பெற்றோர் சொல்லத் தயங்குவதை குழந்தைகளுக்கு சொன்ன ‘நிசப்தம்’

பெற்றோர் சொல்லத் தயங்குவதை குழந்தைகளுக்கு சொன்ன ‘நிசப்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nisabdham 3குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்”நாரோ மீடியா ” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இந்நிலையில், மிராக்கிள் பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படமாக தயாரித்த ‘நிசப்தம்’ படத்தினை, எட்டு வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள்.

நிசப்தம் படம் பார்த்த குழந்தைகளும் பெற்றோரும் கண்ணீருடன் வெளியே வந்தனர். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சொல்லத் தயங்கும் பல நல்ல கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த மனிதம் ஃபவுண்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன் நோக்கம் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான விழிப்புணர்வு பெற வைப்பதாகும்.
படம் பார்த்த பின்னர் குழந்தைகள், மனிதம் ஃபவுண்டேசன் அறக்கட்டளையின் லோகோவை அறிமுகப்படுத்தினர்.

அப்போது, நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு நாசர், முதன்மை செயல் இயக்குநர் செல்வி பிரபாலா சுபாஷ் ஆகியோரும், பேபி சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான ஒருங்கிணைப்பினை மக்கள் தொடர்பாளர்களான திரு A. ஜான் மற்றும் திரு யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Nisabdham movie special show for girl kids

nisabdham 2

சாவித்ரியாக கீர்த்தி நடிக்க; சமந்தாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?

சாவித்ரியாக கீர்த்தி நடிக்க; சமந்தாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Savithri Keerthy Suresh Samanthaநடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகா நடி எனவும் பெயரிட்டுள்ளனர்.

அப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானதை பார்த்தோம்.

இதில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.

அவர் சாவித்ரிக்கு கடும் போட்டியாக திகழ்ந்த ஜமுனா ராணி கேரக்டரில் நடிக்கிறாராம்.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Keerthy suresh and Samantha Characters in Savithri biopic movie

குற்றம்23-ஐ தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்த படம்

குற்றம்23-ஐ தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijayஅஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் டெரர் வில்லனாக நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர் அருண்விஜய்.

இதனையடுத்து அண்மையில் வெளியான குற்றம் 23 படத்தில் ஹீரோவாக நடித்து ரஜினி, ஷங்கர் உள்ளிட்டவர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இந்நிலையில் அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்துள்ளன.

தடையற தாக்க, மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் இந்த வெற்றி மாறன்.

After Kuttram 23 arun vijays confirmed his next project

தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்யும் ரஜினி-விஜய்-அஜித்

தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்யும் ரஜினி-விஜய்-அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay Ajithரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் சூட்டிங் முடியும் தருவாயை எட்டியுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இதனையடுத்து இப்படத்தை அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் செய்கின்றனர்.

ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ், சைனீஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதே நாளில் அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அட்லி இயக்கத்தில் உருவாகும் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini Vijay Ajith plans to give treat on Tamil new year

இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’யுடன் இணையும் நெட் பிலிக்ஸ்

இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’யுடன் இணையும் நெட் பிலிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Netflix Team visited Music composer Sam D Raj‘வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ்.

தற்போது VZ.துரை இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த ‘நெட்பிலிக்ஸ்’ எனும் நிறுவனம் பிரபலம் என்பது நாம் அறிந்ததே.

அந்த நிறுவனம் சமீபத்தில் இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’ அவர்களை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவில் சந்தித்து இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத ‘நெட்பிலிக்ஸ்’ நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கான் அவர்களின் ‘ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்’ மற்றும் ‘ரிலையன்ஸ் ஜியோ’யுடன் இணைந்து செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலம் வழங்குவதில் இந்த நிறுவனமே முதல் இடத்தில உள்ளது.

தற்போது அமெரிக்காவில் பிரபலமாகியுள்ள இந்த ட்ரெண்ட் 2018-க்குள் இந்திய தயாரிப்பு நிறுவங்களும் டிவி நிறுவனங்களும் பின்பற்றும்.

Netflix Team visited Music composer Sam D Raj

Netflix Team visited Music composer Sam D Raj

சூர்யா-கீர்த்திசுரேஷின் பட பர்ஸ்ட் லுக் & டீசர் தகவல்கள்

சூர்யா-கீர்த்திசுரேஷின் பட பர்ஸ்ட் லுக் & டீசர் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya tsk shooting spotவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறவுள்ள ஒரு ரொமான்ஸ் பாடலின் காட்சியை அண்மையில் முடித்துவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் சூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Suriyas Thaana serndha Kootam first look and teaser release

senthil tsk

 

More Articles
Follows