தன் பெயரிலேயே தாய் கொண்ட தயாரிப்பாளர் தாய்க்கு மணிமண்டபம் கட்டினார்

தன் பெயரிலேயே தாய் கொண்ட தயாரிப்பாளர் தாய்க்கு மணிமண்டபம் கட்டினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த தயாரிப்பாளர் தாய் சரவணன் தனது தாய் நினைவாக மிகப்பெரும் மணிமண்டபம் கட்டியுள்ளார்.

ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப், என பல தரமான படைப்புகளை தயாரித்து தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பளாராக வலம் வருபவர் தாய் சரவணன்.

மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மக்கள் போற்றிய பல நல்ல திரைப் படங்களை ரிலீஸ் செய்து நல் மதிப்பு பெற்றவர்.

தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர், தற்போது தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் ஒரு மணிமண்டம் கட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு அவரது தாய் மறைவடைந்ததை ஒட்டி, தனது தாய் திருமதி ஜெயலக்‌ஷ்மி நினைவாக, ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமாக ஒரு மணிமண்டபத்தை அமைத்துள்ளளார்.

தாயின் மீது பாசம் கொண்டு அவருக்கு கோயில் கட்டியிருக்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது .

Nallu Pictures Producer Thai Saravanan erects a beautiful memorial at ottan chatthiram for his mother

ரொமான்டிக் ஹீரோவாக லாரன்ஸை மாற்றும் கௌதம் மேனன்

ரொமான்டிக் ஹீரோவாக லாரன்ஸை மாற்றும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்தாலும் குழந்தைகள் சிரித்து மகிழும் வகையில் பேய் படங்களை உருவாக்கியவர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.

இன்றளவும் இவர் இயக்கிய காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய படங்கள் குழந்தைகள் மத்தியில் படு பிரபலம்.

இந்த நிலையில் இதுநாள் வரை பேய் படங்களை காட்டிய குழந்தைகளை மிரட்டிய லாரன்ஸை இனி காதல் நாயகனாக காட்டப் போகிறாராம் இயக்குனர் கௌதம் மேனன்.

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றால் அது கௌதம் மேனன் தான். அவரது படங்களில் காதல் மிக மென்மையாக காட்டப்படும்.

எனவே அந்த வரிசையில் தற்போது இணையவுள்ளார் ராகவா லாரனஸ்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Raghava Lawrence to join with Gautham Menon for his next

விஜய்-சிவகார்த்திகேயன் இணைந்து தரும் காதலர் தின விருந்து

விஜய்-சிவகார்த்திகேயன் இணைந்து தரும் காதலர் தின விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட்.

அனிருத் இசையமைக்க இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதில் விஜய்யுடன் பூஜா, செல்வராகவன், யோகிபாபு, நடிகை அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடஙகளில் நடித்து வருகின்றனர்.

இந்த படமும் நெல்சனின் வழக்கமான கடத்தல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி கோடை விடுமுறையில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 14ல் காதலர் தின விருந்தாக பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அனிருத் சிவகார்த்திகேயன் நெல்சன் ஆகிய மூவரும் இணைந்தால் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்தான். இந்த முறை டான்ஸ் கிங் விஜய்யும் இணைந்துள்ளதால் பாடல் வேற லெவலில் இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Beast next single will release on valentines day

இந்தாண்டு ‘தல’ பொங்கல் மிஸ் ஆச்சு… ஆனா ‘தல’ தீபாவளி கன்பார்ம்.!

இந்தாண்டு ‘தல’ பொங்கல் மிஸ் ஆச்சு… ஆனா ‘தல’ தீபாவளி கன்பார்ம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தல என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் சொன்னாலும் இன்னும் சிலர் அஜித்தை தல என்றே அழைத்து வருகின்றனர்.

15 வருடங்களாக தல என்று அழைத்த ஒருவரை திடீரென அழைக்க வேண்டாம் என கூறினால் அது மாற சில வருடங்கள் ஆகும்தானே. சரி விஷயத்துக்கு வருவோம்..

இந்த வருடம் 2022 அஜித் நடித்த வலிமை படம் ரிலீசானால் தல பொங்கல் கொண்டாடலாம் என காத்திருந்தனர். ஆனால் கொரோனோ வைரஸ் தொற்றால் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமலில் உள்ளதால் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த நிலையில் இந்த வருட தீபாவளி நிச்சயம் தல தீபாவளி தான் என தெரிய வந்துள்ளது.

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ,இந்த படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார்.

அஜித் 61 பட சூட்டிங்கை பிப்ரவரியில் தொடங்கி தீபாவளிக்கு படத்தை திரையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பட பூஜை இன்று போடப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

வலிமை படத்தை மார்ச் இறுதியில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

AK 61 is all set for diwali release

ஏஜிஎஸ் தயாரிப்பில் இணையும் சிம்பு.. டைரக்டர் யார் தெரியுமா?

ஏஜிஎஸ் தயாரிப்பில் இணையும் சிம்பு.. டைரக்டர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஒருவன், நாய்சேகர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ்.

இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்பு தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கௌதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்த்து காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu to join with AGS productions for his next

விஜய்சேதுபதி சந்தீப் கௌதம்மேனன் கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

விஜய்சேதுபதி சந்தீப் கௌதம்மேனன் கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.

தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் எண்டர்டெய்னரான “மைக்கேல்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார்.

மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படம் துவங்கப்பட்டதிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்பிலும், படம் மிகப்பிரமாண்ட நிலையை எட்டி வருகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் வித்தியாசமான திரைக்கதையில், நடிகர் சந்தீப் கிஷன் ஒரு அழுத்தமிகுந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.

‘மைக்கேல்’ திரைப்படம் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக, நாராயண் தாஸ் K நரங் இப்படத்தை வழங்குகிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்: சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு
இயக்குனர்: ரஞ்சித் ஜெயக்கொடி தயாரிப்பாளர்கள்: பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ்
வழங்குபவர்: நாராயண் தாஸ் K நரங்
தயாரிப்பு நிறுவனங்கள் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி
நிர்வாக தயாரிப்பாளர்: சிவா செர்ரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Varalaxmi Sarathkumar On Board For Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Michael

More Articles
Follows