தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தலைவி என்ற படத்தில் விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணவத் நடித்து வருகிறார்.
அதே போல குயின் என்ற இணையதள தொடரை கவுதம் மேனன் இயக்க ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
இந்த படங்களை தன் அனுமதியில்லாமல் எடுக்க கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அடிக்கடி கூறிவந்தார்.
இந்த நிலையில், தலைவி, குயின் படங்களை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும் கூடாது. அதற்கு தடை விதிக்கக் கோரி தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம்…
முழுக்க முழுக்க இது கற்பனைப் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அந்த படங்களுக்கு விதிக்க முடியாது என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
No ban for Thalaivi and queen web series
