கொச்சியில் ஓணம் கொண்டாடி நயன்தாரா விக்னேஷ் சிவன் ரொமான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகமெங்கும் உள்ள மலையாளிகளால் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழர்களும் அண்மைக்காலமாக ஓணம் பண்டிகைக்கு கேரளா ஸ்டைலில் கேரள உடைகள் அணிந்து வருகின்றனர்.

பெண்கள் ஒரு படி அதிகமாக கேரள செட் சாரிகளை அணிந்து செல்பிக்களில் திளைத்து வருகின்றனர்.

கமல், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளத்து பெண்ணான நயன்தாரா ஓணம் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி சென்றாராம்.

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனது கொச்சி வீட்டில் ஓணம் கொண்டாடி அந்த படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இருவரும் புதுமண தம்பதிகளை போல ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேஜிக்கல் ரியாலிச ‘குதிரை வால்’..; முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது.

அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.
இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த ‘குதிரைவால்’ என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் ‘குதிரைவால்’ படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது.
அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள்.

ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும்,
வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் ,
மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக
படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.

இது போன்ற படங்கள் தமிழில் மிகக்குறைவு .
கலையரசன் மற்றும் அஞ்சலிபாட்டில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது .
விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

எழுத்து – ராஜேஷ்

இசை- பிரதீப் & மார்டின் விசர்

எடிட்டிங் – MKP கிரிதரன்

ஒளிப்பதிவு- கார்த்திக் முத்துக்குமார்.

கலை – ராமு தங்கராஜ்

சவுண்ட் – ஆண்டனி ரூபன்

பாடல்கள்- உமாதேவி

இயக்கம்- மனோஜ் லியோனல் ஜாசன் & ஷ்யாம்.

தயாரிப்பு – யாழி பிலிம்ஸ்

வெளியிடு – நீலம் புரொடக்சன்ஸ்.

மூன்று படங்களில் வாய்ப்பு..; பிஸியாகும் பிக்பாஸ் லொஸ்லியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் அண்மை நாடானஇலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா.

அங்கு பிரபலமாகி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதனையடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

முதல் படமாக ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் ஒப்பந்தமானார்.

இப்பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஆரி அர்ஜூனா நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட்டானார்.

தற்போது லாஸ்லியாவின் மூன்றாவது படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

ராஜா சரவணன் இயக்கவுள்ள இந்தப படத்தில் பூரணேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

என்றும் உங்களுக்காக உங்கள் முல்லையாக…; பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பளிச் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் பிசியானவர் நடிகை விஜே சித்ரா.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து ரசிகர்கள் பேரன்பை பெற்றுள்ளார்.

சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனையடுத்து சித்ரா ரசிகர் ஒருவர்…

“இனி நீங்கள் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டீர்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு… “என்றும் உங்களுக்காக நான் உங்கள் முல்லையாக. வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார் சித்ரா.

முன்கள பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்வோருக்கு ரூ.2.5 கோடி உதவி; சொன்னதை செய்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் தான் நடித்து தயாரித்துள்ள சூரரைப் போற்று படத்தை ஆன்லைனில் வெளியிட உள்ளார் நடிகர் சூர்யா.

இந்த வெளியீட்டுத் தொகையில் இருந்து ரூ.5 கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன் என அறிவித்திருந்தார் சூர்யா.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது…

‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

பொதுமக்கள், ‘திரைத்துறையினர், ‘கொரானா தொற்றிலிருந்து’ மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.

அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு’ பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவதுறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

‘கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைகான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன்.

இப்பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது.

இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை!

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி.. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்..அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு..

ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு…

இந்த பதிவு

பாரதபிரதமர்
உயர் திரு. #நரேந்திரமோடிஜீ அவர்கள்

இந்திய குடியரசுத்தலைவர்
உயர் திரு. #ராம்நாத்கோவிந்த் அவர்கள்

தமிழக முதல்வர்
உயர்திரு . #எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

தமிழக சுகாதாரதுறை அமைச்சர்
உயர்திரு. #விஜயபாஸ்கர் அவர்கள்

தமிழகஅரசு தலைமைசெயலர்
திரு. சண்முகம் அவர்கள்

சுகாதாரதுறை செயலர்
திரு .ராதா கிருஷ்ணன் அவர்கள்

மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதர துறை உயரதிகாரிகள்

முக்கியமாக

அனைத்து மீடியா பத்திரிக்கை செய்தி ஔிபரப்பு நிறுவனங்களுக்கும்

அனைவருக்கமானது…

நமது இந்தியாவில் அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ உள்ளது… “108 ” என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும்..

உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில்.அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து காயம் பட்டவரை மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறேன்.

இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் எழுதுகிறேன்..தவிர யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல…

மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் #108 நம்பருக்கு போன் செய்தவுடன் நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ கால் சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது

எந்த மாவட்டம்…எந்த தாலுகா…என்ன தெரு என்பதை தெளிவாக கேட்கிறார்கள்…இ்ன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது…

எனது மனதில் தோன்றிய எண்ணம்…

அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா…

இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது .

எனவே எந்த எண்ணில் இருந்து அவசர மருததுவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து மற்றும் அல்லது லேண்ட் போனாக இருந்தால் ஜி.பி.எஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு வண்டியில் உள்ள ஜி பி எஸ் கருவி மூலம் தெரிவிக்ககூடாது?

இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.?

உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது.. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும்…

ஏனெனில் கண்முண்ணே ஒரு உயிர் போரடி கொண்டிருக்கம் போது தாலுகா.. வட்டம் பகுதி என விலாவரியாக அனைவராலும் தெளிவாக கூறமுடியாது….அல்லவா…

தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்….

அல்லது

இந்த முறை சாதாரண கால் டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கு இதே நிச்சயம் சாத்தியமே…

மேலும்

கோவிட் நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலிீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனிச்செயலியை அனைத்து மொபைல் கட்டாய செயலியாக அறிமுகபடுத்தலாமே..

இது எனது எண்ணம் மட்டுமே… இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே..?

மனவலிகளுடன்
அபிசரவணன்…

More Articles
Follows