நடிகர் சங்க தேர்தல் : விஷாலின் ‘பாண்டவர் அணி’ பட்டியல் வெளியீடு

நடிகர் சங்க தேர்தல் : விஷாலின் ‘பாண்டவர் அணி’ பட்டியல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nasser and Vishal team to contest again in Nadigar Sangam election 2019பொதுத் தேர்தலை போல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்து வருகிறது.

கடந்த முறை நாசர் தலைமையிலான பாண்டவர் அணி களமிறங்கி வெற்றி பெற்று. மூன்றாண்டுகளை நிறைவு செய்த போதிலும் தேர்தல் நடைபெறவில்லை.

மாறாக நடிகர் சங்கம் கட்டட பணிகள் காரணமாக 6 மாதம் தேர்தல் தள்ளிப்போனது.

தற்போது, 2019-22க்கான தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி, சென்னை, அடையாறு ஜானகி – எம்.ஜி.ஆர்., கல்லூரியில் நடக்கவுள்ளது.

தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியே மீண்டும் களமிறங்குகிறது. இந்த அணியில் போட்டியிடும் 31 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு :

இம்முறையும் நாசரே தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கடந்த முறை துணை தலைவராக இருந்த பொன்வண்ணன் இம்முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக பூச்சி முருகன் போட்டியிடுகிறார்.

பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு.

தலைவர் – M. நாசர்,
துணை தலைவர்கள்- பூச்சிமுருகன், கருணாஸ்.
பொது செயலாளர்- விஷால்,
பொருளாளர்- Si.கார்த்தி.

செயற்குழு உறுப்பினர்கள்:
1.ஸ்ரீமன்.
2.பசுபதி.
3.ரமணா.
4.நந்தா.
5.’தளபதி’தினேஷ்
6.சோனியா போஸ்.
7.குட்டி பத்மினி.
8.கோவை சரளா
9.பிரேம்.
10.ராஜேஷ்.
11.மனோபாலா.
12.ஜெரால்டு
13.காளிமுத்து.
14.ரத்னாப்பா.
15.M.A.பிரகாஷ்.
16.அஜய் ரத்தினம்.
17.பிரசன்னா.
18.ஜூனியர் பாலய்யா.
19.ஹேம சந்திரன்
20.குஷ்பூ.
21.லதா.
22.நிதின் சத்தியா .
23.’பருத்திவீரன்’ சரவணன்
24.ஆதி.
25.வாசுதேவன்.
26.காந்தி காரைக்குடி

Nasser and Vishal team to contest again in Nadigar Sangam election 2019

ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா

ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)நடிகர் சூர்யாவுக்கு தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் நல்ல மார்கெட் உள்ளது. அவருக்கும் அங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பற்றிய வாழ்க்கை படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆந்திர முன்னாள் முதல்வரும், இன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் தயாரானது. அதில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்திருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக சூர்யா நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து சூர்யா கூறியதாவது..

நானும் அந்த செய்திகளை படித்தேன். ஆனால் அதில் உண்மை இல்லை.

ஜெகன் அண்ணாவுடன் நல்ல நட்பு இருக்கிறது. அண்ணா முதல்வராகி இருப்பதில் மகிழ்ச்சி.

ஜெகன் அண்ணா வாழ்க்கையை சொல்லும் படம் நல்ல திரைக்கதையுடன் வந்தால் அவர் கேரக்டரில் நடிக்க விருப்பம் உள்ளது”. என கூறியுள்ளார்.

100 முறை ரத்ததானம் செய்த மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

100 முறை ரத்ததானம் செய்த மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)நம்மில் பலர் ரத்ததானம் செய்யவே பயப்படுகிறார்கள். ரத்ததானம் பற்றி நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒரு சில இளைஞர்களே இதை செய்து வருகின்றனர்.

ஆனால் பிரகாஷ் என்ற மாற்றுத் திறனாளி 100 தடவைக்கு மேல் ரத்ததானம் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

ஒரு மாற்றுத்திறனாளி இந்த அளவிற்கு ரத்ததானம் செய்ததில்லை என கூறப்படுகிறது.

அவரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து பிரகாஷ் கூறியதாவது:

நான் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே உண்டு.

இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து ரத்ததானம் மற்றும் உடல்தான விழிப்புணர்வும் செய்துள்ளேன்.

எனவே எனக்கு சாதனை சான்றிதழ் வழங்கி உள்ளனர். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த சாதனை சான்றிதழை ரஜினி அவர்கள் கையால் வாங்க விரும்பினேன்.

இதை மன்றம் மூலம் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் என்னை அழைத்து பாராட்டினார். அவர் கையால் அந்த சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்டேன்.” என்றார்.

ரம்ஜான் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப்போன ‘கொலைகாரன்’

ரம்ஜான் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப்போன ‘கொலைகாரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவரும் இணைந்துள்ள படம் கொலைகாரன் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஆஷ்மிகா நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை தியா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனஞ்செயன் அவர்கள் படத்தை வெளியிடுகிறார்.

நாளை ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 5-ந்தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஜூன் 7-ந்தேதி (வழக்கம்போல வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

காலா 2 படம் குறித்து டைரக்டர் ரஞ்சித் ஓபன் டாக்

காலா 2 படம் குறித்து டைரக்டர் ரஞ்சித் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

அதன்பின்னர் அவர் தமிழ் படங்கள் இயக்காமல் படங்களை தயாரித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற தமிழ் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது…

காலா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி கேட்டனர்.

காலா 2 படம் இயக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் அதுபோன்ற படங்கள் இனி அதிகம் வரும்” என்றார்.

​பெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்

​பெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)இலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். இலங்கையில் சிறந்த நடிகர் மற்றும் பாப்புலர் ஆக்டர் என இரண்டு நேஷனல் அவார்டைத் தட்டிச் சென்றுள்ளார்.

குழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இந்தப் படத்தின் கதைக் கருவும் வீர்சிங்கே தந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நுழைந்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் வீர்சிங்.

மும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஸ்ரீலங்காவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறேன்.. அங்கே கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் அந்த நிமிடம் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன்..

இந்தப் படத்தின் கதைக்கருவை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு உருவாக்கி வந்தேன். எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் இதைச் சொன்னதும் இதைப் படமாக்க முடிவு செய்தோம். நான் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவன்.

அதனால் ஒவ்வொரு பெண்ணையும் தாயாக மதிக்க வேண்டும் என நினைப்பவன்.. அவர்கள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல.. அவர்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது என் மனதிலேயே ஊறிவிட்டது.

இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்கா மற்றும் தமிழ்நாடு என இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளது.. முன் ஜென்மத்தில் எனக்கு இந்தியாவுடன் ஏதோ தொடர்பு இருந்து இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

அதனால்தான் என்னையும் அறியாமல் இந்தியாவை நேசிப்பதுடன் தென்னிந்திய மொழிப் படங்களில் குறிப்பாக தமிழில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன்.

தமிழில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்வதை மட்டுமே விரும்புகிறேன். நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன் என்கிறார் வீர்சிங்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் பற்றி பேசுகிறபோது, “முஸ்லீம்கள் எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல.. இங்கே முஸ்லீம்கள், தமிழர்கள் என எல்லோரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறினால் இந்த நட்பு பாதிப்புக்கு உள்ளாகிறது ஒரே உலகம் ஒரே மக்கள்.. எல்லோருக்கும் இந்த உலகில் உயிர் வாழ உரிமை இருக்கும்போது, அவர்களைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்கிறார் வருத்தம் கலந்த வலியுடன்!

அந்த நிமிடம் படம் வெளியான பின் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இடம் கிடைக்கும் என்கிறார் வீர் சிங்….

More Articles
Follows