லாக்டவுனில் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம்.; யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ என சமூக ஆர்வலர்கள் கேள்வி

லாக்டவுனில் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம்.; யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ என சமூக ஆர்வலர்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

government teacher in tnகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதி முதல் நாடெங்கிலும் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் மூடப்பட்டன.

கிட்டதட்ட 6 மாதங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதால் இந்தாண்டு 2020 டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எந்த அரசு பணியையும் செய்யாமல் அரசு ஆசிரியர்கள் மட்டும் லட்சணக்கணக்கில் சம்பளம் வாங்குவது சரியா? என கேள்வி நாடெங்கிலும் எழுந்துள்ளது.

ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிக்காக சில ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்படியே இருந்தாலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கு ஏன்? முழு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கேள்வியும் கூடவே வருகிறது.

கொரோனா லாக்டவுனால் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குவது எப்படி முறையாகும்? என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.

மேலும் கொரோனா பணிக்காக தமிழக அரசு கிட்டதட்ட ரூ 6000 கோடியை செலவழித்துக் கொண்டிருக்கும்போது ஆசிரியர்களுக்கு சம்பளத்தை குறைத்து அதை அரசு நலப்பணிக்களுக்காக செலவிடலாமே என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

ஒரு சில ஆசிரியர்கள்.. நாங்கள் பள்ளிக்கு சென்று வந்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு நீ போடுறீங்க என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அள்ளி விடுகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரிலையன்ஸ் உதவியுடன் மீண்டும் இந்தியாவில் நுழையும் டிக்டாக்..?

ரிலையன்ஸ் உதவியுடன் மீண்டும் இந்தியாவில் நுழையும் டிக்டாக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tiktokகடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் சீனா எல்லையில் போர் மூண்டது.

கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

சீன தரப்பிலும் 42 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் நாடெங்கிலும் சீனாவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்.

இதனையடுத்து ஜூன் 29-ஆம் தேதி இந்தியாவில் டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட மொபைல் ஆப்கள் தடை செய்யப்பட்டது.

இந்தியாவில் மட்டும் டிக்டாக் 20 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது.

இதனால் டிக்டாக் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’க்கு ரூ 45,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் நுழைய டிக்டாக் நிறுவனர் பைட்டான்ஸ் இந்தியாவில் டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் ஒரு முடிவுநிலையை எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

புதுச்சேரியில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு; செவ்வாய்கிழமைகளில் முழு தடை

புதுச்சேரியில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு; செவ்வாய்கிழமைகளில் முழு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

puducherry cmபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத புதிய உச்சமாக 481 பேர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

எனவே ஆகஸ்ட் 14 முதல் 31 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது… ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 31 வரை.. காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.

இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 25 தேதி மட்டும் (செவ்வாய்கிழமை) முழு ஊரடங்கு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் நாளை ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது புதுச்சேரியில் 254 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 9 பேர் என 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,680 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 3,828 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்கள் மூத்த குடிமக்களுக்கு தடை

சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்கள் மூத்த குடிமக்களுக்கு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

independence day celebration in schoolகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் வியாபார நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர கொண்டாடப்பம உள்ளது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூத்த குடிமக்களின் வயது மூப்பைக் கருத்தில்கொண்டும், கொரோனா நோய் தடுக்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் பத்து சுதந்திரத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.

காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.

மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக மக்கள் செய்தி தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.?

சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthick narenதுருவங்கள் 16 மற்றும் மாஃபியா படத்தை அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கொரோனா பிரச்சினை தீர்ந்த பிறகு இப்பட சூட்டிங் தொடங்கும்.

இந்நிலையில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.

அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்…

கமல் படங்களில் ‘விருமாண்டி’ மிகவும் பிடித்த திரைப்படம் என்றார்.

மேலும் விரைவில் சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் இயக்கிய நரகாசூரன் படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டதற்கு… நாட்டாமை படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடியில் மிக்சர் சாப்பிடும் கேரக்டரின் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

பாகுபலி இயக்குனருக்கு கொரோனா நெகட்டிவ்..; பிளாஸ்மா தானம் ப்ளான்

பாகுபலி இயக்குனருக்கு கொரோனா நெகட்டிவ்..; பிளாஸ்மா தானம் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajamouliபாகுபலி 2 படத்தை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR) படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

இந்த நிலையில் ராஜமவுலி குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே குடும்பத்தினருடன் ராஜமௌலி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தற்போது 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு அவர்களது பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.

இது குறித்து ராஜமௌலி கூறியுள்ளதாவது..

“2 வார தனிமையில் இருந்தேன். பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை.

பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா? என்பதை தெரிந்துக் கொள்ள டாக்டர்கள் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows