தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என தலைப்பிட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்மையில் இப்பட கேரக்டர் போஸ்டர் வெளியானது. அதை பார்த்த எல்லோரும் சாவித்ரி போல் கீர்த்தி இருப்பதாக கூறியிருந்தனர்.
இவர்களோடு சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வருகிற மே 9ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
