பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க 25 தேசிய விருது கலைஞர்கள் கோரிக்கை

பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க 25 தேசிய விருது கலைஞர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathirajaஇயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஜீலை 17ஆம் தேதி தனது 78-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, எஸ்.தாணு, வெற்றிமாறன், ஜனநாதன், அகத்தியன் உள்பட 25 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில்… “இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்”

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathiraja

பிளான் பண்ணிப் பண்ணனும்… ரம்யா நம்பீசனின் ‘SUNSET DIARY’

பிளான் பண்ணிப் பண்ணனும்… ரம்யா நம்பீசனின் ‘SUNSET DIARY’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.

தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார்.

எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களின் இரைச்சல்களில் நம்மைத் தொலைத்திருப்பதை மறுபரிசீலனை செய்வதுடன், மகத்தான தருணங்களை நமக்கு வழங்கும் மனிதர்கள்பால் நமது கவனத்தை திருப்புவது பற்றிய நிகழ்ச்சி இது.

இந்த சிறிய தொடர் நிகழ்ச்சியை எழுதியிருக்கும் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…

“நம் மனதை செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. சுற்றுச் சூழலை நான் புரிந்து கொண்ட விதத்தை,

இந்த சிறிய தொடர் பதிவு செய்கிறது. என்னால் எழுதப்பட்டு ரம்யா நம்பீசனால் வழங்கப்படும் இந்த எளிய நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்”

மேலும் நிகழ்ச்சி குறித்து விவரித்து வழங்கும் ரம்யா நம்பீசன்
தெரிவித்ததாவது…

“நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம்.

இணைய உலகின் பக்கம் திரும்பி நமது பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகிறோம். இதை நாம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை.

இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் இந்த சிறிய தொடர். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

என்னுடைய யூ ட்யூப் சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தருவேன்” என்றார் ரம்யா நம்பீசன்.

ரியோ ராஜ் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ படத்தில் தற்போது ரம்யா நம்பீசனும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு எபிசோடுக்கு ரூ 50 லட்சம்.; வெப்சீரிஸ் தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்கிய வடிவேலு.!

ஒரு எபிசோடுக்கு ரூ 50 லட்சம்.; வெப்சீரிஸ் தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்கிய வடிவேலு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vadivelu salary updates for Web seriesவடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவில் காமெடி கடல் வற்றி விட்டது என்றே சொல்லலாம்.

அவரை தொடர்ந்து பலர் வந்தாலும் வடிவேலு இடம் இன்னும் காலியாகவே உள்ளது.

மெர்சல், கத்தி சண்டை படங்களில் நடித்திருந்தாலும் பழைய காமெடி இன்னும் வடிவேலுவிடம் வரவில்லை.

இந்நிலையில் காமெடியான வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் வடிவேலுவை அணுகியதாம்.

ஒரு எபிசோடுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் வடிவேலு. மொத்தம் 8 எபிசோட். அதாவது 4 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.

சான்ஸ் இல்லாத வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்க போனால் இப்படியா கேட்பார்.? என கிறுகிறுத்து போய்விட்டாராம் புரொடியூசர்.

Actor Vadivelu salary updates for Web series

ஹீரோயின் சான்ஸுக்காக காத்திருந்த அஜித்தின் ரீல் மகள்.; கை கொடுத்தது கேரளா.!

ஹீரோயின் சான்ஸுக்காக காத்திருந்த அஜித்தின் ரீல் மகள்.; கை கொடுத்தது கேரளா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anikha Surendran recent photos goes viral She got heroine chanceமூன்று வயதிலேயே தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் பேபி அனிகா.

சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

சில வருடங்களில் தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்தார்.

தற்போது இவருக்கு 15 வயதாகிறது.

எனவே ஹீரோயினாக நடிக்க தயாராகிவிட்டார் அனிகா.

தமிழில் வாய்ப்பு தேடி கிடைக்காத பட்சத்தில் மலையாள படம் ஒன்றில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

இந்தப் படம் பள்ளிக் காதலை மையமாக கொண்ட கதையாம்.

Anikha Surendran recent photos goes viral She got heroine chance

ரஜினி & விஜய்யை வம்பிழுக்கும் மீரா மிதுன்..; தமிழக முதல்வராக ஆசை வேற..!

ரஜினி & விஜய்யை வம்பிழுக்கும் மீரா மிதுன்..; தமிழக முதல்வராக ஆசை வேற..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meera Mitun threatens legal action against Rajini and Vijay மாடலும் நடிகையுமான மீரா மிதுன் அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி வருபவர்.

சில தினங்களுக்கு முன் தன் இணைய பக்கத்தில்…

“தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டது… இதனால் தமிழக அரசை பிரதமர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன்.. தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் எல்லாரையும் ஒரே மாசத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன்.

அதனால் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கனும்” என்று பதிவிட்டார்.

இதை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.

தற்போது மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில்…:

“தமிழகம் என்னை ஒதுக்கி விட்டது… அதற்கு நன்றி… அதனால் தான் நான் இப்போது சூப்பர் மாடலாக இருக்கிறேன். கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால், நான் பாலிவுட், ஹாலிவுட்டில் வேலை பார்த்து வருகிறேன்.

ஆனால் இந்த தமிழ்நாடு ஏன் இன்னும் என்னை டார்கெட் செய்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை.

என்னை விமர்சிப்பது தான் இவர்களுக்கு ஒரே வேலையா?

தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்.

தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள்….

நான் பத்திரமாக இருக்கிறேன்… கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்?!

சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்… கடவுள் பார்க்கிறார்” என பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்

Meera Mitun threatens legal action against Rajini and Vijay

+2 ரிசல்ட் தனியார் பள்ளிகள் செஞ்சுரி; அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம் குறைவு; கல்வி அமைச்சர் கவலை

+2 ரிசல்ட் தனியார் பள்ளிகள் செஞ்சுரி; அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம் குறைவு; கல்வி அமைச்சர் கவலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Puducherry Education Minister Kamalakannan upset with Plus 2 result 2020தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களுக்கான +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகளவில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி 3.6 சதவீதம் குறைவு என கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள காமராஜர் வளாகத்தில் இன்று கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அச்சமயம் புதுச்சேரி மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 14 ஆயிரத்து 571 மாணவ, மாணவிகளில்13 ஆயிரத்து 306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம் .

இது கடந்தாண்டை விட 1.62 சதவீதம் குறைவு. புதுச்சேரி மாநிலத்தில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் தேர்ச்சி 3.6 சதவீதம் குறைவாக உள்ளது. அதற்க்கு காரணம் ஆசிரியர்கள் பணியமர்த்துவதில் ஏற்படும் கோளாறுகளால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இது போன்ற சில காரணங்களால் தேர்ச்சி சதவிகிதம் கடந்தாண்டை விட குறைந்துள்ளது என கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

Puducherry Education Minister Kamalakannan upset with Plus 2 result 2020

More Articles
Follows