பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு நாட்கள் குறைப்பு..? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெறும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நடைபெறும் என செய்திகள் வெளியானது.

ஆனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அதிகாரபூர்வமாக இந்த நிகழ்ச்சி 105 நாட்கள் நடப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ஹாட்ஸ்டார் ட்விட்டரில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ் ரசிகா’ என 105 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

New official update on Bigg Boss total days

நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க 200 கிலோமீட்டர் நடந்தே வந்த வெறியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இவரின் பாடல்களும் நடனங்களும் தெலுங்கு சினிமாவில் பிரபலம்.

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க அவரது ரசிகர்… ரசிகர் என்பதை விட வெறியர் என்றே சொல்லலாம்.

ஆந்திராவில் குட்டூரில் மாச்சேர்லா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒரு ரசிகர் 200 கிலோமீட்டர் நடந்தே ஹைதராபாத் வந்துள்ளார்.

இதனையடுத்து அவரை அல்லு அர்ஜுன் சந்தித்து வாழ்த்தி அவருக்கு மரக்கன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Allu Arjun fan walks 250 kms to meet Allu Arjun

கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரம்.; ‘அடல்’ நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை திறந்து வைத்த மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிமாச்சல பிரதேசம் மணாலியிலிருந்து- லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை, 9 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க, கடந்த 2000-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது.

இப்பணிகளுக்கு 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பல்வேறு இயற்கை பேரிடர் சவால்களை கடந்து, “அடல்” நெடுஞ்சாலை சுரங்கப் பாதை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சுரங்க பாதை அமைந்துள்ளது.

இந்த மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

PM Modi inaugurates world’s longest highway tunnel Atal in Himachal Pradesh

சிம்புக்கு திருமணம் நடக்க வேண்டி மனமுருகி மண்டியிட்டு படியேறிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இயக்குனர் நடிகர் என வளர்ந்திருப்பவர் சிம்பு என்ற STR.

முன்னணி நடிகர்களில் ஒருவராகிய இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏராளம்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிலர் ரத்தினகிரி முருகன் கோவிலில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கையில் சிம்பு படத்தை வைத்துக் கொண்டு மனதில் மண்டியிட்டு படியேறிச் சென்று முருகனை தரிசித்தனர்.

இந்த பிராத்த்தனை அங்கு வருவோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்றது.

பிரார்த்தனைக்கு முன்பு சாலை ஓரங்களில் இருந்த ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர் சிம்பு ரசிகர்கள்.

STR fans pray for Actor Simbu marriage

அவள் அப்படித்தான்..; சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் மணிகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா
அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்
கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சும மணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்
பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்
“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன்
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

KS Mani Kandan to direct Silk Smitha’s biopic

விஜய்சேதுபதி திரைக்கதை வசனத்தில் விமல் நடிக்கும் ‘குலசாமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த “படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்” படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குலசாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் R. துரை இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.

‘குலசாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய்சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

Actor Vimal’s Kulasamy shoot starts from october 16th

More Articles
Follows