தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபலம் என்றாலே பிராப்ளம்தான்… இது எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? ரஜினிக்கு 100% பொருந்தும்.
ரஜினி பேசினாலும் பிரச்சினை. பேசாவிட்டாலும் பிரச்சினை.
ரஜினி சென்றாலும் பிரச்சினை. செல்லாவிட்டாலும் பிரச்சினை.
அப்படித்தான் லைக்கா ஏற்பாடு செய்த வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருந்தார்.
ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளால் இப்பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
இந்நிலையில், இதுகுறித்து ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கூறியுள்ளதாவது…
‘இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் உதவ மாட்டார்கள்.
தற்போது உதவ வந்த ரஜினியையும் அவர்கள் தடுத்துவிட்டனர்.
அவர்களின் சுயலாபத்திற்காக இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை வேறு திசையில் திருப்பிவிட்டனர்.
தமிழகத்தில் தேர்தல்வரும் போதும் மட்டும்தான் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் நினைவில் வருவார்கள்.
தமிழக அரசியல்வாதிகளின் சுயரூபம் இதுதான்’ என கூறியுள்ளார்.