நட்ராஜ் – பூனம்பஜ்வா ஜோடி.; ‘ஜெய்பீம்’ பட சர்ச்சை பெயரே தலைப்பானது

நட்ராஜ் – பூனம்பஜ்வா ஜோடி.; ‘ஜெய்பீம்’ பட சர்ச்சை பெயரே தலைப்பானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குருமூர்த்தி’.

இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு ச்சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது.

இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் விதமாக-இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் காமெடி, சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள்.

இதற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரி ‘மாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவைச் சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும்நடந்து முடிவடைந்திருக்கிறது.

ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் பட பிடிப்பு ஒரேஷெட் யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதி க்கட்ட (போஸ்ட் புரொடக்ஷன் ) வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.

இதில்: நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை : ஒளிப்பதிவு டைரக்டர் தேவராஜ் கவனித்திருக்கிறார். இசையை சத்ய தேவ் உதய சங்கர், அமைத்திருக்கிறார் .பாடல்கள்:மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன்,

எடிட்டிங் : S.N. பாசில், கலை : தாகூர், நடனம்: ராதிகா, சண்டை.:. பயர் கார்த்திக், ஸ்டில்ஸ்: மதன், மக்கள் தொடர்பு:பெருதுளசி பழனிவேல், வசனம்: கீர்த்தி வாசன்,

தயாரிப்பு:.சிவசலபதி , சாய் சரவணன்,
கதை, திரைக்கதை, டைரக்ஷன் கே.பி.தனசேகர்.

Natraj and Poonam Bajwa starring Gurumoorthy movie updates

MGR காலத்து ‘குதிரைவால்’ மனிதனை காண குஷியோடு காத்திருக்கும் ரசிகர்கள்

MGR காலத்து ‘குதிரைவால்’ மனிதனை காண குஷியோடு காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால்.

கலையரசன், அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார்.

மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம்.

இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் சமூககருத்துக்கள் கொண்டவையாக இருக்கும், குதிரைவால் முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் என்கிறார்கள்.

மார்ச் 18 முதல் தியேட்டரில் வெளியாகிறது குதிரைவால்.

Kuthiraivaal movie release date updates

இந்த டீசரை பார்த்தால் உங்களுக்கு இந்த செய்தியின் தலைப்பு புரியும்…

சிலையை கும்பிடுறோம்… பெண்களே கடவுள்…; நடிகர் சிவகுமார் பேச்சு

சிலையை கும்பிடுறோம்… பெண்களே கடவுள்…; நடிகர் சிவகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.

அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா பிப்ரவரி 5ல் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது…

“உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன்.

நான் பிறந்தபோது 10 மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா.

என் அம்மா எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு கூட ஊட்டி விட்டதில்லை. அவர் தனி ஆளாக நின்று விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார்” (அழுதபடியே பேசினார் சிவகுமார்).

விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்பவர்கள் பெண்கள்தான்.

கடவுளை யாரும் பார்த்ததில்லை. சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். ஆனால் பெண்கள்தான் கடவுள்”

இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.

Womens were God Sivakumar emotional speech at Uzhavar Viruthukal

விவசாயத்தை இன்ஜினியர்கள் மாற்றலாம்..; பேசி பேசியே காய்ந்த மரத்தை வளர வைத்த சூர்யா-கார்த்தி

விவசாயத்தை இன்ஜினியர்கள் மாற்றலாம்..; பேசி பேசியே காய்ந்த மரத்தை வளர வைத்த சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.

அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது…

“எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரம் திடீரென காய்ந்துவிட்டது. இனி அந்த மரம் வளராது என தோட்டக்காரர் சொன்னார்.

ஆனால் நாம் மரம் அருகே உட்கார்ந்து பேசினால் மரம் வளரும் என படித்தேன். அதை கார்த்தியிடம் சொன்னேன்.

அந்த மரத்தின் பக்கத்தில் சென்று, ‘உன் பக்கத்தில் உள்ள மரம் எப்படி வளருது. அதை மாதிரியே நீயும் வளர்ந்தால் என்ன?’ என்று அந்த மரத்திடம் பேசினேன்.
நான் ஒருநாள் மட்டும்தான் பேசினேன். கார்த்தி தினமும் மரத்துடன் பேசினார்.

தற்போது, காய்ந்த அந்த மரம் உயரமாக வளர்ந்துவிட்டது.”

இவ்வாறு சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது…

கல்லூரியில் ப்ராஜெக்டை காசு கொடுத்து மாணவர்கள் வாங்க வேண்டாம். இன்றைய சமூகத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நான் ஆலிவ் ஆயில் பயன்படுத்த வில்லை நம்ம ஊரு நல்லண்ணெய் தான் சாப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும். நுகர்வோரை விவசாயம் நோக்கி பார்க்க வைப்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது.

இன்ஜினியர்களுக்கு பஞ்சமே இல்லாத மாநிலம் தமிழ்நாடு. நானும் இன்ஜினியர் தான். ஆனால் இப்போ வேறு தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்.

இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

Suriya and Karthi speech at Uzhavar Virudhugal 2022 event

மீண்டும் ஜெயம் ரவியுடன் டூயட் பாடும் நயன்தாரா.?

மீண்டும் ஜெயம் ரவியுடன் டூயட் பாடும் நயன்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரிசையாக படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் நடிகர் ஜெயம் ரவி.

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து ஸ்கீரின் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள்ளார்.

இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஜெயம்ரவி.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

இவர்கள் இருவரும் ‘தனி ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மோகன்ராஜா இயக்கிய இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Nayanthara teams up again for new movie

மீண்டும் படமெடுக்கும் ராஜு சுந்தரம்.; ஏகனை போல் ஏமாற்றாமல் இருப்பாரா.?

மீண்டும் படமெடுக்கும் ராஜு சுந்தரம்.; ஏகனை போல் ஏமாற்றாமல் இருப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குனர்களில் முக்கியமானவர் ராஜு சுந்தரம்.

இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் அண்ணன் ஆவார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

தமிழில் சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

2008ல் அஜித், நயன்தாரா ஜோடியாக நடித்த ‘ஏகன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். ஆனால் அந்த படம் படுதோல்வியை தழுவியதால் அதன்பின்னர் படங்களை இயக்கவில்லை ராஜு சுந்தரம்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க முயற்சித்து வருகிறாராம்.

இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? என்ற உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

Actor Choreographer Raju Sundaram set to direct movie again

More Articles
Follows