தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
இந்தப் படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற காவலா… தலைவர் அலப்பறை… உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த இசை விழாவில் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் டீசர் / ட்ரெய்லர் குறித்த எந்த அறிவிப்பு வெளியாகாதால் ரஜினி ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.
மேலும் இது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் போதுமான பிரமோஷன் இருந்தால் மட்டுமே நல்ல வசூலும் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில வருடங்களில் வெளியான பொன்னியின் செல்வன், விக்ரம், ஆர் ஆர் ஆர், புஷ்பா, கேஜிஎஃப் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இந்த படங்களின் வெற்றிக்கு அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரமோஷன் செய்தனர் என்பதே மிகப்பெரிய காரணம்.
தற்போது ‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினி மோகன்லால் சிவராஜ்குமார் சுனில் ஜாக்கிசரஃப் உள்ளிட்ட இந்திய பிரபல நட்சத்திரங்களர நடித்துள்ளனர்.
இவர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிக அளவில் அதிகரிக்க கூடும். ஆனால் இதுவரை எந்த ஒரு ப்ரோமோஷனிலும் அக்கறை காட்டாததால் சன் டிவி நிறுவனத்தின் மீது ரஜினி ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
எனவே இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் இன்றோ அல்லது நாளையோ எதிர்பார்க்கலாம்.
No Trailer and No promotion for Jailer Rajini fans upset