தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிங்கு பெரியசாமி இயக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து வருகிறார் மலையாள நடிகர் துல்கர் சல்மான்.
நாயகியாக ரிது வர்மா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரக்ஷன் நடிக்கிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் காதலர் தினத்தில் வெளியாகி வைரலானது.
இப்படத்தை முடித்துவிட்டு ரா.கார்த்திக் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர்.
பயணம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் துல்கர் ஜோடியாக 4 நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேகா ஆகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இதன் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளனர்.
இதில் ஒரு நாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவேதா நடிப்பில் டிக் டிக் டிக் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.
இதனையடுத்து விஜய் ஆண்டனியின் `திமிரு பிடிச்சவன்’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார்.