே எனக்கு பெரிய வித்தியாசம் தெரியாமல் அவர் பார்த்து கொண்டதற்கு காரணம் நான் அல்ல.. அவர் தான்..

பல விமர்சனங்களை, அவமானங்களை தாங்கி மேலோங்கி வந்தவர். அதற்காக அவர் எந்த காழ்ப்பையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர்.
அது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். அவர் நட்சத்திரமாக ஆனார் என்பது அவரது உழைப்பில் வந்தாலும் ஆரம்ப நிலை நடிகர்களுக்கு, கடைநிலை நடிகர்களுக்கு அவர் ஒரு குரலாக இருந்தது அவர்கள் செய்த பாக்கியம்.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு எல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அவர் சேர்த்த சொத்து என்றால் அதுதான்.

அவர் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. 1998ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பணம் செலுத்தி படிக்க வசதி இல்லாத மூன்று இன்ஜினியரிங் மாணவர்களை பற்றிய செய்தியை கேள்விப்பட்டு அவர்களுக்கான படிப்பு கட்டணம், விடுதி செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த்.. 70-80களில் அந்த சமூக அரசியல் கோபங்களை எல்லாம் பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று அவருடைய நியாயமான கோபம். நியாயத்தைக் கேட்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்து ஆள் போல நாக்கை கடித்துக் கொண்டு துணிச்சலாக கேட்டு விடுவார். அது எந்த அரங்கமாக இருந்தாலும் பயப்பட மாட்டார்.

அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி இங்கே இருக்கும் நடிகர்கள்.

அவர் நடித்த முதல் படமான தூரத்து இடி முழக்கம் ஒரு திரைப்பட விழாவிற்கு செல்ல வேண்டிய ஒரு படம். தொடர்ந்து ஒரு கமர்சியல் ஹீரோவாக அவர் உருவெடுத்தது அவருடைய திறமை. நான் அவருடன் ஒரு படத்தில் சிறிய கெஸ்ட் ரோல்தான் நடித்தேன். அங்கு அவர் எனக்கு காட்டிய மரியாதை, அன்பு இன்றும் மனதில் ரீங்கரிக்கிறது.

தனக்கு பிடிக்காதவர்களை கூட கூப்பிட்டு பேசி விடுவார். அந்த தைரியம் அவருக்கு உண்டு. இந்த மாதிரியான செய்கைகளை நாம் பிரதிபலிக்கலாம்.. அவரிடமிருந்து காப்பி அடிக்கலாம். தவறில்லை.. பொதுவாக அவர் போல இல்லை என்று சொல்வது வழக்கம்.. ஆனால் அவர் போல இருக்க வேண்டும் என்று முயற்சியாவது செய்வோம்.. குட்பை விஜயகாந்த். குட்பை கேப்டன்” என்று கூறினார்.

Kamal Haasan speech about Captain Vijayakanth

ஒருவன் எப்படி வாழனும்.? விஜயகாந்த் பாடத்தை பள்ளிகளில் வைக்கனும்.. – ஜெயம் ரவி

ஒருவன் எப்படி வாழனும்.? விஜயகாந்த் பாடத்தை பள்ளிகளில் வைக்கனும்.. – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற

*நடிகர் ராதாரவி பேசும்போது,*

“நானும் விஜயகாந்த்தும் வாகை சந்திரசேகரம் ஒரு படப்பிடிப்பில் தான் சந்தித்தோம். ஒருமுறை நான் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஓடி வந்து கொண்டிருந்தார் விஜி.

அப்போது என்னிடம் எனக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டாமா என்று தனக்கு வாய்ப்பு இல்லாததை கூட வெளிப்படையாக கூறிய ஒரு மனிதன் தான் விஜயகாந்த். இவ்வளவு சீக்கிரம் சென்று விடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் விஜயகாந்துக்கும் என்ன சம்பந்தம் ? ஆனால் கடைசி வரைக்கும் நின்றவர். யாராலும் அப்படி நிற்க முடியாது.

நானும் சரத்குமார் உள்ளிட்டோரும் நடிகர் சங்கத்துக்காக உழைத்தாலும் கூட அதற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியான நபராக விஜயகாந்த் இருந்தார்.

உழவன் மகன் படத்தில் நடித்தபோது எனக்கு கால் உடைந்து விட்டது. ஆனாலும் விஜயகாந்த்துடன் இறுதிக் காட்சியில் சண்டை போட வேண்டும்.. நின்றபடியே சண்டைபோட்டு அந்த காட்சியை படமாகி முடித்து விட்டோம்.

ஆனால் இப்ராஹிம் ராவுத்தர் எனக்கு சம்பளம் கொடுக்கும்போது குறைத்து பேசினார். ஆனால் அவரை கடிந்து கொண்ட விஜயகாந்த் உடைந்த காலுடன் இன்று நடித்துக் கொடுத்திருக்கிறான், அவன் கேட்பதை குறைக்காமல் கொடு என்று கூறினார். அந்த அளவுக்கு தாயுள்ளம் கொண்டவர் விஜயகாந்த்.

அவருக்கு குடும்பம் கூட இரண்டாம் பட்சம் தான்.. இந்த கலை உலகச் சேர்ந்தவர்கள் தான் முதலில்.. அவர்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டார். இனி விஜயகாந்த் கிடைப்பாரா? என்றால் தெரியவில்லை. ஆனால் நம்முடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியும்” என்றார்..

*நடிகர் ஜெயம் ரவி பேசும்போது,*

“எல்லோரும் இறந்த பிறகு கடவுளாகி விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில பேர் தான் வாழும்போதே கடவுளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

நிறைய அனுபவங்கள் அவருடன் எனக்கு இருந்தாலும் அதை நான் எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். பகிர்ந்து கொள்ள கூட எனக்கு தோணவில்லை. ஆனால் அவர் நம்முடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நமக்காக எவ்வளவோ விட்டு விட்டு சென்றிருக்கிறார். அவரைப்பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை. ஒரு நடிகராக, அரசியல்வாதியாக அல்ல.. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், மக்கள் அவரை எப்படி தங்கள் மனதில் வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லும் ஒரு சிறு செய்தியாக இடம் பெற்றாலே போதும். அவர் தனது படத்தில் சொன்னது போல சத்ரியனுக்கு சாவு இல்லை என்று தான் நானும் சொல்கிறேன்” என்று பேசினார்.

Jayam Ravi speech about Captain Vijayakanth

வாழும் போதும் வாழ்ந்த பிறகும் கடவுளாக இருப்பவர் விஜயகாந்த்.. – விஷால்

வாழும் போதும் வாழ்ந்த பிறகும் கடவுளாக இருப்பவர் விஜயகாந்த்.. – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற

*நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது,*

“சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில் வாழும் ஒரு மனிதனாக, இந்த கலைத்துறையில் ஒரு மேதாவி கேப்டன் விஜயகாந்த் நடித்த அதே கலைத்துறையில் ஒரு நடிகனாக, அவருடைய ரசிகனாக, அவர் இயங்கிக் கொண்டிருந்த இந்த நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, ஒரு பொதுச் செயலாளராக தேமுதிகவிற்கு வாக்களித்த ஒரு வாக்காளராக எல்லா வகையிலும் இங்கு வந்தவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் சொல்வது போல ஒருவர் இறந்த பின்பு தான் அவரை சாமி என்று சொல்வார்கள். வாழும்போதே சில மனிதர்கள் தான் அப்படி பெயர் வாங்குவார்கள். அப்படிப்பட்டவர் தான் நம் கேப்டன்.

படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் சரிசமமான சாப்பாடு கிடைக்க வேண்டும் என எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தியவர். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் நாங்களும் இப்போது முயற்சி செய்து வருகிறோம்.

விஜயகாந்த் அண்ணன் மறைவின் போது, நாங்களும் கூட இருந்து மரியாதை செலுத்தி இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நானும் கார்த்தியும் ஊரில் இல்லை. முதலில் அந்த குடும்பத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சண்முகபாண்டியனிடம் நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. கேப்டன் வளர்ந்து வந்த பல நடிகர்களுக்கு ஒரு தூணாக நின்று அவர்களை வளர்த்து விட்டார்.

உங்க வீட்டுப் பிள்ளையாக நான் சொல்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் நீயும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை உனக்கு இருந்தால், நான் வருகிறேன்.. எப்படி கேப்டன் அண்ணன் பலருக்கு துணையாக நின்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்தாரோ அதேபோன்று என்னை நீ பயன்படுத்திக் கொள்வதற்கு ஆசையாக இருந்தால் நான் இருக்கிறேன் உனக்காக..

நீயும் இதே போன்று ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்பது எனது ஆசை. அதை நான் ஒரு பரிகாரமாகவே நினைத்துக் கொள்கிறேன்.

அவரை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தோன்றும் ஒரே விஷயம் அவரது தைரியம். எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மனதில் இருந்து தான் பேசுவார். நான் அவரை நேரில் சந்தித்தபோது அருகில் இருந்த பிரேமலதா அம்மா, நடிகர் சங்க பத்திரத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது தன்னுடைய நகைகளை எல்லாம் பீரோவில் இருந்து எடுக்க செய்துவிட்டு அந்த பத்திரத்தை பொக்கிஷமாக அதில் வைத்து பாதுகாத்தார் கேப்டன்.. அந்த அளவிற்கு சங்கத்தின் மீது ரொம்பவே ஈடுபாட்டுடன் இருந்தார் என்று கூறினார்.

அனைவரும் சொல்வது போன்று இந்த தமிழ்நாட்டில் ஒரு தலைவனை நாம் அனைவரும் மிஸ் பண்ணுகிறோம். சினிமாவில் ஈகோ இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆனால் அப்படி ஈகோ இல்லமால் இருந்த ஒருவர்தான் விஜயகாந்த்.

54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலகநாயகன் விஜயகாந்த் தான். 54 வீடுகளில் விளக்கேற்றியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். வேறு எந்த நடிகருக்கும் இந்த தைரியம் வராது. இயக்குனராக வேண்டும் என நினைத்தபோது, திரைப்பட கல்லூரியில் சேர வேண்டும் என்கிற ஆசை வந்ததும், இயக்குநர் ஆர்கே செல்வமணியிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற எண்ணம் வந்ததற்கும் காரணம் கேப்டன் தான். எங்களைப் போன்ற நடிகர்கள் மீது புகார்கள் இருக்கும்.. ஆனால் எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாத நடிகர் விஜயகாந்த் ஒருவர் தான்” என்று கூறினார்.

*கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் பேசும்போது,*

“நான் முதல்முறையாக சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் தனத்தை என்ன சொன்னார் என்றால், எல்லோரும் வருவதற்கு முன்பே 6 மணிக்கு முதல் ஷாட் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே அங்கே இருக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் தயாரிப்பாளர் நம்மால் நஷ்டமடைய கூடாது அதேபோல இயக்குனருக்கும் பக்கபலமாக இருந்து வேலைகளை முடிக்க வேண்டும் சொல்லி இருக்கிறார், அவர் சொன்னதை முடிந்த அளவு நான் கடைபிடித்து கொண்டு இருக்கிறேன். அதேபோல சனி ஞாயிறுகளில் எங்கள் வீடு தேடி வந்து அப்பாவை சந்திக்கும் நபர்கள் அனைவருக்கும் எங்களையும் உணவளிக்க சொல்லி ஆரம்பத்தில் இருந்தே வளர்த்தார்.

அதையே தான் இப்போதும் செய்து வருகிறோம். இனியும் தொடர்ந்து செய்வோம். அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சகாப்தம். அவரது இறுதி ஊர்வலத்திற்காக திரண்ட மக்களை பார்க்கும்போதே அது தெரிந்திருக்கும். அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு சிறப்பான நிகழ்ச்சி.. காரணம் அப்பாவை பொறுத்தவரை எல்லாமே சினிமா தான்.. வீடு, நடிகர் சங்கம், படப்பிடிப்பு என மாறிமாறி சுழன்றவர். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

*கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசும்போது,*

“சிறுவயதில் இருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்ததை விட என் தந்தையின் முகத்தைத்தான் அதிக முறை பார்த்துக் கொண்டிருப்பேன். இதுவரை நானும் என் தம்பியும் எந்த ஒரு நடிகர் சங்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை. இதுதான் முதன்முறையாக கலந்து கொள்ளும் நிகழ்வு. அது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. எங்கள் தந்தையின் கனவை நிச்சயமாக நானும் சண்முக பாண்டியனும் நிறைவேற்றுவோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன், கடந்த பத்து வருடங்களாக அவர் மிகுந்த உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு இருந்த வில் பவர் காரணமாக அனைத்தையும் தாங்கினார். வேறு ஒரு நபராக இருந்திருந்தால் நிச்சயமாக இதை தாங்கி இருக்க முடியாது. அவர் இறக்கும் முன்பு வரை கூட நல்ல நினைவாற்றலுடன் தான் இருந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட எங்கள் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து யூடியூப்பில் அவர் நடித்த படங்களின் பாடல்களை போடச்சொல்லி கேட்டுக் கொண்டுதான் இருந்தார். சிசிடிவி கேமராவில் பார்க்கும்போது அவர் தாளம் போட்டு அந்த பாடல்களை என்ஜாய் பண்ணி கேட்டு கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதேபோல கேப்டனின் இறுதி அஞ்சலியில் நிறைய பேர் வந்திருக்கலாம். சில பேரால் வர முடியாமல் போய் இருக்கலாம். இதில் யாரையுமே நாங்கள் தவறாக நினைக்கவில்லை. அவர்கள் மீது வருத்தமும் இல்லை.. கேப்டனுக்கும் யார் மீது எந்த வருத்தமும் இல்லை” என்று கூறினார்.

Vijayakanth proved he is living God says Vishal

நல்லவனுக்கு மதிப்பில்லை என்றார்கள்.. ஆனால் விஜயகாந்த் நிரூபித்து விட்டார்… – கார்த்தி

நல்லவனுக்கு மதிப்பில்லை என்றார்கள்.. ஆனால் விஜயகாந்த் நிரூபித்து விட்டார்… – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற

*தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி பேசும்போது,*

“கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எவ்வளவோ பேரை அவர் வளர்த்து விட்டுள்ளார். அவருடன் பணியாற்றியவர்கள் அவருடைய குணாதிசயங்களை பற்றி சொல்ல சொல்ல கேட்கவே மலைப்பாக இருக்கிறது.

வரலாற்றில் தான் இது போன்ற மக்கள் இருப்பார்கள் என படித்துள்ளோம். அப்படி உண்மையாகவே நம்முடன் வாழ்ந்த ஒருத்தர் கேப்டன் என நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

அவர் இருந்த தமிழ் சினிமாவில் நாமும் இருக்கிறோம் என்பதே ரொம்ப பெருமையாக இருக்கிறது. நடிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என அவர் வாழ்ந்து காட்டியது போல் இனிமேல் நாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் அவரை மனதில் நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஒரு மனிதன் முற்றிலும் அன்புடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் பணத்தின் மீது பெரிய ஆசை இல்லாமல் நல்லவனாகவே இருந்தால் இந்த சமுதாயம் மதிக்குமா என்றால் மதிக்காது என்று தான் கேள்விப்பட்டு உள்ளோம்.

ஆனால் அப்படி ஒருத்தர் இருந்தால் மக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை அவர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றுள்ளார்.

மறுபடியும் மனிதன் மீதும் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை வருவது இதனால் தான். இப்படி வாழ்ந்தால் இப்படி மரியாதை கிடைக்கும் என எடுத்துக்காட்டி சென்றுள்ளார்.

கேப்டனின் நிர்வாக திறமை பற்றி நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். நாங்கள் எல்லாம் புதிதாக அனுபவம் இல்லாமல் வந்து ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தும் போதும் அதில் வருபவர்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது கேப்டனுடன் பயணித்தவர்கள் அவருடைய செயல்பாடுகள் குறித்து கூறும்போது அதை முன்னுதாரணமாக வைத்து இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என அடுத்தடுத்து முயற்சி எடுத்து வருகிறோம். எங்களுக்கெல்லாம் ஒரு பென்ச் மார்க்கை உருவாக்கி வைத்து விட்டார் கேப்டன். அதை நாங்கள் சந்திப்பதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பது மட்டும் எங்களுக்கு தெரிகிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து அன்பாக பேசுவதே அவருடைய ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன். அவருடைய ஆசிர்வாதத்தால் நடிகர் சங்க கட்டடம் விரைவில் முடிய வேண்டும் என விரும்புகிறேன். அவரது நினைவுகளை இங்கே அமர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அவர் இறந்த சமயத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவருமே கலந்துகொள்ள முடியவில்லை என்பதில் மிகப்பெரிய வருத்தம். அந்த வருத்தத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆற்றிக் கொள்கிறோம். எல்லோரும் சொன்னது போல கேப்டனின் இரண்டு பிள்ளைகளும் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறோம். மக்களுடைய ஆசிர்வாதம் உங்கள் இருவருக்குமே இருக்கும்” என்று கூறினார்.

*நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது,*

“1984ல் அண்ணன் ராதாரவியின் தந்தை எம்.ஆர் ராதா அவர்களின் சிலை திறப்பு விழா அவரது சொந்த ஊரில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற போது கேப்டன் உள்ளிட்டருடன் ஒரு சினிமா பட்டாளமே அங்கே சென்று கலந்து கொண்டோம். அந்த சமயத்தில் கலைஞர் வந்து செல்வதற்குள் மிகப்பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் விஜயகாந்த் வேட்டியை மடித்துக்கொண்டு அனைத்தையும் சமாளித்து அந்த நிகழ்வை திறம்பட நடத்த உதவினார். போராளிக்கு மறைவு இல்லை என்று கலைஞர் சொல்வார். அதேபோலத்தான் நம் கேப்டன் பிரபாகரனுக்கும் மறைவு இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.

ஒரு முறை அவரது படப்பிடிப்பின் போது கர்நாடகா பகுதியில் சில நபர்கள் நடிகைகள் சிலரிடம் தவறாக நடக்க, அந்த படத்தில் துணை மேக்கப் மேனாக பணியாற்றிய சண்முகம் என்பவர் அவர்களை அடித்து விரட்டினார். அதன்பிறகு இன்னும் சிலர் கூடி மிகப்பெரிய பிரச்சனை ஆனபோது விஜயகாந்த் தலைமையில் படக்குழுவினர் களம் இறங்கி அவர்களை விரட்டி அடித்தனர். ஆனால் சண்முகம் காரணமாகத்தான் பிரச்சனை ஏற்பட்டது என அவரை அந்த படத்தில் இருந்து நீக்க சொன்னார் தயாரிப்பாளர். இந்த தகவல் விஜயகாந்த்திற்கு சென்றதும் நான் செய்ய வேண்டிய வேலையைத்தான் முதல் ஆளாக சண்முகம் செய்திருக்கிறார்.. அவர் நாளை இந்த படப்பிடிப்பில் இல்லை என்றால் நான் இந்த கலந்து கொள்ளப்போவது இல்லை என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதன் பிறகு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் அமர்ந்திருந்த சண்முகத்தை அழைத்து வந்தனர். அப்படி எப்போதுமே தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்திற்காக விஜயகாந்த் குரல் கொடுத்திருக்கிறார். இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டது போல கேப்டனின் பெயரை நடிகர் சங்க வளாகத்திற்கு வைப்பது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் அனைவருடனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்” என்றார்.

*நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது,*

“உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே கேப்டனுடன் நெருங்கி பழகி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவருக்காக ஒரு கதை தயார் செய்து அவரிடம் சொன்னபோது ராவுத்தரை போய் பார் என்றார். ராவுத்தருக்கும் கதை பிடித்து விட்டது. உங்களிடமும் கதை சொல்கிறேன் என்றபோது அதெல்லாம் வேண்டாம் உன்னுடைய வேலை, திறமையை நான் பார்த்திருக்கிறேன். போய் படத்திற்கான வேலைகளை ஆரம்பி என்று என்னை முதன்முதலாக இயக்குனராக மாற்றியவரே விஜயகாந்த் தான். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை தொடங்க முடியவில்லை. பின்னர் அதே கதை தான் சூர்யா நடிக்க ஆதவன் என்கிற படமாக வெளியானது. கஜேந்திரா படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் கட்சி ஆரம்பித்த அந்த சமயத்தில் நானும் அவரது கட்சியில் சேர்ந்து கொள்கிறேன் என கூறினேன். அப்போது அவர் நீ என்னுடைய கட்சியில் இணைந்து கொண்டால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவாளர்கள் உன்னை அவர்களது படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்கள். நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாய். உன் தொழிலை நீ கெடுத்துக் கொள்ளாதே” என்று அறிவுரை சொன்னார்” என்று கூறினார்.

Karthi emotional speech about Captain Vijayakanth

‘எக்ஸிட்’ படத்திற்காக மிருகமாகவே மாறிய நான்கு கால் மலையாள நடிகர்

‘எக்ஸிட்’ படத்திற்காக மிருகமாகவே மாறிய நான்கு கால் மலையாள நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பசங்க’ திரைப்படம் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்றே வளர்ந்து :கோலி சோடா’ வில் பேசப்பட்டு ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து அங்கீகாரம் பெற்றவர் நடிகர் ஸ்ரீராம்.

இவர் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘எக்ஸிட்’ இது ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.

இது ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கிறது. எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி . உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கி உள்ளார். ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

நாயகன் ஸ்ரீராம்.. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அவரையே நாயகனாக நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த விஷாக் நாயர் இதில் ஒரு மிருகமாகவே மாறி நடித்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தில் வரும் விநாயகன் போல, பொதுவாகப் படங்களில் வரும் பாத்திரங்களுக்கு மிருக குணத்தை மட்டும் தான் காட்டுவார்கள்.

எக்ஸிட்

இப்படத்தில் வரும் வில்லனோ உடல் அசைவுகளிலும் மாறி,ஒரு மிருகத்தைப் போல நான்கு கால்களால்தான் நடப்பார். பேசவே மாட்டார்.

ஆனால் உணர்ச்சிகள் காட்டுவார்.மனித மாமிசத்தைக் கடித்து உண்ணுவது போன்ற தனது குரூர செயல்களின் மூலம் பதற வைப்பார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அசல் மிருகத்தை நினைவூட்டிப் பார்ப்பவர்களை மிரட்டும்.

இவர்கள் தவிர ரனிஷா ரஹிமான், ஹரிஷ் பெராடி, வைஷாக் விஜயன், ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்குத் திரைக்கதை – அனீஷ் ஜனார்தன் – ஷாஹீன்,கதை – அனீஷ் ஜனார்தன்,
ஒளிப்பதிவு – ரியாஸ் நிஜாமுதீன் ,
படத்தொகுப்பு – நிஷாத் யூசுப், இசை – தனுஷ் ஹரிகுமார், விமல்ஜித் விஜயன்,
ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவி, கலை – எம். கோயா,
ஆடை வடிவமைப்பு – சரண்யா ஜீபு என சினிமாவின் மீது தாகம் கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளது.

தமிழில் திரில்லர் படங்கள் ஏராளம் வந்தாலும் அவற்றில் சில படங்கள் ஜாலி, கேலி என்று தடம் மாறிச் சிரிக்க வைப்பது உண்டு.

ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும்.அந்த திகில் மனநிலையைக் கடைசி வரை மாற்றாமல் இருக்கும்.

இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகிறது. அதே மாதம் ஒன்பதாம் தேதி மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ வருகிறது .

அதற்குப் போட்டியாக இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.அதிலிருந்து இந்தப் படத்தின் மீது படக்குழுவினர் வைத்துள்ள நம்பிக்கை புலப்படும்.

எக்ஸிட்

Sreeram starrer Survival Thriller titled EXIT

More Articles
Follows