திறமையான வேலைக்காரன் சிவகார்த்திகேயன்… நயன்தாரா

திறமையான வேலைக்காரன் சிவகார்த்திகேயன்… நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் வேலைக்காரன்.

24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தது குறித்து நயன்தாரா பேசியுள்ளார்.

வேலைக்காரன் படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். ஒரு நாள் இரவு 1-2 மணி இருக்கும். இயக்குனர் அவருக்கு பல பக்கங்கள் கொண்ட வசனங்களை கொடுத்தார்கள்.

ஜஸ்ட் 10 நிமிஷம் வேனும். தரமுடியமா? எனக் கேட்டுவிட்டு படித்துவிட்டு வந்தார்.

வந்தவர் அப்படியே அந்த வசனங்களை பேசி நடித்து முடித்துவிட்டார்.

சத்தியமா 10 நிமிடத்தில் அவ்வளவு வசனங்களையெல்லாம் பேசவே முடியாது, ஆனால் அவர் முடித்து விட்டார். ரொம்ப திறமையானவர்” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Nayanthara praises Sivakarthikeyan dialogue delivery in Velaikkaran movie

என்னை கவர்ந்த விஜய்சேதுபதி ஒரு நடிப்பு பேய்… இமான்

என்னை கவர்ந்த விஜய்சேதுபதி ஒரு நடிப்பு பேய்… இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music director Imman speech about Vijay Sethupathi in Karuppan press meetரேனிகுண்டா படத்தை தொடர்ந்து கருப்பன் படத்தை இயக்கியுள்ளார் பன்னீர் செல்வம்.

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏஎம் ரத்னம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, தன்யா, பசுபதி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது.

இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இமான் பேசியதாவது…

“இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளி வருகிறறது.

மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது.

விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒரு படத்தின் வெற்றி, தோல்விகளை எல்லாம் தாண்டி ஒரு நடிகரை நமக்கு பிடிக்கும்.

அந்த வகையில் விஜய்சேதுபதியின் இந்த படம் எனக்கு பிடித்த படம். அவர் ஒரு நடிப்பு பேய்.

நான் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உடல் எடையை குறைத்து வருகிறேன். மற்றடி படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று பேசினார் இசையமைப்பாளர் டி இமான்.

Music director Imman speech about Vijay Sethupathi in Karuppan press meet

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan gv prakashசிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

இதற்கு முந்தைய நாள் ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படம் வெளியாகவுள்ளது.

இந்த படங்களுடன் ஜெய், அஞ்சலி நடித்து பலூன் படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள செம படமும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளதாம்.

எனவே ஆயுதபூஜை விடுமுறை தினங்களில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaikkaran and Sema movies clash on Ayudha Pooja holidays 2017

சினிமா சான்ஸ் இல்லை; அதான் மனக்கோட்டை கட்டுகிறார் கமல்… தமிழிசை சவுந்தரராஜன்

சினிமா சான்ஸ் இல்லை; அதான் மனக்கோட்டை கட்டுகிறார் கமல்… தமிழிசை சவுந்தரராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and Tamilisaiஅண்மைக்காலமாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

இவரது பேச்சு தமிழக அரசியல் தலைவர்கள் கவனத்தை இவரது பக்கம் திருப்பியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஒரு திருமணவிழாவில் தான் கோட்டையை நோக்கி பயணப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பாஜ கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது…

நடிகர் கமல்ஹாசனுக்கு திரையுலகில் வாய்ப்புகள் குறைந்து விட்டது.

எனவேதான் கோட்டையை பிடிக்க மனக்கோட்டை கட்டுகிறார் என தெரிவித்தார்.

விஜய்சேதுபதியின் கருப்பன் டிவி உரிமையை பற்றிய சன்டிவி

விஜய்சேதுபதியின் கருப்பன் டிவி உரிமையை பற்றிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuppan movie stillsபன்னீர் செல்வம் இயக்கியுள்ள கருப்பன் படத்தில் விஜய்சேதுபதி, தன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.

இதன் இசை வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியுள்ளதாக அவர்களது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

முதல்வராக உலகநாயகனை உட்கார வைப்போம்… கமல் ரசிகர்கள்

முதல்வராக உலகநாயகனை உட்கார வைப்போம்… கமல் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதன் ரசிகர் ஒருவரின் திருமண விழாவில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

அவ்விழாவில் பேசும்போது நேரடி அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்து விட்டதாகவும் பேசினார்.

இதுநாள் வரை ட்விட்டரில் தமிழக அரசியலை சாடிய கமல், பொதுவிழாவில் இப்படி பேசியதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கமல் ரசிகர்கள் கூறியதாவது…

அரசியலில் மட்டுமில்லாது கமல் எல்லாவற்றிலும் ரோல்மாடலாக உள்ளார்.

எதையும் வெளிப்படையாக பேசுபவர் எங்கள் உலகநாயகன்.

அவர் அரசியலுக்கு வந்தால், அவரது கரங்களை வலுப்படுத்துவோம். அவருக்காக அயராது பாடுபடுவோம்.

கோட்டைக்கு நிச்சயம் அவர் செல்வார். முதல்வர் நாற்காலியில் உலகநாயகன் உட்கார வைப்போம்” என்ற உற்சாகம் பொங்க பேசினர்.

More Articles
Follows