கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் இணைவாரா நயன்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை தி.நகருக்கே அடையாளம் சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமான உருவாகியுள்ள நிறுவனம் சரவணா ஸ்டோர்.

சென்னையில் மட்டும் இதன் கிளைகள் பல பகுதிகளில் உள்ளன.

இதன் உரிமையாளரான சரவணன் இந்த கடையின் விளம்பரங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார்.

ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இவர் விளம்பரங்களில் நடித்ததை பலரும் விமர்சனம் செய்தனர்.

அண்மையில் கூட இவரும் நடன இயக்குனர் ராஜீ சுந்தரம் பங்குபெற்ற விளம்பர வீடியோக்களை டிவிக்களில் பார்த்து இருப்பீர்கள்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த வந்துள்ளார் சரவணன்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ‘விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், அதில் தன் ஜோடியாக நயன்தாரா இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை அவரே தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

பல முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துவிட்டாலும், இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை.

இது உறுதியாகும்பட்சத்தில் கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா இணைந்துவிடுவார் போலவே.

Nayanthara teams up with Saravana Stores Owner for new project

சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்து அனிருத் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி3 படத்தை முடித்துவிட்டு எவரும் எதிர்பாரா வகையில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

தானா சேர்ந்த கூட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா உடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முதன்முறையாக சூர்யா படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ஒரு பாடலை (சிங்கிள் ட்ராக்கை) விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதிலுள்ள பட்டாம் பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல என்ற சில வரிகளை மட்டும் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை அதிக ஆர்வத்துடன் காத்திருக்க வைத்து விட்டனர்.

Vignesh ShivN‏Verified account @VigneshShivN

Surprise for all The lovely fans out there !

ஒரு பட்டாம்பூச்சிய
உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

Thaana serndha Kootam single track updates

‘விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எனக்கு தெரியும்…’ ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் தளபதி 61 படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இதில் விஜய் உடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்தது.

தற்போது மீண்டும் சென்னையில் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாகவே, நடனத்தில் விஜய் அசத்துவதால், அவரது படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் விஜய் உடன் ஏஆர் ரஹ்மானும் கைகோர்த்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறுயுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்து, ஏஆர் ரஹ்மானே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளாராம். அதில்…

”விஜய்யுடன் நான் இணைந்தால் அவரது ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு அருமையான மாஸான இன்ட்ரோ பாடல் ரெடியாகி விட்டது. மற்ற பாடல்களும் ரசிகர்களை கவரும்” என தெரிவித்துள்ளார்.

Music Composer AR Rahman about Vijay 61 movie songs

தனுஷின் பவர் பாண்டியை தெலுங்கில் ரீமேக் செய்ய ரஜினி சிபாரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் முதன்முறையாக இயக்கிய பவர் பாண்டி படம் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று ரிலீஸ் ஆனது.

ரிலீசுக்கு முன்பே தனுஷை ரஜினி பாராட்டியிருந்தார் என்பதை பார்த்தோம்.

மேலும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தனுஷிடம் ரஜினி கேட்டுக் கொண்டார் என கூறப்படுகிறது.

அத்துடன் தன்னுடைய நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான
மோகன்பாபுவை வரவழைத்து, அவருக்கும் இப்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறாராம்.

அவருக்கும் ராஜ்கிரண் கேரக்டர் பிடித்துக் போக, அதில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.

எனவே, விரைவில் தெலுங்கு சினிமாவிலும் தனுஷின் பவரை எதிர்பார்க்கலாம்.

Pa Paandi to be remade in Telugu with Mohan Babu

சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஏற்று கொள்ளமாட்டார் – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் நடைபெற்ற பாரதிராஜா பிலிம் இன்ஸ்டிட்யூட் துவக்க விழாவை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தொடங்கி வைத்தனர்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது…

நான் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நான் அப்படி எவ்வளவுதான் நடித்தாலும் என்னை ஒரு சிறந்த நடிகர் என்று பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்.

ஆகையால் அவருக்கு என்னை பிடிக்கும் ஆனால், பிடிக்காது.

சினிமா என்பது பாரதிராஜாவின் உயிரோடு இணைந்த ஒன்று.

ஒரு கலைஞனை மக்களுக்கு பிடித்துவிட்டால் அவன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள்.

இங்கு சேரும் மாணவர்கள் நிச்சயம் சிறந்த பயிற்சியை பெறுவார்கள்” என பேசினார் ரஜினிகாந்த்.

‘எம்ஜிஆர் போல இருங்க; இப்போ டைரக்ஷன் வேண்டாம்..’ தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து, இயக்கி, பாடல்கள் எழுதி பாடிய நடித்துள்ள பவர் பாண்டி படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இதில் தனுஷ் உடன் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா உள்ளிட்டோர் நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே, தன் மருமகனின் இயக்கத்தை பார்த்த ரஜினி, தனுஷ்க்கு சில அட்வைஸ் செய்தாராம்.

படம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்கு டைரக்ஷன் வேண்டாம். அப்போதான் இந்த படம் அதிகமாக பேசப்படும்.

எம்ஜிஆரும் இதே பார்முலாவைதான் கடைப்பிடித்தார்.

‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு கிட்டதட்ட 15 வருஷம் கழிச்சுதான் படம் டைரக்டர் செய்தார்.

நீங்க அடுத்த படத்தை தள்ளி வையுங்க” என்று கூறினாராம்.

எம்ஜிஆர் இயக்கிய படங்கள்…

  • நாடோடி மன்னன் (1958)
  • அரசகட்டளை (1967 எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணி இயக்கம்)
  • உலகம் சுற்றும் வாலிபன் (1973)
  • மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)

After Watching Power Paandi movie Rajini advice to Dhanush

More Articles
Follows