பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்; குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்: நிவேதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட காஷ்மீர் மாநில இஸ்லாமிய சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவைக் கதி கலங்க வைத்துள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்களும் இது தொடர்பான ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில்..

நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. ஆண்களும், பெண்களும், சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்.

5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்லுவேன். எனக்கு அப்போது என்ன நடந்தது கூட எனக்கு தெரியாது.

பாலியல் தொல்லைகள் கொடுப்பது எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை.
நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு?, எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது. டியூசனில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள்.

நாம் போலீசை நம்பியே இருக்க முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.

தவறு நடந்தால் தட்டி கேளுங்கள். தற்போதும் கூட் எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் தொல்லையை அழித்தால்தான் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்’ என்றார்.

Nivetha pethuraj reaction 8 year girl Asifa murder issue

சென்சார் தேதியை வைத்தே பட ரிலீஸ் தேதி; தயாரிப்பாளர் சங்கம் புது முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 நாட்களாக தமிழ் சினிமாவில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கமும் புதிய டிஜிட்டல் சேவையை செய்யும் ஏரொஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

ஸ்டிரைக் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருந்தாலும், மேலும் நிலவி வரும் மற்ற பிரச்சினைகளையும் களைந்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட வெளியீட்டில் ஒரு புதிய மாற்றத்தை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது பெரிய படங்களோ, சிறிய படங்களோ, எந்தப் படம் முதலில் சென்சார் செய்யப்படுகிறதோ, அந்த வரிசைப்படிதான் படங்களை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம்.

இந்த திட்டத்துக்கு எல்லா தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamil movie release will be decided by Censor date

ஆசிபா வன்கொடுமைக்கு நியாயம் கேட்போம்; அழைக்கும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

அந்த சிறுமியை பல நாட்கள் வைத்திருந்து 3 போலீசார் உட்பட 8 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்றப் போராடுவோம் என்று நடிகை வரலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…

”நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தைக் கொண்டாட மனம் ஏற்கவில்லை.

இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுக்கொள்ளும் நேரம் இது.

இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கெனவே காலம் கடந்துவிட்டது.

அரசியல்வாதிகள், பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா? நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்.

ஜல்லிக்கட்டு, காவிரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்.

ஒரு குழந்தையின், ஒரு உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா?!? நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம்.

பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்றப் போராடுவோம்.

இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன், இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

பாலியல் வன்கொடுமை என்பது நாம் சகித்துகொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை.

நாம் அனைவரும் இது நம் பிரச்சினை இல்லை என்று நினைத்தால், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரியுமா இது மாதிரி ஒரு சம்பவம் தங்களுக்கு நேரும் என்று? ஆனால், அது நடந்தது. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.

இந்த ஆத்திரத்தையும் வலியையும் புரிந்துகொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிதத் தன்மையுடையவராக இருந்தாலே போதுமானது. நாம் ஏற்கெனவே மிகவும் காலம் தாழ்த்திவிட்டோம்.

இதனை எதிர்ப்பதற்கும், உங்கள் மனசாட்சி உறுத்துவதற்கும் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும்? நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட அழைக்கவில்லை,

ஆனால் சமூக வலைதளங்களின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள்.
கோழைகளாக இருக்காதீர்கள். உங்களை இரைஞ்சுகிறேன்.

கடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்குமுன்னே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம்.

என்னை ட்விட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலை நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன்.

இது அமைதி காக்கும் நேரமல்ல. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடு.. எங்களுக்கு நீதி வேண்டும் என போராடும் நேரமிது.

நான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன்.

உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது.

இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்கக் கூடாது. அதற்கு மரண தண்டனை ஒன்றே ஒரே தீர்வு” என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

Varalakshmi invite all for the justice for 8 years old girl Asifa

ராயல்டி தொகை பாடகர்களுக்கு கிடைத்த புதையல்.: எஸ்.பி.பி. பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய பின்னணி பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் பாடகர்களுக்கு ரூ.51 லட்சத்து 77 ஆயிரத்து 704 ‘ராயல்டி’ தொகை வழங்கும் விழாவும் 8-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ள பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், மனோ, எஸ்.பி.பி.சரண் பாடகிகள் பி.சுசீலா, வாணிஜெயராம், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜேசுதாஸ் பேசியதாவது:-

“தேசிய விருதை 8-வது முறையாக பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி.

பாடல்கள் பாடும்போது பணம் எவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இல்லை. சுருதி, உணர்வுகள் பாடலில் நன்றாக இருக்கிறதா? என்பதை மட்டும்தான் யோசிப்பேன்.

பாடகர்களுக்கு ராயல்டி கிடைப்பதன் மூலம் மரியாதை கிடைத்துள்ளது.” என்றார்.

பாடகரும் நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியன் பேசியதாவது…

“ஜேசுதாசுக்கு 8-வது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

முன்பெல்லாம் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும்போது இசைக்கருவிகள், கலைஞர்கள் என கல்யாண கச்சேரி மாதிரி இருக்கும்.

ஆனால் இப்போது அப்படியில்லை. பாடகர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

என்னைப் போன்ற சிலர் டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோம்.

இந்த நேரத்தில் பாடகர்களுக்கு ராயல்டி தொகை புதையல் மாதிரி கிடைத்து இருக்கிறது.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார்.

Indian Singers Rights Association event updates

அம்பேத்கர் சிலைக்கு A படம் குழுவினர் அம்பேத்கர் வேடத்தில் மரியாதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 14ல் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “A படம்” படக்குழுவினர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

இப்படம் சமூக மாற்றத்திற்காக எடுக்கப்படுகிறது அதிகார வர்க்கத்தினரால் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருமென அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அம்பேத்கரராக நடிக்கும் ராஜகணபதி அவரின் உருவத்தில் வந்திருந்தார்.

இப்படத்தினை வேலு பிரபாகரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சிவா.கோ எழுதி இயக்குகிறார். MAM TEAM என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.

A movie team pays respect to BR Ambedkar Statue

60 ஆண்டுகளுக்கு முன்பே 11 கோடி அள்ளிய நாடோடி மன்னன்; இப்பவும் ஹிட்டு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1958-ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”.

அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான்.

இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள்.

இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.

இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

MGRs Nadodi Mannan 25th Day Celebrations Event News

More Articles
Follows