வெங்கட் பிரபு-ரஞ்சித்-ராஜேஷ்-சிம்பு தேவன் இணையும் ‘விக்டிம்’

வெங்கட் பிரபு-ரஞ்சித்-ராஜேஷ்-சிம்பு தேவன் இணையும் ‘விக்டிம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Victimஓடிடி ரிலீஸ், வெப் சீரிஸ், சார்ட் பிலிம்ஸ் போல தற்போது ஆந்தாலஜி சீசன் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

அதாவது.. சில டைரக்டர்கள் இணைந்து சில படங்களை இயக்குவார்கள். அவற்றை எல்லாம் தொகுத்து உருவாகும் படங்களே ஆந்தாலஜி படங்கள் ஆகும்.

அண்மையில் ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புத்தம் புதுக் காலை என்ற அந்தாலஜி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

அதுபோல வேல்ஸ் நிறுவனம் குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜியை தயாரித்துள்ளது என்பதையும் நாம் பார்த்தோம்.

இந்நிலையில், வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி புதிய ஆந்தாலஜி படம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த படங்களை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

விக்டிம் என்ற பெயரில் இந்த படம் உருவாகியுள்ளது. விரைவில் இது வெளியாகவுள்ளது.

New tamil anthology ‘VICTIM’ directed by Venkat Prabhu, Ranjith, Rajesh and Chimbu devan

ரஜினிகாந்த் தயங்கி நிற்க விஜயகாந்த் பாணியில் களமிறங்கிய கமல்

ரஜினிகாந்த் தயங்கி நிற்க விஜயகாந்த் பாணியில் களமிறங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan in bigg bossநடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் இறங்காமல் தயங்கியே நிற்கிறார்.

விஜயகாந்த கட்சி தொடங்குவதற்கு முன்பும் சரி கட்சி தொடங்கிய பின்பும் சரி தன் படங்களில் தன் தேமுதிக கட்சி சின்னம் கொடி ஆகியவற்றை சில காட்சிகளில் வைத்திருப்பார்.

அரசியலில் நுழையும் சமயத்தில் கட்சி தொடர்பான வசனங்களையும் வைத்திருந்தார்.

என்னதான் ரஜினியுடன் 25 ஆண்டு காலம் அரசியலை தொடர்புபடுத்தி பேசப்பட்டு வந்தாலும் அவர் கட்சி தொடர்பான சின்னங்களையே காட்சிகளையோ வைக்கவில்லை.

பாபா படத்தில் மட்டும் பாபா முத்திரையை பயன்படுத்தினார். (அதுதான் அவரது கட்சி சின்னமா?)

இந்த நிலையில் விஜயகாந்த் பாணியில் அரசியல் கட்சி பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார் கமல்.

தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் கட்சி சின்னத்தை மறைமுகமாக வைத்து பப்ளிசிட்டியை தொடங்கியுள்ளார் கமல்.

நேற்று நவம்பர் 1ல் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கோட் அணிந்திருந்தார். அந்த கோட்டின் கை பகுதியில் அவருடைய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் சின்னம் தைக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டிருந்தது.

ஒரு கட்சி சார்பற்ற நிகழ்ச்சியில் கமல் இப்படி செய்வது நியாயமா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆனால் கமல் அது குறித்து கவலைப்பட மாட்டார் என்றே தெரிகிறது.

இதை விஜய் டிவி நிர்வாகத்தினர் எப்படி அனுமதித்தார்கள்-? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

Kamal Haasan hosts Bigg Boss with MNM symbol

2021ல் கூட தியேட்டரை திறக்க தயார்.; தயாரிப்பாளர்கள் கெடுபிடியால் தியேட்டர்கள் அதிபர்கள் அதிரடி

2021ல் கூட தியேட்டரை திறக்க தயார்.; தயாரிப்பாளர்கள் கெடுபிடியால் தியேட்டர்கள் அதிபர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tirupur subramaniamகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 7 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்களை திறந்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே திரையரங்குகளை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், VPF கட்டணங்களை எங்களால் செலுத்த இயலாது என்றும் அதனை திரையரங்கு உரிமையாளர்கள்தான் செலுத்த வேண்டும் என நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில்… “திரையரங்கு உரிமையாளர்களும் புரொஜெக்டர் நிறுவனங்களும் தொடர்ந்து VPF கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள்.

இனிமேல் எங்களால் அதனைச் செலுத்த இயலாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது..

இந்த பிரச்சினை இப்போது பேசப்பட வேண்டிய அவசியமில்லை.

நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகளை திறக்க முடிவு செய்துள்ள்ளோம்.

எங்கள் தரப்பில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தாலும் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.

தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து புது கோரிக்கைகளை வைக்கும்போது அதை ஏற்க முடியாது.

தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தால் மேலும் 2 மாதங்களுக்கு (2020 டிசம்பர் வரை) திரையரங்குகளை மூடிவைப்பதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை” என கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.

Tamil film producers Vs theatre owners stalemate continous

எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும்..; என் கட்சி இல்லாத நாடே இல்லை.. – சீமான்

எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும்..; என் கட்சி இல்லாத நாடே இல்லை.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman rajiniசில தினங்களுக்கு முன்… ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. அவர் உடல் நலத்தை பார்க்கட்டும். அவரை கெஞ்சி கேட்கிறேன் என சீமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது…

”எந்த நாட்டில் ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ அங்கு சென்று கட்சி துவங்க சொல்லுங்கள்.

எனக்கும்தான் உலகம் முழுவதும் கட்சி உள்ளது. என் கட்சி இல்லாத நாடே இல்லை.”

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Seeman talks about Rajini’s political entry

முருகா-ன்னு சொன்னா என் முகம்தான் மக்கள் நினைவுக்கு வரும்.. – சீமான்

முருகா-ன்னு சொன்னா என் முகம்தான் மக்கள் நினைவுக்கு வரும்.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanசென்னை போரூர் அருகே வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் உள்ளது.

அங்கு தமிழ்நாடு நாள் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியபோது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது…

தைப்பூசத்திற்கும், தமிழ்நாடு உருவாகிய நாளைக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.

நாட்டில் இட ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே வேல் யாத்திரையை பாஜக கையில் எடுத்துள்ளது.

அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தனர். அது போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்ய நினைத்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை.

வேலை வைத்து இவர்கள் நடத்தும் அரசியல் செல்லாது. முருகா என்றால் சீமான் முகம் தான் மக்களின் நினைவுக்கு வரும்.

வேல் யாத்திரையை நடத்த நாங்கள் விடமாட்டோம். அதற்கு தடை விதிக்க வேண்டும்.”

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Seeman speech about lord Murugan

தொகுதி பணி உங்களுக்கு… கூட்டணி பணி எங்களுக்கு..; மநீம நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் கட்டளை

தொகுதி பணி உங்களுக்கு… கூட்டணி பணி எங்களுக்கு..; மநீம நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஅடுத்தாண்டு 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்பின்னர் இன்று தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் கமலஹாசன்.

இன்று தொடங்கி 3 நாட்கள் எட்டு பகுதிகளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம்.

கோவை, மதுரை, கடலூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100 தொகுதி பொறுப்பாளர்களை கமலஹாசன் இன்று சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய கமல்ஹாசன்..

தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் தேர்தல் பணி மற்றும் தொகுதி பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். உங்களுடைய பணி மிகவும் கடினமான பணி. அதைச் சிறப்பாக செய்யுங்கள்” என கட்டளை போட்டாராம்.

Kamal Haasan announced not alliance with Dravidan parties at today meeting

More Articles
Follows