இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் உறுதியாக இருப்பேன். இஸ்லாமியர்களிடம் கமல் உறுதி

Kamal Haasanமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரை இன்று சந்தித்து பேசினார்.

சென்னையில் உள்ள (கேரள) மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியை கமலிடம் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு தங்கள் ஆதரவு வேண்டுமென்று கமலை கேட்டுக் கொண்டனர்.

எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாகதான் இருப்பேன் என அவர்களிடம் கமல் உறுதி கூறினார்.

Overall Rating : Not available

Latest Post