என் மகன் மகிழ்வன்; தமிழ் சினிமாவில் முதல் ஹோமோ செக்ஸ் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஆண் ஓரின சேர்க்கை பற்றிய படம் ஒன்று உருவாகியுள்ளது.

‘என் மகன் மகிழ்வன்’ (MY SON IS GAY) என இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

லோகேஷ் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா, குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர், ஜெயப்பிரகாஷ் என பலர் நடித்துள்ளனர்.

ரத்தின குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஏற்கெனவே மெல்போர்னில் நடைபெற்ற இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், நியூயார்க்கில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவல், கல்கத்தா இண்டர்நேஷனல் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் மற்றும் வீடியோ ஃபெஸ்டிவல், கோவா ஃபிலிம் பஜார், சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் மாதம் 20ஆம் தேதி., கன்னெல்லி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட உள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி பாம் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்தவர் ஷகீலா.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்களின் வரவேற்பால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களே தடுமாறிய காலம் உண்டு.

தற்போது இவரது வாழ்க்கை படமாக உருவாகவுள்ளது.

இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்க, ஷகீலா கேரக்டரில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறாராம்.

இப்படம் குறித்து படக்குழு கூறியதாவது…

ஷகீலாவுக்கு ஆசியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது.

படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம்” என்றனர்.

தனுஷின் வடசென்னை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை.

இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து லைக்கா நிறுவனம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரும் தயாரிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை 3 பாகங்களாக உருவாக்கி வருகின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் நாளை மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் வெளியாகவுள்ளது.

35 வருட காலத்தில் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்களை கதையாக கொண்டு இப்படம் உருவாகிறது.

இதில் கேரம் போர்ட்டு சாம்பியனாக தனுஷ் நடிக்கிறார். அத்துடன் அதில் அரசியல் கலந்து அதிரடியாக வெற்றிமாறன் கொடுத்திருக்கிறாராம்.

இதில் அன்பு கேரக்டரில் தனுஷ், குணா கேரக்டரில் சமுத்திரக்கனி, ராஜன் கேரக்டரில் அமீர், பத்மா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ், சந்திரா கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.

இப்படம் ஜீன் மாதம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகும் எனத் தெரிகிறது.

Dhanush Ameer character updates from Vada Chennai

வயதில் மூத்த எஸ்ஏசி ஏன் ரஜினி காலில் விழுந்தார்?; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்.

இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ரஜினிகாந்த் தன் கையால் நினைவு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவ்விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அவரின் செயலை சற்றும் எதிர்பாராத ரஜினி ஏன் இப்படி? வேண்டாம் என மறுத்துள்ளார். அதன்பின்னர் அவருக்கு நினைவு பரிசை வழங்கினார்.

ரஜினியை விட எஸ்ஏசி வயதில் மூத்தவர். அவர் ஏன் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்? என விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

Vijay father SA Chandrasekar got blessed from Rajinikanth

விதிகளை மீறி வீடு கட்டிய கமல்-ரம்யா கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை அடுத்த உத்தண்டி கடற்கரை பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற, CMDA-விற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், உத்தண்டி கடற்கரை பகுதியில் தங்களுக்குச் சொந்தமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கோரினால், சிஎம்டிஏ மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து அனுமதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், தங்கள் இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, மற்றவர்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதுபோல், தங்களுக்கும் அனுமதி வழங்க, CMDA-விற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசராணைக்கு வந்தது. அப்போது, CMDA மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மனுதாரர் குறிப்பிடுகிற இடத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள், விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், இதில், நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் அடங்கும் என CMDA தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், விதிகள் மீறப்பட்டிருந்தால், அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு CMDA நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை CMDA மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, CMDAவும், சென்னை மாநகராட்சியும், அடுத்த மாதம் 9ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Unapproved construction on ECR Court Notices to Kamal and Ramya Krishnan

பேஸ்புக்-இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டரில் தொடங்கினார்.

அதனை தொடர்ந்து அதில் தனது வாழ்த்துக்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்.

எனவே ட்விட்டரில் மட்டும் 45,74,324 பேர், ரஜினியை பின் தொடர்கின்றனர்.

தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், தனது அதிகாரப்பூர்வ கணக்கை இன்று ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் ‘வணக்கம்’ என்று தனது முதல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth officially joined in Facebook and Instagram

ரஜினிகாந்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி இதோ..

Facebook – http://fb.com/rajinikanth
Instagram – http://instagram.com/rajinikanth

More Articles
Follows