‘நான் ஒரு ஏலியன்’… யூடர்ன் போட்டு ஆல்பத்திற்கு திரும்பிய ஹிப் ஹாப் ஆதி

hip hop tamizhaஹிப் ஹாப் பாடலை தமிழக இசை ரசிகர்களிடையே பிரபலமாக்கியவர்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பெரும் பங்குண்டு.
இவரது இசை ஆல்பங்களுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு எப்போதும் உண்டு.
வணக்கம் சென்னை, எதிர் நீச்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் இவர் பாடியுள்ளார்.
மேலும் ஆம்பள, தனி ஒருவன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த கட்டமாக மீசைய முறுக்கு படத்தை இயக்கி நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.
நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்தார்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் சினிமா சூட்டிங்குகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் இசை ஆல்பங்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
அதன்படி ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ர்.
இந்த ஆல்பத்தின் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதில் முதல் பாடல் வெளியான நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முழு ஆல்பமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post