எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘புள்ளி ராஜா’-வை நினைவிருக்கா..? இப்போ ‘பஞ்ச் பாட்டி’ வர்றாங்க..

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘புள்ளி ராஜா’-வை நினைவிருக்கா..? இப்போ ‘பஞ்ச் பாட்டி’ வர்றாங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aids awarenessபுள்ளி ராஜா-வுக்கு எய்ட்ஸ் வருமா? என்ற வழிப்புணர்வு வசனங்களை 20 வருடங்களுக்கு முன்பு கேட்டிருக்கலாம்.

விஜய் நடித்த திருமலை படத்தில் கூட விவேக் இண்டர்வியூக்கு போகும் போது ‘புள்ளி ராஜா-வுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற டயலாக்கை பேசியிருப்பார்.

இப்போது கால மாற்றத்தினால் புள்ளி ராஜா என்ற கேரக்டரை ‘பஞ்ச் பாட்டி’ என்ற கேரக்டராக அறிமுகப்படுத்தவுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “பஞ்ச் பாட்டி” என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குநர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

வானொலி உட்பட அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒலிபரப்படும் என பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

New campaign for aids awareness in Tamil Nadu

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கல்லறைக்கு செல்ல தனி வழி அமைத்த எஸ்.பி.சரண்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கல்லறைக்கு செல்ல தனி வழி அமைத்த எஸ்.பி.சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB charanதன் இனிய குரலால் மக்களை வசீகரித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் கடந்த மாதம் செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவரது மறைவால் இந்திய இசை துறையே கலங்கி போனது. திரும்பிய திசை எங்கும் எஸ்பிபி பாடல்களே ஒலித்தன.

அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு காவலர் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்றைய தினத்தில் வர முடியாத ரசிகர்கள் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கு அவரின் கல்லறைக்கு செல்ல சிரமம் இருந்த நிலையில் அதனைப் போக்கும் விதமாக தனி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எஸ்பிபி மகன் எஸ்.பி.பி.சரண்.

SP Charan made new way for his dad SPBS cemetry

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikalaமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 3 வருடங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

எனவே சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களையும் முடக்கியது.

தற்போது மீண்டும் சிறுதாவூர், கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் திவாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த சொத்து முடக்கம் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Sasikala assets worth Rs 2000 crores seized

பாலியல் வன்முறைக்கு எதிரான டைட்டில் கார்ட் வேண்டும்..; விஜய் ஸ்ரீ வைக்கும் நியாயமான கோரிக்கை!!

பாலியல் வன்முறைக்கு எதிரான டைட்டில் கார்ட் வேண்டும்..; விஜய் ஸ்ரீ வைக்கும் நியாயமான கோரிக்கை!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director Vijay Sri Gபெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள்.

மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும்.

இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்”
என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.

தற்சமயம் நாட்டை கண்ணீரில் ஆழ்த்திய ஹாரித்துவார் சம்பவம் நம் தேசத்தின் மகள் கொடூராமாக தாக்கப்பட்டு தீயில் கருகிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்

எங்கள் ”பொல்லாத உலகில் பயங்கர கேம்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில்
ஒரு சில கயவர்களால் பெண் ஒருவள் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும் படமாக்கியிருக்கிறோம்.

தாதா87 படத்தில் சாருஹாசன் பேசிய… “பெண்களை தொட்டால் கொளுத்துவேன்” என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை திரைப்பட வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் சட்டமானது.

பெண்களுக்கு ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும்.

தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும் மாநில அரசும் இந்திய நீதித்துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய, மாநில அரசு மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்ற எல்லா கோரிக்கைகளிலும் குரல் கொடுக்கும் தலைவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை மத்திய செய்தி தொடர்பு அமைச்சகம் தணிக்கை குழுவினர் ஒருங்கிணைந்து, 2012 செப்டம்பர் 26ல் திரைப்பட “டைட்டில் கார்டில் வெகுஜன மக்கள் மத்தியில் ஒன்றுடன் கலந்த சினிமா மூலமாக விழிப்புணர்வை பதிய வைத்தார்கள்.

அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் பதிவிடுங்கள் என பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும் பவுடர் படத்தின் படக்குழுவினர் சார்பாக அனைவரும் ஒன்று கூடி வேண்டுகோள் வைக்கிறோம்.

இவ்வாறு டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

Dhadha 87 director Vijay Sri requests state and central government

‘இரண்டாம் குத்து’ சர்ச்சை.; கமல் படத்தை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..?? பாரதிராஜாவுக்கு சந்தோஷ் கேள்வி

‘இரண்டாம் குத்து’ சர்ச்சை.; கமல் படத்தை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..?? பாரதிராஜாவுக்கு சந்தோஷ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan in Tik Tik Tikஓரிரு தினங்களுக்கு முன் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய ‘இரண்டாம் குத்து’ பட டீசர் வெளியானது.

இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்பட டீசருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

அதில்….

“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?

கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?.. என தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

இந்த செய்தியை காலையில் பார்த்தோம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

1981 ல் கமல், மாதவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தை எடுத்தீர்கள். அதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..? என கேள்வி கேட்டு டீ பீஸ் உடையில் மாதவி & கமல் இருக்கும் படங்களை தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

Irandam Kuthu director Santhosh reply to Bharathiraja

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthu posterஉங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின்

வணக்கம்.

சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும்தான்… ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?

சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது?

நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?

கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா?

அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.

சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்…? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி
பாரதிராஜா
08:10:2020

Director Bharathi Raja strongly opposes Irandam Kuthu film

More Articles
Follows