அம்சமாக இருந்த அஞ்சலி-ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அழகுடன் நடிக்கவும் தெரியும் என சில நாயகிகளே நிரூபித்து உள்ளனர்.

அவர்களில் நடிகை அஞ்சலியும் ஒருவர். கற்றது தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் ஸ்லிம் ஆக இருந்த இவர், அண்மைக் காலமாக கொஞ்சம் குண்டாகி விட்டார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

எனவே மீண்டும் தனது உடலை எடையை குறைத்து தனது ஸ்லிம் பாடியை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவரைப் போல ஹன்சிகாவும் தன் உடல் எடையை குறைத்து உள்ளார்.

அவரும் தன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சின்ன குஷ்பூவாக இருந்த ஹன்சிகா இப்படி ஒல்லியாகிட்டாங்களே.. உங்களுக்கு அழகே குண்டுதான் என்றும் சிலர் வர்ணித்து வருகின்றனர்.

தற்போது இந்த இரண்டு படங்களும் இணையத்தில் வைராகி வருகிறது.

எந்த கேரக்டர் என்றாலும் நடிக்க காத்திருக்கும் புதுமுக நடிகர் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் பலர் அறிமுகமானாலும், அவர்களில் சிலர் மட்டுமே பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வரிசையிலான ஒரு நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் சுரேஷ்.

‘கிருஷ்ணதுளசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சுரேஷ், அடுத்ததாக ‘ஒரு முகத்திரை’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.

அனுபவ நடிகர் ரஹ்மானுடன் அவர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்ததோடு, அப்படத்திற்காக தன்னை இரண்டு விதமான கெட்டப்பில் காட்டியவர், ஒரு கெட்டப்புக்காக ஒரு வருடமாக தாடி வளர்த்தார்.

ஆரம்பத்திலேயே கதாபாத்திரத்திற்காக மெனக்கெடும் நடிகர் என்ற பெயர் வாங்கியதோடு, சிறந்த புதுமுக நடிகருக்கான எடிசன் விருதையும் பெற்றார்.

தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சுரேஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம்.

இருந்தாலும் வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் நல்ல கதாபாத்திரமாக இருந்தால், எந்த வேடங்களிலும் நடிக்க ரெடி என்றும் கூறுகிறார்.

மொத்தத்தில், நடிப்புக்காக எதையும் செய்யும் ஆர்வமுள்ள நடிகர்களில் உருவராக திகழும் சுரேஷ், அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகராகவும் இருப்பதால் இயக்குநர்கள் தாரளமாக அவரை அனுகலாம்.

New actor Suresh is ready to do any kind of roles

சாட்சிகள் சொர்க்கத்தில் படத்தில் அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார்.

சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Witness in Heaven Trailer and Audio Launch at Australia

ஆர்கே. சுரேஷின் அடுத்த அதிரடி டைசன்; அட்டு டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது.

இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது .

பிரமாண்டபொருட்செலவில் இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி’, ‘வேட்டைநாய் ‘போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில்’அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள்.

அஜித்-வினோத் இணையும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கவுள்ள ’விசுவாசம்’ படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார் அஜித்.

இப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

அஜித் மற்றும் வினோத் இணையும் இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் அஜித்.

தற்போது ஸ்ரீதேவியின் மரணமடைந்து விட்டார். அவரின் 16ஆம் நாள் நினைவு நாளில் அஜித் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sridevi husband Boney Kapoor may produce Ajith 59 movie

அஜித் படத்தில் கூட்டணி; மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வருபவர் பிரபுதேவா.

சில காலங்களுக்கு இயக்குனராக இருந்தவர் தற்போது நடிகராக பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் அஜித் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

விரைவில் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதனையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

வில்லு படத்தில் நயன்தாராவை இயக்கியபோது பிரபுதேவா உடன் காதல் கைகூடியது.

அதன்பின்னர் திருமணம் வரை சென்று இந்த ஜோடிகள் திருமணம் செய்யாமல் பிரிந்துவிட்டனர்.

தற்போது இந்த படத்திற்காக இவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது.

நயன்தாராவின் கால்ஷீட் தேதிகளைக் கவனித்து வருபவர், தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ்.

அவர்தான் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த மூவர் இணையும் படத்தையும் அவரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

சிம்புவை விட்டு பிரிந்த பின் சிம்பு உடன் இணைந்து பணிபுரிந்தார் நயன். எனவே பிரபுதேவாவுடன் இணைவதிலும் எந்த சிக்கலும் இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரொபஷன் வேறு, பர்ஷனல் வேறு என்பதே நயன்தாராவின் ரூட்டாம்.

More Articles
Follows