‘பீட்டா அமைப்பில் என் மகள் இல்லை…’ த்ரிஷா அம்மா விளக்கம்

‘பீட்டா அமைப்பில் என் மகள் இல்லை…’ த்ரிஷா அம்மா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha with her mother umaஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கும் த்ரிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ரசிகர்கள் த்ரிஷாவை இணையத்தளங்களில் திட்டி வருகின்றனர்.

இதனால் தன் ட்விட்டர் அக்கௌண்ட்டை த்ரிஷா நீக்கியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமா கூறியதாவது…

“த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து தவறான கருத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை. என் மகள் பீட்டா அமைப்பிலும் இல்லை.” என்றார்.

My daughter is not in PETA says Trisha mother Uma

பாட்ஷாவை தொடர்ந்து கமலின் அடுத்த ரிலீஸ்

பாட்ஷாவை தொடர்ந்து கமலின் அடுத்த ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vetri vizha22 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட படம் பாட்ஷா.

இப்படத்தை மெருக்கேற்றி மீண்டும் திரையிட உள்ளனர்.

அண்மையில் நடந்த இதற்கான ப்ரிமீயர் ஷோவில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல், பிரபு குஷ்பூ இணைந்து நடித்த வெற்றி விழா படம் இதுபோல் மெருகேற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

பிரதாப் போத்தன் இப்படத்தை இயக்க, இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பிரபு தயாரித்திருந்தார்.

Kamalhassans Vetri Vizha re release

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன்…’ சரத்குமார் சவால்

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன்…’ சரத்குமார் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarath kumar speech about rajinikanth and politicsதமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக  ‘துக்ளக்’ ஆண்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினி பேசியதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசியதாவது…

“ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர். மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அதனை நான் ஒப்புக் கொள்கிறேன்.

கருத்துக்கள் சொல்லும்போது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் சொல்லிவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருப்பதை கருத்துக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த வகையான அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் குறித்து கருத்து கூற அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

தேவைப்படும்போது கர்நாடகாவில் வேறொரு கருத்து சொல்வது, இங்கு வேறொரு கருத்து சொல்வது என இருக்கக் கூடாது.

அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் எதிர்க்கும் முதல் ஆளாக நான் நிற்பேன்.” என்றார்.

சரத்குமாரின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து, அவரது கொடும்பாவியை எதிர்த்து வருகின்றனர்.

Sarath kumar speech about Rajinikanth and politics

கேரளாவில் பட்டைய கிளப்ப பைரவா வகுத்த திட்டம்

கேரளாவில் பட்டைய கிளப்ப பைரவா வகுத்த திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaaவிஜய்யின் பைரவா உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் கேரளாவில் நடைபெறும் தியேட்டர்கள் உரிமையாளர்கள் பிரச்சினையால் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பைரவா படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள Ifar International தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பைரவா படம் விநியோக குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இப்படம் மொத்தம் 302 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு, 230 தியேட்டர்களில் வெளியாகி இருந்த இப்படம், தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பட்டைய கிளப்ப தயாராகிவிட்டனர்.

ரஜினிக்கே பன்ச் டயலாக் பேசிய காட்டிய விஜய்

ரஜினிக்கே பன்ச் டயலாக் பேசிய காட்டிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijayஆனந்த விகடன் விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருகான விருதை அறிவிக்க விஜய்யை விழாக்குழுவினர் அழைத்தனர்.

கபாலி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரஜினிகாந்த் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது ரஜினி காலில் விழுந்து விஜய் ஆசிபெற்றார்.

அதன்பின்னர் விஜய் பேசியதாவது.. ‘டானுக்கு ஒரு பில்லா, மாஸுக்கு ஒரு பாட்ஷா, கிளாஸுக்கு ஒரு கபாலி’ என்று பன்ச் டயலாக் பாணியில் பேசினார்.

அவர் சொல்ல சொல்ல அந்த விழா அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.

Vijay speech about Rajinikanth at Vikatan Awards

‘நடிகைகளுக்கு ஒண்ணுன்னா மட்டும் வந்துடுவாங்களே…’ ஜிவி.பிரகாஷ்

‘நடிகைகளுக்கு ஒண்ணுன்னா மட்டும் வந்துடுவாங்களே…’ ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஜல்லிக்கட்டை இந்தாண்டு நடத்திட வேண்டும் என இயக்குனர் கவுதமன் போராட்டம் நடத்தி வருகிறார்.

அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே அவருக்கு ஆதரவாக கமல் மற்றும் ஜிவி. பிரகாஷ் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan ‏@ikamalhaasan
தம்பி கவுதமன் நடத்துவது போராட்டம். புரிந்தும் துணிந்தும் செய்த செயல் சட்டம் ஒழுங்கு குலையாமலது சிறக்கட்டும். மற்றபடி கண்ணியம் காப்பது கடமை

G.V.Prakash Kumar ‏@gvprakash 9m9 minutes ago
இயக்குநர் கவுதமன் மீது தடியடி கண்டிக்கதக்கது.. அவர் மட்டுமல்ல ஜல்லிக்கட்டு ஆதரவாக இருக்கும் எவர் மீது கைவைத்தாலும் கண்டிக்கிறேன்.

G.V.Prakash Kumar ‏@gvprakash 7m7 minutes ago
நடிகைகளுக்கு ஒண்ணுன்னா வருவாங்க.. ஒரு இயக்குனருக்கு வரமாட்டார்களா.. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் என் குரல் உண்டு.

GV Prakash statement about Jallikattu Haters

More Articles
Follows