‘யோசிக்காம எங்க அப்பா பேச மாட்டார்..’ கமல் மகள் அக்ஷராஹாசன்

‘யோசிக்காம எங்க அப்பா பேச மாட்டார்..’ கமல் மகள் அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal with daughter aksharahassanஅண்மைகாலமாக அரசியல் கருத்துக்களை அதிரடியாக கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறிவருகிறார்.

மேலும் தனியார் டிவி சேனல்களிலும் பேட்டியளித்து வருகிறார்.

இதனிடையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதிலளித்து இருந்தார்.

இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தன.

மேலும், கமல் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு மட்டுமில்லை. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து கமல்ஹாசனின் இளைய மகள் பதில் அக்‌ஷராஹாசன் கூறியதாவது…

“என் அப்பா எதை பேச முயன்றாலும், அதுகுறித்து நிறைய யோசிப்பார். ஆழமாக சிந்திப்பார். அதன்பிறகுதான் பேசுவார்.

அவரது வாழ்க்கையில் இதுபோன்ற நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

My father wont talk without thinking says Kamal daughter Aksharahassan

அரசியலா..? சினிமா..? ரசிகர்களுடன் ரஜினி ஆலோசனை

அரசியலா..? சினிமா..? ரசிகர்களுடன் ரஜினி ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Artஇலங்கை பயணம் செல்லவிருக்கிறார் ரஜினி… என்ற அறிவிப்பு வந்த உடனே அதுபற்றிய சர்ச்சை தமிழகத்தில் புயலாக வீசியது.

பின்னர் அரசியல்வாதிகளின் நெருக்கடியால் இலங்கை செல்லவில்லை என அறிவித்தார் ரஜினி.

ஆனால் இலங்கை தமிழர்கள் ரஜினியை காண வேண்டும் எனவும், அவரை எதிர்க்க தமிழக அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் கூறி போராட்டங்கள் நடத்தினர்.

இதற்கு ரஜினி நன்றி தெரிவித்து, நல்லதை நினைப்போம். விரைவில் சந்திப்போம் என கூறி அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

இதனால் தமிழக அரசியல் நிலவரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி தன் ரசிகர்களை சென்னையில் ரஜினி சந்திக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த கூட்டத்தில் அரசியல் குறித்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படுமா? அல்லது இது சினிமா குறித்த சந்திப்பா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

Rajinikanth going to meet his fans on April 2nd 2017

ரஜினி-தனுஷ் இணையும் படத்தின் போட்டோ சூட் அப்டேட்ஸ்

ரஜினி-தனுஷ் இணையும் படத்தின் போட்டோ சூட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini dhanush ranjith2.0 படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை இவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தன் சொந்த பேனரில் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் போடப்படும் என்று தெரிய வந்துள்ளது.

எனவே இப்படத்திற்கான போட்டோ சூட்டை விரைவில் நடத்தவிருக்கிறார்களாம்.

இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார்.

படத்தின் பூஜை குறித்த அறிவிப்பு வரும் அன்றே, படத்தின் தலைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Rajini Dhanush Ranjith movie photo shoot updates

விஜய்யை தொடர்ந்து பிரபாஸை இயக்கும் அட்லி..?

விஜய்யை தொடர்ந்து பிரபாஸை இயக்கும் அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas atleeராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் பாகுபலி.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ‘பாகுபலி 2’ உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இதன் தெலுங்கு பதிப்பின் விழா ஆந்திராவில் நடைபெற்றது.

இந்த விழாவில் அட்லியும் கலந்து கொண்டார்.

இதற்கு முக்கிய காரணம் பாகுபலி நாயகன் பிரபாஸ்தான் என கூறப்படுகிறது.

அதாவது… ‘பாகுபலி 2’ படத்திற்கு பின்னர் சுஜித் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் பிரபாஸ்.

இதனையடுத்து, தமிழில் ஒரு படத்தில் நடிக்க விரும்பினாராம்.

அப்படத்தை அட்லி இயக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அட்லியை அழைத்ததாக சொல்லப்படுகிறது.

‘விஜய் 61’ படத்தை முடித்துவிட்டு, பிரபாஸ் படத்தை அட்லி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Vijay 61 project Atlee may direct Baahubali hero Prabhas

திருமா-வேல்முருகனை எச்சரித்த ரசிகர்களுக்கு ரஜினி நன்றி

திருமா-வேல்முருகனை எச்சரித்த ரசிகர்களுக்கு ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri lanka welcomஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகளை வழங்க திட்டமிட்டு, அதில் கலந்து கொள்ள ரஜினியை அழைத்தனர்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ரஜினியை தடுக்க, இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.

எனவே, ரஜினியின் இலங்கை பயணத்தை தடுத்த, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோருக்கு எதிராக இலங்கையின் யாழ்பாணம், முல்லை தீவு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிந்த ராஜ்பக்சேவுடன் கை குலுக்கிய திருமாவளவனுக்கு ரஜினியை தடுக்க என்ன தகுதி இருக்கிறது ? தலைவா வா… என்பது போன்ற வாசகங்களை வைத்து போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு ஆதவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும், நேரம் கூடிவரும் போது சந்திப்போம்.

நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கண்டித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.

Rajini said Thanks to Srilanka peoples who warned Tamil political leaders

sri lanka peoples

‘பாம்பு சட்டை’ ஆடம்தாசனை பாராட்டிய ‘கபாலி’ ரஞ்சித்

‘பாம்பு சட்டை’ ஆடம்தாசனை பாராட்டிய ‘கபாலி’ ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paambu Sattai director with ranjithமனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு நடித்த பாம்பு சட்டை படம் அண்மையில் வெளியானது.

ஆடம்தாசன் இயக்கிய இப்படம் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி கிடந்தது.

படம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்குனரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

“நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப் படைப்பு அருமை,” என்று பாராட்டியுள்ளார் ரஞ்சித்.

Kabali director Pa Ranjith has praised and wished Director Adam Dasan for his debut movie Paambu Sattai for its bold content and fine making.

More Articles
Follows