தெறி இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ

தெறி இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atlee stillsராஜா ராணி, தெறி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லி.

எனவே இவரது 3வது படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆனால் இயக்குனர் வேலைக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, தயாரிப்பாளராக பிஸியாக இருந்து வருகிறார்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இத்துடன் மலையாளத்தின் பிரபல ஹீரோ நிவின்பாலி நடிக்கவுள்ள நேரடி தமிழ் படம் ஒன்றையும் தயாரிக்கிறார்.

அட்லியின் நண்பரும் சூர்யா இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரெமோ தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரிக்கும் படத்திலும் நிவின்பாலி நடிக்கவிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

முதன்முறையாக இணையும் சூர்யா-கீர்த்தி சுரேஷ்

முதன்முறையாக இணையும் சூர்யா-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya and keerthi suresh stillsஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இதனையடுத்து கபாலி புகழ் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது,

ஆனால் இதனிடையில் கொம்பன் முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்கள் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கீர்த்தி தேர்ந்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ வெற்றி விழா குறித்து ரஜினியின் ‘மகிழ்ச்சி’ தகவல்

‘கபாலி’ வெற்றி விழா குறித்து ரஜினியின் ‘மகிழ்ச்சி’ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajinikanthதாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. இப்படம் கடந்த ஜீலை மாதம் 22ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

இப்படம் ரூ. 320 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தாணுவே உறுதி செய்திருந்தார்.

விரைவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இதன் வெற்றி விழா கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் ரஜினி தொலைபேசி வாயிலாக தெரிவித்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாம்.

கபாலி இப்படி ஒரு மகத்தான வெற்றியை பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் குருநாதருக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி.

இயக்குநர் ரஞ்சித்துக்கு பெரிய உயரங்கள் காத்திருக்கிறது.

இதன் பிரம்மாண்ட விழாவுக்கு தாணு தயாரான போது அவருடைய கையைக் கட்டிப் போட்டேன். இனிமேல் கட்டிப் போட மாட்டேன்” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

‘தொடரி’ இழுபறி தொடர்கிறதே… ‘கொடி’யுடன் தனுஷ் வெயிட்டிங்

‘தொடரி’ இழுபறி தொடர்கிறதே… ‘கொடி’யுடன் தனுஷ் வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thodari movie stillsசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் தொடரி.

இப்படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் படம் வெளியாகவில்லை.

முதலில் கபாலி ரிலீஸ் ஆனதால் தள்ளிப் போனதாக கூறப்பட்டது.

தற்போது ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கும் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் செப்டம்பர் மாதத்தை தொட்டு விடும் எனத் தெரிய வந்துள்ளது.

விரைவில் இதன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸை கன்பார்ம் செய்தே பின்னரே ‘கொடி’ படத்தை விளம்பரப்படுத்த இருக்கிறாராம் தனுஷ்.

சிவகார்த்திகேயன் வரிசையில் புதுப்புது ஹீரோக்கள்

சிவகார்த்திகேயன் வரிசையில் புதுப்புது ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanநாம் முன்பே கூறியது போல விஜய் டிவிக்கும் வெள்ளித்திரைக்கும் ஒரு பெரிய மேம்பாலமே கட்டி விடலாம் என தோன்றுகிறது.

விஜய் டிவியில் பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் இன்று சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.

சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா. ஆனந்த் பலரும் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.
விரைவில் ஈரோடு மகேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் அமுதவாணனும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஜூலியும் நாலு பேரும் என்ற படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். ஜூலி கேரக்டரில் ஒரு நாய் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

சீனுராமசாமியை முட்டாள் என நினைத்தேன்… பாலா பரபரப்பு பேச்சு

சீனுராமசாமியை முட்டாள் என நினைத்தேன்… பாலா பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaவிஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

“பாலுமகேந்திராவிடம் இருந்துதான் நான், சீனுராமசாமி எல்லாம் வந்தோம்.

எனக்கு முன்பே அவன் பட இயக்க ஆரம்பித்துவிட்டார். அதனையறிந்த நான்… அவன் முட்டாபய ஆச்சே. அவன் இயக்குகிறானா? என்றுதான் நினைத்தேன்.

எப்போதும் பார்த்தாலும் சினிமா சினிமா என்றே கழுத்தை அறுப்பான்.

ஏனென்றால் சினிமாவை அந்தளவு நேசிக்கிறார் சீனு. அவரின் முந்தைய படங்களை போல் இந்த படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

More Articles
Follows