தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த சில வருடங்களில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் உள்ளிட்ட படங்களுக்கு ஜிப்ரான் இசையைமைத்திருந்தார்.
தற்போது கமல் தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கும் இவரேதான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித்தை ஜிப்ரான் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளதாவது…
அதில், “தல அஜித்துடன் அவரது உண்மையான ரசிகன்!.. அவரைப் பற்றி பலரும் சொல்வதைக் காட்டிலும் மேலானவர்.
அவர் சொன்னதிலேயே, ஒரே ஒரு வார்த்தை மட்டும் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் அது தான் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ . நன்றி, இனிய ஞாயிறு” என குறிப்பிட்டுள்ளார்.
Music Composer Ghibran reveals Ajith wanted to work with him soon
