உலகளவில் டாப் 10 வரிசையில் ஒரே இந்தியப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’

உலகளவில் டாப் 10 வரிசையில் ஒரே இந்தியப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு சில தயாரிப்பாளர்கள் தியேட்டர்கள் திறக்கட்டும் என காத்திருந்தாலும் சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா தயாரித்த 4-5 படங்களை ஓடிடியில்தான் வெளியிட்டார். வருகிற பிப்ரவரி 10ல் விக்ரம் நடித்துள்ள மகான் படம் அமேசானில் ரிலீசாகவுள்ளது.

அண்ணாத்த, புஷ்பா, மாநாடு உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வசூல் வேட்டையாடினாலும் பின்னர் ஓடிடி தளங்களில் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற தெலுங்கு படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ராகுல் சங்க்ரித்யன் இயக்கியுள்ள இந்த படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சானு ஜான் வர்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி 1 மாதத்திற்கு பிறகு 2022 ஜனவரி 21ல் நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

முன்பு பெற்ற வரவேற்பை விட தற்போது குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது மற்ற மொழிகளிலும் வெளியாகியுள்ளதால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சமூக கருத்துள்ள வசனங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், நெட்பிஃளிக்ஸ் வெளியிட்டுள்ள உலகளவில் டாப் 10 படங்களின் பட்டியலில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ 3ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியப் படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ‘ஹவ் ஐ ஃபெல் இன் லவ் வித் எ கேங்ஸ்டர்’ (போலந்து நாட்டு மொழி) என்ற படம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆங்கில படங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Nani’s Shyam Singha Roy Third Most-Watched Film On Netflix

ஊரடங்கு ரத்து.. மார்ச்சை குறி வைக்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்

ஊரடங்கு ரத்து.. மார்ச்சை குறி வைக்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்

கொரோனா பரவல் குறைவதை (நாங்க சொல்லலப்பா…) தொடர்ந்து இன்று ஜனவரி 28 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஜனவரி 30 முதல் இனி வரும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதனால் இரவு காட்சி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் படத்தை திரையிட வாய்ப்புள்ளதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே ஓரிரு படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்க தொடங்கியுள்ளனர்.

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை பிப்ரவரி 4ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மேலும் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தையும் ரிலீஸ் செய்ய நல்ல தேதியை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்தை மார்ச் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டான்’.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஷிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இப்பட இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan’s Don release date locked?

14 வயதில் தொடங்கி 450 படங்களில் நடித்த சௌகார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது..; நாசர் வாழ்த்து

14 வயதில் தொடங்கி 450 படங்களில் நடித்த சௌகார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது..; நாசர் வாழ்த்து

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மஶ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.

தமிழ் சினிமா நடிகர் நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சௌகார் ஜானகி தன் 14 வயதிலேயே மேடை நாடகம் மூலம் நடிப்பு துறையில் கால்பதித்தவர்.

தன் 18 வயதில் 1949 ஆம் ஆண்டில் ‘சவுக்கார்’ எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 450 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். கலையுலகிற்கு அவர் செய்திட்ட அறப்பணிகள், சாதனைகள் ஏராளம். மொழிகள் தாண்டி கணக்கிலடங்கா வெள்ளிவிழா வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

81 வயதை கடந்தும் சமீபத்தில் வெளியான நடிகர் கார்த்தியின் “தம்பி”, கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ படம் வரையிலும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

கலையுலக பொக்கிஷமான நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கௌரவம் கிடைத்துள்ளதை தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் நாசர் வெளியிட்ட அறிக்கையில்..

‘ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா..
அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்!

ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை.
புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி!
‘புதிய பறவையில்’ மிரட்டியதும்
மிரண்டு போனதும் ஒரே ஜோடிக் கண்களா? ஆச்சர்யம்!

கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!!
தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து
மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய்
இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை.

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்“
என்று தெரிவித்துள்ளார்.

Actor Nassar wishes to legendary actress Sowcar Janaki

கமல்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் சூர்யா-தனுஷ் பட ஹீரோயின்

கமல்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் சூர்யா-தனுஷ் பட ஹீரோயின்

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.

தற்போதே இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதில் சாய்பல்லவியை நாயகியாக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் தனுஷிடன் மாரி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் சாய்பல்லவிக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவருகிறார் சாய்பல்லவி.

இவர் நானி உடன் நடித்த ‘ஷ்யாம் சிங்காய் ராய்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது ராணா டகுபதியுடன் ’விரட்டா பர்வம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சாய்பல்லவி.

Actress Sai Pallavi to romance Sivakarthikeyan ?

மீண்டும் மீண்டும் தனுஷை பாலிவுட் அழைக்கும் ஆனந்த் எல். ராய்

மீண்டும் மீண்டும் தனுஷை பாலிவுட் அழைக்கும் ஆனந்த் எல். ராய்

கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த தனுஷை பாலிவுட் அழைத்து சென்றவர் டைரக்டர் ஆனந்த் எல். ராய்.

2013ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ்.

அதன்பின்னர் பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் தனுஷ்.

இதன் பின்னர் மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். இந்த படம் அண்மையில் வெளியானது.

தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தனுஷை அழைத்திருக்கிறாராம் ஆனந்த் எல். ராய்.

இவரே தயாரித்து இயக்கவுள்ள ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படத்தில் நடிக்க அழைப்ப விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ், ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி (சார்) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் தெலுங்கு இயக்குனர்கள் சுகுமார் மற்றும் சேகர் கம்முலா ஆகியோரது இயக்கங்களிலும் நடிக்கவும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

Dhanush and Anand L Roy joins 3rd time

உனக்கு பிடிக்காது… அதான் செஞ்சேன்..; காதலனை கலாய்த்து வாழ்த்திய பிரியா பவானி சங்கர்

உனக்கு பிடிக்காது… அதான் செஞ்சேன்..; காதலனை கலாய்த்து வாழ்த்திய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி யார் என்றால் அது பிரியா பவானி சங்கர் தான்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிளட் மணி, ஓ மணப்பெண்ணே இரண்டும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது குருதி ஆட்டம், யானை, பொம்மை, ருத்ரன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் காதலனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்… ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாய். ஆனால் இப்போ நல்ல மனிதராக மாறி விட்டாய். நான் அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, அன்பு, நட்பு, அமைதி,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது. அதனால் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளேன்” என காதலனை கலாய்த்து பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Actress Priya Bhavani Shankar wishes to her boy friend

More Articles
Follows