தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் டைரக்டர் பாலா தயாரித்திருந்தார்.
2014ல் வெளியான பிசாசு படம் வெற்றி பெற்றது. இதில் ராதாரவி மாறுப்பட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.
தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு பிசாசு படம் இரண்டாம் பாகம் தயாராகிறது.
முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.
ஆண்ட்ரியா நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்த நிலையில், டைரக்டர் பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ பட டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து மிஷ்கின் டுவிட் செய்துள்ளார்.
அதில் “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா.
‘பிசாசு 2’ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” என மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.
Mysskin thanked director bala for title
