ரஜினி அறிவித்த இரண்டே நாளில் மன்றத்தில் இணைந்த 50 லட்சம் பேர்

ரஜினி அறிவித்த இரண்டே நாளில் மன்றத்தில் இணைந்த 50 லட்சம் பேர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth launched new website for his political partyடிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

அன்று அவர் அறிவித்த போது ஆன்மிக அரசியலை தான் நாடவிருப்பதாக தெரிவித்தார். அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆன்மீக அரசியல் என்றால்… உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்” என தெரிவித்தார் ரஜினி.

இதனையடுத்து ஜனவரி 1 புத்தாண்டு அன்று மாலை வேளையில் ரஜினிமன்றம் என்ற இணையதளம் பற்றி அறிவித்தார்.

ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும் தங்கள் பெயருடன வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து இணையலாம் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே பலரும் அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டதால் அந்த இணையதளமே முடங்கியது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Nearly 50 lakhs peoples joined in Rajini Mandram website

இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி

இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaignar karunanidhi and rajinikanthசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவு நாளான டிசம்பர் 31 2017-ல் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்தார்.

சில மாதங்களுக்கு மற்ற அரசியல் கட்சியையும் தலைவர்கள் பற்றியும் விமர்சிக்க வேண்டாம் என அப்போது தெரிவித்திருந்தார்.

எனவே ரஜினியின் அறிவிப்பு இத்துடன் நிற்கும் என கூறப்பட்டது.

ஆனால் அதிரடியாக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விஷயத்தை செய்து தமிழக அரசியல் உலகை பரபரப்பாக்கி வருகிறார்.

2018 புத்தாண்டு அன்று ரஜினி மன்றம் என்ற இணையதளம் பற்றி அறிவித்தார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இன்று இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மாலை 6.30 மணியளவில் சந்திக்கவிருக்கிறார்.

வருடந்தோறும் புத்தாண்டு சமயத்தில் கருணாநிதியை ரஜினி சந்திப்பது வழக்கம். ஆனால் இம்முறை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ்; கன்பார்ம் செய்தது சன்பிக்சர்ஸ்

விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ்; கன்பார்ம் செய்தது சன்பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and keerthy sureshமெர்சல் படத்துக்கு பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

பல படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தாலும், எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் 62 படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் படத்தின் நாயகியையும் உறுதிசெய்துள்ளனர். அவர்தான் கீர்த்தி சுரேஷ்.

இதற்கு முன்பே இவர்கள் பைரவா படத்தில் டூயட் பாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரைவில் இப்பட சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தை 2018 இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி கட்சியில் இணைய லைக்காவிலிருந்து ராஜுமகாலிங்கம் ராஜினாமா

ரஜினி கட்சியில் இணைய லைக்காவிலிருந்து ராஜுமகாலிங்கம் ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and raju mahalingamஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் ராஜு மகாலிங்கம்.

தற்போது அவர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் இணைய தன் பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.

அவருக்குப் பதிலாக கருணாமூர்த்தி பணிபுரிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியோடு இணைந்திருப்பது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியதாவது…

ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியின்பால் ஈர்த்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

ரஜினி கட்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், முதல் நபராக பிரபலமான ஒருவர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை அதிர வைக்கும் விஜய் 62 போட்டோஸ்

இணையத்தை அதிர வைக்கும் விஜய் 62 போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சலை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.

விஜய்யின் நடிப்பில் 62வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். முருகதாஸ் இயக்குகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் போட்டோ சூட் நேற்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தை எடுத்த ஒருவர் இணையத்தில் அதை வெளியிட தற்போது அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

வெளியான சில நிமிடங்களிலேயே அதை தளபதி ரசிகர்கள் பகிர, தற்போது இணையமே அதிருகிறது.

vijay photo shoot pics

vijay

ஊடகங்களை கையாள தெரியவில்லை; மன்னிப்பு கேட்ட ரஜினி !

ஊடகங்களை கையாள தெரியவில்லை; மன்னிப்பு கேட்ட ரஜினி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பில் அவர் பேசியதாவது…

என் அரசியல் அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி.

ஊடகங்களை எப்படி கையாள்வது என்றே எனக்கு தெரியவில்லை.

தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நானும் 2 மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன்.

நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டியளித்தேன்.

என் அரசியல் பணிக்கு ஊடகங்களின் உதவி தேவை. நம் எல்லோருக்கும் கடமை உள்ளது.

விரைவில் உங்களை சந்தித்து கட்சி கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்.

More Articles
Follows