சென்சாரின் தடையால் இணையத்தில் வெளியாகும் நீலம்

சென்சாரின் தடையால் இணையத்தில் வெளியாகும் நீலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Neelam movie will be released directly in Internet due to Censor Ban issueஈழத்தில் தமிழ் மக்களின் அவலங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் நீலம்.

தணிக்கை குழு இப்படத்தை தியேட்டர்களில் வெளியிட தடை விதித்துள்ளது.

இதனால் இப்படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

விரைவில் இப்படத்தை வெளியிடும் நிறுவனத்தையும் தேதியையும் அறிவிப்போம் என ஸ்டூடியோ 18 நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Neelam movie will be released directly in Internet due to Censor Ban issue

*தீர்ப்புகள் விற்கப்படும்* படத்தலைப்பை அறிவித்தார் திருமுருகன் காந்தி

*தீர்ப்புகள் விற்கப்படும்* படத்தலைப்பை அறிவித்தார் திருமுருகன் காந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theerpukal Virkapadum title launched by Social activist Thirumurugan Gandhi‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டும்.

அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார்.

ஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, “சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது.

இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குனர் தீரஜ் இந்த கதையை என்னிடம் கூறியபோது, சத்யராஜ் சார் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம்.

அந்த அளவு ஒரு மெசேஜ் இந்த படத்தில் இருக்கிறது, அதை சொல்லும் அளவுக்கான சக்தி அவருக்கு இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்தை தமிழில் தயாரிக்க விரும்பிய காரணம், இந்த படம் மிகப்பெரிய அளவில் சென்று சேரும் என்று உறுதியாக நம்புவது தான்.

மேலும், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதியை நிலை நிறுத்தும். டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம்” என்றார்.

இயக்குனர் தீரன் கூறும்போது, “என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி.

ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்த திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரை கோரியது. சஜீவ் மீராசாஹிப் சார் ஒரு தயாரிப்பாளராகவும், சத்யராஜ் சார் ஒரு ஹீரோவாகவும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன்.

எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம்.

“கருடவேகா” (தெலுங்கு) புகழ் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் எஸ்.என் (யாமிருக்க பயமே மற்றும் காட்டேரி) இசையமைக்கிறார். எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத் எடிட்டராக அறிமுகமாகிறார்.

சுரேஷ் கல்லெரி (குட்டி புலி, ஜெயில்) கலை இயக்குனராகவும், நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தீரன் மேலும் கூறும்போது, “தீர்ப்புகள் விற்கப்படும்” உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை வழங்கும் எங்கள் நோக்கம் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மூலம் தெரிய வரும். இந்த படம் முழுக்க ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் “என்றார்.

Theerpukal Virkapadum title launched by Social activist Thirumurugan Gandhi

Theerpukal Virkapadum

கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய புட் பாக்கெட்டுகளில் ரஜினி ஸ்டிக்கர்

கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய புட் பாக்கெட்டுகளில் ரஜினி ஸ்டிக்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth photos on Cyclone Gaja Relief Materialsகஜா புயலால் காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரண்யம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிகளில் அரசும், தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் உணவு பொட்டலங்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதில் உணவு பொட்டலங்களில் ரஜினி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதனை கண்ட நெட்டிசன்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையை வர்தா புயல் தாக்கியபோது ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

தற்போது ரஜினி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது குறித்து ரசிகர்களிடம் கேட்ட போது…

தமிழகத்தில் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் ரஜினி எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர் விளம்பரம் இல்லாமல் எதையும் செய்து வருகிறார்.

ஆனால் அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதால் நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டி சப்ளை செய்தோம் என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

Rajinikanth photos on Cyclone Gaja Relief Materials

rajini stickers on food packets gaja relief

2 மில்லியனை தொட்டது பிரசாந்தின் *ஜானி* ட்ரைலர்

2 மில்லியனை தொட்டது பிரசாந்தின் *ஜானி* ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prashanths Johnny Trailers hits 2 Million views நீ……..ண்ட இடை வெளிக்குப் பிறகு டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ஜானி.

இதில் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

வெற்றிச்செல்வன் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் ஜானி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

தற்போது வரை 2 மில்லியன் (20 லட்சம்) பேர் இந்த ட்ரைலரை இணையத்தில் பார்த்துள்ளனர்.

கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ படத்தின் ரீமேக் இது என கூறப்படுகிறது.

Prashanths Johnny Trailers hits 2 Million views

2.0 பட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க ரஜினி தடை

2.0 பட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க ரஜினி தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini warns his fans for selling 2pointO tickets at high priceஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரூ.550 கோடி பட்ஜெட்டில், 3டி தொழில்நுட்பத்தில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

வருகிற நவ.,29ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகிறது.

மிகப்பிரம்மாண்டமாக இப்படம் தயாராகியுள்ளதால் இப்படத்தின் டிக்கெட்டுக்கள் அதிக விலைக்கு விற்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில மன்ற நிர்வாகிகள் 2.0 பட டிக்கெட்டை அதிக விலைக்கு வெளியில் விற்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி, தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்க கூடாது.

ரசிகர்களிடமிருந்து தியேட்டர்கள், இருக்கைக்கு ஏற்ப நிர்ணயித்த கட்டணத்தை தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணங்களையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்க கூடாது. இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini warns his fans for selling 2pointO tickets at high price

மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிசெய்தார் விவேக்

மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிசெய்தார் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek team up with Vijay for Thalapathy 63தெறி, மெர்சல் ஆகிய இரண்டு வெற்றி படங்களை விஜய்யுடன் இணைந்து கொடுத்தார் டைரக்டர் அட்லி.

தற்போது ஏஜிஎஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ தெரிவித்தனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இதன் சூட்டிங்கை தொடங்குகின்றனர்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை அறிவித்தாலும் படத்தில் நடிப்பவர்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தளபதி 63 படத்தில் தான் நடிக்கவுள்ளதை விவேக் உறுதி செய்துள்ளார்.

திருமலை, யூத், ஆதி, குருவி உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் விவேக் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

Actor Vivek team up with Vijay for Thalapathy 63

More Articles
Follows