சரணின் ‘மார்கெட் ராஜா MBBS’ படத்தில் ஆரவ் & நிகிஷா பட்டேல்

சரணின் ‘மார்கெட் ராஜா MBBS’ படத்தில் ஆரவ் & நிகிஷா பட்டேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nikesha Patel signed with Aarav in Market Raja MBBS Directed by Saranஇயக்குநர் சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS என்ற படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்.

இதுகுறித்து நிகிஷா கூறியதாவது…

“நான் இந்தபடத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்திருக்கிறேன் மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.”

நிகிஷா படேல் தற்போது G.V. பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

சமீபத்தில் தான் இவர் T-series இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.

Nikesha Patel signed with Aarav in Market Raja MBBS Directed by Saran

களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது

களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)களவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது போல் சித்தரித்து இருந்தார். படத்தின் காப்பிரைட் உரிமையை பெற்றிருந்த மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன், படத்தின் தமிழக விநியோக உரிமையை தனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தார்.

படத்தின் தமிழக விநியோக உரிமை தங்களிடம் தரப்படாமல் இருந்ததால் தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி 6 வார இடைக்கால தடை பெற்றிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சிங்காரவேலன், விமல், சற்குணம், ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக மூன்றாம் எதிர்மனுதாரர் இயக்குநர் சற்குணம் நீதிமன்றத்தை அணுகி விமல் செய்து கொடுத்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அதனால் தடையில் இருந்து தனக்கு மட்டும் விலக்கு அளிக்க மனு அளித்தார்.

அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இயக்குநர் சற்குணம் மட்டும் படத்தை வெளியிட தடையில்லை எனவும், மற்றவர்கள் வெளியிட தடை நீடிப்பதாகவும், கூடுதல் ஆவணங்களுடன் மனுதாரர் மனுதாக்கல் செய்து வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்ய உள்ளது. வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட்டால், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும், கஸ்தூரி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

படத்திற்கு பகுதி தடை மட்டுமே நீங்கி இருப்பதால் பட வெளியீட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா?

தொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள்.

தமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா? பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்.

மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையாக நடிக்கும் பிரசன்னா

மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையாக நடிக்கும் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பெட்ரோல் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது.

எவ்வளவு விலை உயர்ந்தாலும் வேறு வழியில்லாமல் அதை உபயோகித்து வருகிறோம்.

இந்த பெட்ரோலுக்கு நிகராக குறைந்த விலையில் மூலிகைப் பெட்ரோல் என்ற திரவத்தை தயாரித்துள்ளதாக தமிழகத்தை சேர்ந்த ராமர் பிள்ளை பல ஆண்டுகளாக கூறி வருகிறார்.

இவரின் சில சோதனைகள் தோல்வியில் முடியவே இவரை அனைவரும அவமானப்படுத்தினர்.

ஆனால் அவர் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.

தற்போது, அவரது கதையை ஜி 5 என்ற நிறுவனம், வெப் சீரியலாக தயாரிக்கிறது. இந்த சீரியலுக்கு திரவம் என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த சீரியலில், ராமர் பிள்ளையாக நடிகர் பிரசன்னா நடிக்கிறார்.

கதையின் கேரக்டரில் இவருக்கு ரவி பிரகாசம் என பெயர் வைத்துள்ளனர்.

கோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்?

கோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)பெரும் எதிர்பார்ப்பில் உருவான விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று (மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரூ. 4 கோடி நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது.

இந்த நிலையில் தன் சம்பளத்தில் இருந்து 1 கோடியைக் குறைத்துக் கொண்டு வெளியிட சொன்னாராம்.

மேலும் ‘அயோக்யா’ பட மற்ற மொழி டப்பிங்க்கு முதலில் மறுத்த விஷால் இப்போது டப்பிங் செய்யலாம் என்றும் சொல்லிவிட்டாராம்.

அத்துடன் டப்பிங் படம் மூலம் வரும் 2 கோடி ரூபாயையும் தயாரிப்பாளரே எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி இருக்கிறாராம்.

ஆக படம் வெளி வந்தே ஆக வேண்டும் என விரும்புகிறாராம் விஷால்.

எனவே இன்று மாலை படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அயோக்யா அப்டேட்ஸ்….

1. 20 கோடி செலவில் உருவான அயோக்யா படம் 40 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்திருக்கிறது. தமிழ்நாடு உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.

2. கேரளா, கர்நாடகா, வெளிநாடு உரிமைகள் மூலமாகவும் 5 கோடி கிடைத்துள்ளதாம்.

3. ‘அயோக்யா’ தயாரிப்பாளரின் ‘ஸ்பைடர்’ பட நஷ்டமும் இப்போது பிரச்சினை ஆகியுள்ளது.

‘தர்பார்’ ரஜினியை மிரட்ட மலையாள வில்லன் நடிகர்.?

‘தர்பார்’ ரஜினியை மிரட்ட மலையாள வில்லன் நடிகர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chemban Vinod Jose denies his villain role in Rajinis Darbarலைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார்.

இப்படத்தின் மூலம் ரஜினியை முருகதாஸ் முதன்முறையாக இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மும்பையில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது. கிட்டதட்ட 3 மாதங்கள் அங்கு சூட்டிங்கை நடத்த உள்ளனர்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோருடன் பாலிவுட் நடிகர்கள் பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், மலையாள வில்லன் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் அவர்களும் தர்பாரில் இணைவதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அவர் கூறுகையில்… தர்பார் படத்தில் நான் நடிப்பதாக செய்திகளில் உண்மையில்லை. ஆனால் தர்பார் டீம் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனினும் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.

Chemban Vinod Jose denies his villain role in Rajinis Darbar

More Articles
Follows